தூங்காநகரம் மதுரையின் சிறப்பம்சங்கள் : சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஒரு பார்வை!

தூங்காநகரம் மதுரையின் சிறப்பம்சங்கள் : சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஒரு பார்வை!

கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை (madurai). மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுதவிர வண்டியூர் மாரியம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல் படை வீடு, அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ளன. மதுரை நகரில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களாக திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் ஆகியவை உள்ளன. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பழனி, கொடைக்கானல் ஆகிய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. இவை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

twitter

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவில். குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட  இந்த கோவிலானது திருமலை நாயக்கர் காலத்தில் முடிவு பெற்றது. மதுரை நகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள நான்கு வெளி வீதிகள் தான் நகரின் அன்றைய எல்லையாக இருந்தது. தென்னிந்தியாவின் பழம்பெரும் புராதனக் கோவில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இந்த கோவிலில் பொற்தாமரை குளம் உள்ளது. 

திருச்சி சுற்றுல்லா ஸ்தளம் - உச்சி பிள்ளையார் கோயிலின் சிறப்பு!

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீனாட்சி அம்மன் கோவில். 

அழகர் கோவில்

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும் பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியை தரக் கூடியதாக உள்ளது. பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அருவியில் விழும் மூலிகை நீரில் தீர்த்தமாடியை பின்னரே கோவிலுக்குள் செல்கின்றனர். அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரை திருவிழா. சித்திரை திருவிழாவின் போதுபெருமாள் கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

மதுரையிலிருந்து (madurai) 21 கி.மீட்டர் தொலைவில் அழகர் கோவில் உள்ளது. இங்கு செல்ல மிகச் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

twitter

திருமலை நாயக்கர் மகால்

திருமலை நாயக்கர் மகால் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால்  17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கட்டிடம் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

காந்தி மியூசியம்

1957ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது.சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள  இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்கு காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றை படம்பிடித்து காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் (madurai) இருந்து சென்னை செல்லும் சாலையில் காந்தி மியூசியம் அமைந்துள்ளது.  

திருச்சியில் ஒரு நாள் - வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காண தவறாதீர்கள்!

twitter

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்கின்றது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. 

மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. 

பார்ப்பவர்களை வுவாவ் என சொல்ல வைக்கும் 6 அற்புதமான இரகசிய மேக்கப் குறிப்புகள்!

வைகை அணை

வைகை அணை சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த அணை மதுரை மாவட்டம் தமிழக மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணையானது காண்பவர் மனதுக்கு இதம் தரக் கூடியதாக உள்ளது. மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும்

மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது. 

twitter

கொடைக்கானல்

மதுரையிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தேக்கடி உள்ளது. மதுரை மாவட்டத்தில் முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் (7000 அடி உயரம்). மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உண்டு.  ரயில் வசதியும் உள்ளது.

இராஜாஜி பூங்கா

மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய இராஜாஜி  பூங்கா. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பங்களுடன் பொழுதுபோக்கை களிக்கும் இடமாக இராஜாஜி பூங்கா திகழ்கிறது. ராஜாஜி பூங்காவை அழகுச் சேர்க்கும் விதத்தில் மீன் அருட்காட்சியகம் ஒன்று பூங்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. அதில் நம் கண்களை கவரும் வகையில் அழகிய வண்ணமயமான மீன்களும், அவை பார்ப்பதற்கு வித்தியாசமான விதத்தில் அமைந்திருக்கும். 

மதுரையிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கோரிப்பாளையத்திலிருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய பூங்காதான் இராஜாஜி பூங்கா ஆகும். 

twitter

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலை குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும்.  இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது. 

மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.