பெண்களை அழகாகக் காட்ட கண்கள் இருக்கிறது உதடுகள் இருக்கிறது முகம் இருக்கிறது என்று இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பெண்ணை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நினைக்க வைப்பது அவளது கூந்தல் அழகு தான்.
கூந்தல்தான் பெண்களின் முதல் செக்ஸ் அப்பீல் என்று சொன்னால் அது மிகையில்லை. இப்படி பெண்களின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய கூந்தல் பற்றியும் அதில் நீங்கள் என்னவிதமான அலங்காரங்கள் செய்ய முடியும் என்பதை பற்றியும் சிறிய ஐடியாக்கள் தர விரும்புவதால் இந்தக் கட்டுரை.
கூந்தலின் வகைகள்
பெண்களின் கூந்தல் பொதுவாக நான்கு வகைப்படுகிறது. எல்லா கூந்தலுக்கும் ஒரு ஸ்டைல் ஒத்து வராது. ஆகவே நான்கு விதமான கூந்தல் வகைகள் என்னென்ன என்பதை முதலில் பார்ப்போம். அதன் பின்னர் அதற்கான தனிப்பட்ட ஹேர்ஸ்டைல்களை (hairstyle) எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
- நேரான கூந்தல்
- சுருள்சுருளான கூந்தல்
- அலைஅலையான கூந்தல்
- ஃபிரிஸ்ஸி கூந்தல்
நேரான கூந்தலுக்கான ஹேர்ஸ்டைல்கள்
நேரான கூந்தல் கொண்டவர்கள் எப்போதும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்த விதமான ஹேர்ஸ்டைலையும் பின்பற்ற முடியும். எந்த விதமான ஹேர் ஸ்டைலும் அவர்களுக்குப் பொருந்தும்.
நேரான நீளமான கூந்தல்
நேரான நீளமான கூந்தல் கொண்டவர்கள் “Y” பின்னலை போட்டால் மிக அழகாக இருக்கும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
step 1. இது செய்வதற்கு சுலபமானது. சிறிய நேர் வகிடு எடுக்கவும்.
step 2. அதன் பின்னர் வலப்புறம் புருவம் முடியும் இடத்தில் இருந்து முடியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பின்னவும்.
step 3. அதேபோல் இடப்புறமும் செய்ய வேண்டும்.
step 4.அதன் பின்னர் இரண்டு பக்க முடிகளையும் பின்புறமாக ஒன்றிணைத்து பின்னல் போட “Y” வடிவப் பின்னல் கிடைக்கும். பார்ப்பதற்குத் தளர்வாக அழகாயிருப்பதால் நீங்கள் பளிச்சென தனித்து தெரிவீர்கள்.
க்யூட் லூஸ் ஹேர்ஸ்டைல்
உங்கள் கூந்தல் நீளமாக இருக்கும்போது அதனை நீங்கள் எந்த மாதிரி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். அதில் ஒரு அழகிய ஆப்ஷன்தான் லூஸ் ஹேர்ஸ்டைல் என்பது.
இதனை செய்ய உங்கள் கூந்தல் நேராகவும் ஸ்மூத்தாகவும் இருக்கவேண்டும்.
step 1. முன் நெற்றி முடிகளை பாதி கட் செய்து விட வேண்டும்.
Step 2. பின்புற முடிகளின் இறுதியில் வட்ட வடிவம் வருமாறு பவுன்சி லுக் வரும்படி ஹேர் கர்லர் மூலம் சீவிக் கொள்ளுங்கள்.
Step 3. பின்னர் நெற்றியின் வலது புறத்தில் இருந்து அடர்த்தியான ஒரு பின்னலைப் போட வேண்டும்.
Step 4. மற்ற எல்லா முடிகளையும் தளர்வாக விடவும்.
இப்படி செய்தால் உங்கள் ஹேர்ஸ்டைல் மூலம் நீங்கள் மற்றவரை ஈர்ப்பீர்கள்.
பிளைட் ஹேர்ஸ்டைல்
பிளைட் ஹேர்ஸ்டைல்கள் உங்கள் நேரான நீளமான முடியை மிகவும் நேர்த்தியாகக் காட்டக் கூடியவை. உங்கள் கூந்தல் ஷைனிங் ஆக இருந்தால் மேலும் புதிய அழகுடன் நீங்கள் வித்யாசமான fairy தோற்றத்தை அடைவீர்கள்.
