இந்தியாவில் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரம்மியமான இடங்கள்!

இந்தியாவில் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரம்மியமான இடங்கள்!

சுற்றுலா செல்வது அனைத்து தரப்பினருக்கு பிடித்தமான ஒரு விஷயம். அதுவும் மழைக்காலத்தில் (monsoon) செல்ல வேண்டும் என்றால் குதூகலத்திற்கு பஞ்சம் இருக்காது. மழைகாலத்தில் நிலவும் ரம்மியமான காலநிலையில் மனத்திற்கு பிடித்த இடங்களுக்கு செல்ல யாருக்கு தான் பிடிக்காது. இந்தியாவில் மழை காலத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் குறித்த விவரங்கள் உங்களுக்காக கொடுத்துள்ளோம். மழைக்காலத்தை வரவேற்க தயாராகுங்கள்! 

pixabay

கூர்க்

கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் விளங்குகிறது. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கூர்க் பகுதியில் பலவிதமான வரலாற்று சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், புராதன கோயில்களும், பூங்காக்களும், நீர்வீழ்ச்சிகளும் சரணாலயங்களும் போன்ற எண்ணற்ற எழில் வாய்ந்த இடங்களும் ஸ்தலங்களும் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்களை கவரும் வகையில் உள்ளது.

இந்த மழைக்காலத்தில் உங்கள் வழக்கமான மேக்கப் கரையாமல் இருக்க சில ரகசிய டிப்ஸ் !

ஷில்லாங்

ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங், இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது. கடல் மட்டத்திற்கு மேல் 1496 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் ஷில்லாங் மிகவும் நூதனமான கலாச்சாரங்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் மலைவாழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இங்குள்ள ‘மாவ் சிண்ட்ராம்’ குகைகள் சிவலிங்க வடிவில் உள்ளன. அருகிலிருக்கும் நீர்வீழ்ச்சிகளிள் சத்தம் இந்தக் குகைகளில் எதிரொலிப்பதை பார்க்க பரவசம் உண்டாகும்.

Also Read About பருவமழை காதல்

மூணாறு

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மூணாறு மூன்று மலைத்தொடர்களின் சங்கமத்தில் அமைந்திருக்கும். கடல் மட்டத்திற்கு மேலே 1,600 கி.மீ. இருக்கும் இந்த மலைவாசஸ்தலம் தென்னிந்தியாவில் முன்னாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. மூடுபனியில் உறைந்த மூணாறை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம்.

pixabay

ஸ்ரீநகர்

ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. 

லடாக்

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில் கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். மழைக்காலத்தில் இங்கு சென்றால் மழையுடன் (monsoon) சேர்த்து இயற்கை அழகையும் ரசிக்கலாம். 

pixabay

உதய்பூர்

ஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. நேரம் இருப்பின் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பல அருங்காட்சியகங்களுக்கும், காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்யலாம். மழைக்காலத்தில் இப்பிரதேசம் மிகக்குறைந்த அளவு மழையையே பெறுகிறது. ஆகவே இங்கு சுற்றுப்புறச்சூழலில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். குளிர்காலத்தில் உதய்பூரின் சீதோஷ்ணநிலை மிக இனிமையாக காணப்படுவதோடு சுற்றுலாவுக்கும், நகரத்தை ரசிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது. 

ஆலப்புழா

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, படகு வீடுகள், கடல் என்று கேரளத்தின் மொத்த அழகையும் கொண்டது. எந்த ஒரு மனிதனும் இவ்விடத்தின் அழகை ரசிக்காமல் இருக்க இயலாது. ஆலப்புழாவின் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் இந்தப் படகுப் போட்டிதான். கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து ஆகஸ்ட் மாதத்தில் ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும். கேரளாவுக்குச் சுற்றுலா செல்ல தக்கசமயம் இதுதான். ஆலப்புழா மட்டுமல்ல, கேரளத்தில் எங்கு நோக்கினாலும் பசுமை போத்தியிருக்கும் காலம் இது. விழாக் காலத்தின் தொடக்கமும்கூட என்பதால் கேரளா செல்ல தயாராகுங்கள் மக்களே!

மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி : அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்!

கோவா

இரவு நேர கூட்டத்திற்கும், மதுவுக்கும், சூதாட்டத்திற்கும் பெயர் போனது என்று மட்டுமே நமக்கு கோவா குறித்து தெரியும். ஆனால் கோவாவின் கடல் அழகை நேரில் கண்டு ரசித்தால் மட்டுமே அதன் அருமை புரியும். தர்மஷாலா இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் மழைக்காலத்தில் (monsoon) சென்றால், மழை சாரலில் இயற்கையை ரசிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

pixabay

ஆலி

'இந்தியாவின் ஸ்விஸ் ஆல்ப்ஸ்' என்று வருணிக்கப்படும் ஆலி நகரம் கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ளது. அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோ மீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13,500 அடி உயரத்தில் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

மாவ்லினோங்

மாவ்லினோங்கில் உள்ள தெருக்களைப் பார்த்தால் அவை ஓர் ஓவியத்திலிருந்து நேரடியாக வெளியே வந்தது போல் தெரியும். வானுயர்ந்த காட்சி என்று அழைக்கப்படும் 85 மீட்டர்கள் உயரமான பிரம்பு மாடியை இந்த கிராம மக்கள் கட்டியுள்ளார்கள். இங்கிருந்து ஒரு புறம் இந்த கிராமத்தின் எழிலையும் மறுபுறம் வங்கதேசத்தையும் காணலாம். கிராமத்தை சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருப்பதால் மழை பெய்யும் காலங்களில் இயற்கை எழில் கொஞ்சும்.  மாவ்லினோங் கிராமம் ஷில்லாங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலேயும் இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் சலசலக்கும் நீர் வீழ்ச்சிகளும் உள்ளது. 

கொடைக்கானல்

7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டது. மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது. குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மழை சாரலில் கொடைக்கானலுக்கு சென்றால் திரும்பி வர மனம் வராது என்பது நிதர்சமான உண்மை.

pixabay

சிரபுஞ்சி

சிரபுஞ்சி இந்தியாவில் அதிக மழையைப் பெறும் பகுதிகளில் ஒன்றாகும். மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, நோகலிகை நீர்வீழ்ச்சி, டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி ஆகியவை மலைகளின் வழியே புகுந்து பள்ளங்களில் விழும் காட்சி நம் நினைவை விட்டு அகலாது நிலைத்திருக்கும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள் மழைக்கால சுற்றுலாவை இனிதாக்கும். ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம்.

குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

வயநாடு

கடவுளின் தேசம் என்று அன்புடன் அழைக்கப்படும் கேரளாவில், ரசிப்பதற்கு ஏராளம் உள்ளன. அதில் மலைவாசஸ்தலமான வயநாடு கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உச்சியில் ஏராளமான டிரெக்கிங் முகாம்கள் உள்ளன. உச்சியிலிருந்து ஏரியை பார்ப்பது, மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக உள்ளது. நீலிமலையில் அமைந்துள்ள கண்கவர் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் ,வயநாட்டையும் இணைக்கும் முக்கிய சாலையிலிருந்து 2 கிமீ நடந்து செல்லும் பாதையில் வயநாட்டை சென்றடையலாம்.

pixabay

ஓர்ச்சா

பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது. இதனால் மழைக்காலத்தில் இனிமையான கால நிலை நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.