தவறாக நடந்ததாக மீரா குற்றச்சாட்டு, கண்ணீர் விட்ட சேரன் : பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

தவறாக நடந்ததாக மீரா குற்றச்சாட்டு, கண்ணீர் விட்ட சேரன் : பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

பிக் பாஸ் (bigg boss) வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கிராம வாழ்க்கை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு வேறு கிராமங்களாக பிரிந்து சண்டை போட்டு வருகின்றனர். இவர்களுக்கு சேரன் ஒரு நாட்டாமையாகவும், மதுமிதா மற்றொரு ஊர்த்தலைவராகவும் உள்ளனர். இரண்டு ஊர்க்காரர்களும் தினமும் ஏதாவது பிரச்சினை செய்து நாட்டாமையை கடுப்பேற்றியும் மறுபுறம் வேடிக்கையான டாஸ்க் கொடுத்து மகிழ்ந்தும் வருகின்றனர். 

கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

அதிகம் பேசாத சேரனும், மவுன விரதம் முடிந்தாலும் மவுனத்தை கடைப்பிடிக்கும் மதுமிதாவும் இரு ஊரின் நாட்டாமைகள். ஆனால் டாஸ்க்குன்னு வந்துட்டா விட்டுடக் கூடாதுன்னு மதுமிதா முழு நாட்டாமையாக மாறி விடுகிறார். ஒரு கிராமத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது பாத்ரூம். இதனை பயன்படுத்த மற்றொரு கிராமத்தினருக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. மற்றொரு கிராமத்தினரும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிச்சனை பயன்படுத்த டாஸ்க் கொடுக்கின்றனர். அதன்படி சில வேடிக்கை டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி குதூகலமாக சென்றது. 

இதனிடையே மதுமிதா பாத்ரூம் செல்வதற்காக கையில் பானையுடன் வந்தார். அப்போது கவின், சாக்ஷி, சாண்டி ஆகியோர் மதுமிதா முகத்தில் பேஸ்ட்டை தடவ சொல்லி டான்ஸ் ஆட கூறினர். மதுமிதா தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியும் சாண்டி மாரியம்மா பாடலுக்கு ஹெவியாக டான்ஸ் ஆட வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார். அப்போது முகம் எரியுது என தவித்த மதுமிதாவை பார்த்த சாண்டி சிரித்தார். இதனால் உச்சபட்ச கோபமடைந்த மதுமிதா, உடம்பு சரியில்லை என்று கூறியும் இப்படி டாஸ்க் கொடுக்கிறீர்கள் என கோவமாக பேசினார்.

இதனால் சாண்டிக்கும் மதுமிதாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மதுமிதா, அடுத்தவங்க அழறது பார்த்து சிரிக்கிறவன் ஆம்பளையா.. த்தூ.. கருமாந்திரம் என்று கூறினார். சக ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை சமாதானம் செய்தனர். பின்னர் சாண்டியும், கவினும் மதுவிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் நேற்று நடந்த எபிசோட்டில் மீரா மிதுன் ஒரு மிகப்பெரிய குண்டைப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

மீராவை இழுத்து அருகே அமர்த்திய சரவணன்.. கொதிக்கும் சேரன்.. இன்றைய Bigg Boss !

நேற்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் சேரன், மீராவை தூக்க வேண்டும் என கூறப்படுகிறது. அப்போது சேரன் என் வயிற்றில் தவறான என்னத்துடன் கைவைத்து கீழே தள்ளினார் என்று சேரன் மீது பழி போட்டார் மீரா. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேரன், ஹவுஸ்மேட்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு நான் இனி யாரிடமும் பேசவிரும்பவில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். பின்னர் உறங்கும் அறைக்கு சென்று நான் 2 பெண் குழந்தைகள் வைத்திருக்கிறேன். என் மீது இப்படி பழி சுமத்தினால் அவர்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய படி கதறி அழுகிறார். இதை பார்த்து ஹவுஸ்மேட்ஸ்களும் கண்ணீர் விட்டப்படி நிற்கின்றனர்.

