“Café coffee day” அதிபர் சித்தார்த்தாவின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

“Café coffee day” அதிபர் சித்தார்த்தாவின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த்தா நேற்று இரவு மாயமான நிலையில், நேத்ராவதி ஆற்றில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வரும் கஃபே காபி டே நிறுவனம் முதல்வர் இவர் தான். இளம் தொழிலதிபர் என்கிற பெருமைக்கு உரியவரும் கூட. ஆனால் இவர் தற்போது எடுத்திருக்கும் முடிவு தான் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெற்றவர்.

இந்நிலையில் அண்மை காலமாக இவரது நிறுவனத்தில் போதிய லாபம் இன்றி தொழில் நட்டத்தில் செயல்பட்டதாக கூறப்பட்டது. தொழில் ஏற்பட்ட நட்டம் காரணமாக பங்குச் சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தன. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சித்தார்த்தா(siddhartha) நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது காரைவிட்டு இறங்கிய அவர், 5 நிமிடத்தில் திரும்பி வருவதாக கூறி நடக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கார் ஓட்டுநர் குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Twitter

அதன் அடிப்படையில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து சித்தார்த்தா(siddhartha) தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர், மீட்புப் படையினர் ஆற்றில் தேடுதல் வேட்டையை தொடங்கினர். நேற்று அதிகாலையில் தொடங்கிய தேடுதல் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை சித்தார்த்தாவின்(siddhartha) உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சமீப காலமாக தொழிலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சித்தார்த்(siddhartha) தனது கஃபே காபி டே நிறுவனத்தை பிரபல பன்னாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் (திங்கள் கிழமை) பங்குச் சந்தை வழக்கத்திற்கு மாறாக பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்தார். மேலும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவியத் தொடங்கி உள்ளனர்.

 

 

இந்நிலையில், இறுதியாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில், “37 ஆண்டுகால கடுமையான உழைப்பின் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை உருவாக்கினேன். இருப்பினும் ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன்.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்த வேண்டும என்று விரும்புகிறேன். ஊழியர்கள் அனைவரும் மனம் தளராமல் புதிய நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் நான் தான் பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றியிருந்தால் மன்னித்துவிடுங்கள். நீண்டகாலமாக நான் போராடி வருகிறேன். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் பின்னரும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன்.

யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அனைத்து தவறுகளும் என்னுடையது தான். இந்த கடிதத்துனுடன் எனது சொத்து மதிப்பு ஆவணங்களையும் இணைத்துள்ளேன். ஒரு நாள் அனைவரும் என்னை புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Twitter