மீரா மீதுன் பிக் பாஸ் (bigg boss) வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே சேரனை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்கிறார் என்று குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சேரன் மீது மீரா தேவையில்லாமல் பழி போடுவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஊர் திருவிழா நடத்த டாஸ்க் கொடுக்கப்பட்டதால் பிக் பாஸ் வீடு மீண்டுமாக சகஜ நிலைக்கு வந்தது. ஊர் திருவிழாவில் சேரன் கவுரவமாக உட்கார்ந்து இருக்க மைனர் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அனைவரும் குத்தாட்டம் போட்டனர். மது, சாக்ஷ, லாஸ்லியா, அபி, தர்ஷன் என அனைவரும் மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடினர். 

யார் இந்த மீரா மிதுன் : மிஸ் சவுத் இந்தியா பட்டம், பண மோசடி வழக்கு.. நடந்தது என்ன?

பிக் பாஸ் (bigg boss) வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே மொழியை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் அனைவரும் தமிழ் மொழி பேசுவார்கள். இத்தனை நாட்களாக பிக் பாஸ் இல்லத்தில் காதல் பிரச்சனை, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்ததால் எழுந்த பிரச்சனைகள் தான் அதிகம். முதன்முறையாக பிக் பாஸ் வீட்டில் மொழி, கலாச்சார பிரச்சனை எழுந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில், நடிப்பிற்கு மொழி தேவையில்லை. ஊமையாக இருக்கும் எத்தனையோ பேர் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என அனைத்து ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையிலும் மீரா கோவமாக கூறுகிறார்.

அதற்கு இங்கு கலாச்சார வேறுபாடுகளை கொண்டு வர வேண்டாம் என கூறிய சாக்ஷி, இந்த விஷயங்கள் குறித்து இனி பேச வேண்டாம் என்று ஆதங்கமாக பேசி விட்டு செல்கிறார். அதற்கு மீரா அனைவரும் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தொடர்ந்து ஐந்து வாரங்களாக என்னை நாமினேட் செய்கிறீர்கள் நான் எந்த தவறும் செய்யாத போதும் நான் அதுகுறித்து உங்களிடம் கேள்வி எழுப்பினேன்னா என மிதுன் வேறொரு விஷயத்தை பேசுகிறார். இறுதியில் ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் அழுகிறார்கள். என்ன தான் பிரச்சனை என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

இரண்டாவது புரோமோவில் கிராம வாழ்க்கை டாஸ்க்கில் யார் நன்றாக செயல்பட்டனர் என பேசிக்கொண்டிருக்கின்றனர். அதில் யாரோ மீராவின் பெயரை சொல்ல, மது குறுக்கிடுகிறார். கேரக்டரை சுவாரஸ்யமாக செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பெர்சனலாக சில விஷயங்களை மீரா எடுத்துக்கொண்டார், அதனால் மீரா பெயரை எப்படி நீங்கள் சிறப்பாக செய்தார் என கூறலாம் என ஆமோதிக்கிறார். மேலும் சேரன் உடனாக பிரச்னை குறித்து பேச வேண்டாம், அப்போது அனைவருமே டாஸ்க்கில் இருந்ததால். ஆனால் இந்த பிரச்னையை தவிர்த்து மற்ற சில இடங்களிலும் மீரா தேவையில்லாமல் பிரச்சனை செய்தார் என மது நேரிடையாகவே தெரிவிக்கிறார்.

அப்போது அங்கு மீராவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுவில் பேச்சை கேட்டு கோபமடைந்த மீரா எழுந்து, மது சிறப்பாக செய்தார் என அனைவரும் எண்ணினால் அவருக்கே அந்த பட்டத்தை கொடுத்து விடுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அப்போது சேரன் நுழைந்து கண்டிப்பாக கொடுப்போம், மது நன்றாக தான் விளையாடினார் என கூறுகிறார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கேரக்டரில் இருந்து யார் வெளியே வந்தார்கள் என்று சாக்ஷி மீராவிடம் கோவமாக கேட்கிறார். அதற்கு நான் இரண்டு நிமிடம் பேசட்டுமா என மீரா, சாக்ஷியிடம் கேட்கிறார். ஆனால் அவரை பேசவிடாமல் தொடந்து பேசும் சாக்ஷி கலாச்சார வேறுபாடுகளை டாஸ்கில் கொண்டு வரக்கூடாது, அதை நினைவில் வைத்துக்கொள் என்று கூறிவிட்டு செல்கிறார். மேலும் எல்லார் முன்னிலையிலும் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது என்று சாக்ஷி கூறுகிறார். இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என தோன்றுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.