Step 1. மொத்த முடியையையும் நன்கு வாரிக் கொள்ள வேண்டும்.
Step 2. நடு வகிடு எடுத்து இரண்டாகப் பிரிக்கவும்.
Step 3. இரண்டையும் நன்கு வாரி இரண்டு பக்கமும் போனி டைல் போடுவது போட்டு கால் வாசி முடியை நிறுத்தி வைக்க வேண்டும்.
Step 4. பின்னர் அதனை அழகிய ரிப்பன் போல இருபக்கமும் அடர்த்தியாக்கி விட்டு நடுவில் ஒரு பின்னலை போடுங்கள். ஸ்டைலாக இருக்கும். இதனை ஒரு பக்கமாகவும் செய்யலாம்.
லாங் லேயர்ட் ஹேர்ஸ்டைல்
இது நேரான நீளமான கூந்தலுக்கான அழகான ஹேர்கட் .
Step 1. உங்கள் முடியை லேயர்களில் வெட்டுவார்கள்.
Step 2. இறுதியை சுருட்டி விட்டு அழகிய ஃபைனல் டச் கொடுப்பார்கள்.
Step 3. உங்கள் முடியை விருப்பப்பட்டால் மேற்கண்ட பெண் போல பலநிறங்கள் சேர்த்துக் கொண்டால் மேலும் அழகாகத் தெரியும்.
லாங் ஹேர் கர்ல் லுக்ஸ்
இந்த வகையான ஹேர் ஸ்டைல் உங்கள் நேரான முடியை மேலும் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் காட்டும்.
Step 1. உங்கள் நேரான கூந்தலை நடு முதுகுவரை அதன் இயல்பிலேயே விட்டு விட வேண்டும்.
Step 2. அதற்குப்பின்பாக உள்ள முடியை லேயர்களாகப் பிரிக்கவும்
Step 3. அதனை லேயர்களாக வெட்டி விடவும்
Step 4. ஹேர் கர்லரை உபயோகித்து U வடிவில் லேயர்களை சுருட்டவும்.
இப்போது அழகிய ஸ்டைலான கூந்தல் உங்களை பெருமிதப்படுத்தும்
சுருள் முடிக்கான ஹேர்ஸ்டைல்கள்
சுருள் முடி என்பது பார்ப்பதற்கு அழகானது என்றாலும் பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றுதான். அத்தகைய சுருள் முடிக்கான சில ஹேர்ஸ்டைல்கள் உங்களுக்காக.
சிறிய வகை சசுருள் முடிக்கான ஹேர்ஸ்டைல்
உங்கள் முடி சிறியதாக இருந்தால் பாப் கட்டிங் போல ஒன்றை செய்தால் நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்.
உங்கள் முன்பக்க முடியின் நீளத்தை கொஞ்சமாகக் குறைத்து பின்பக்க முடியின் நீளத்தை அதிகமாக குறைக்க (cut) செய்ய வேண்டும். அப்படி செய்வதால் உங்கள் முடியின் தன்மைக்கு நீங்கள் கெத்தான பெண்மணி போன்ற தோற்றமளிப்பீர்கள்.
ஷார்ட் அண்ட் சாப்பி பாப் ஹேர் ஸ்டைல்
சிறிய வகை சுருள் முடி கொண்டவர்கள் கீழ்கண்டவாறு தங்கள் முடியை வெட்டிக் கொள்ளலாம்.
ஒரு வகையான பாப் கட்டிங் வகையை சேர்ந்தது.
இதன் பெயர் டீப் ஒயின் அண்ட் கேரமெல் என்பதாகும்.
Step 1. உங்கள் கூந்தலை லேயர்களாகப் பிரிக்க வேண்டும்.
Step 2. அடர் ஒயின் நிறம் பூச வேண்டும்.
Step 3. பின்னர் அந்த முடிகளை செங்குத்தான லேயர்க்களாக்கி அதனை சுருளாக செய்ய வேண்டும்.
Step 4. வித்யாசமான ஹேர்ஸ்டைலில் உங்கள் அருகில் இருப்பவரைக் கவருங்கள்.
ஷார்ட் கர்லி ஹேர்ஸ்டைல்
சுருளான கூந்தல் என்பது கடவுள் தந்த வரம். அதனை நீங்கள் அற்புதமாக மாற்றி கொள்வதன் மூலம் உங்கள் அழகை மேம்படுத்தலாம்.
இதனை செய்ய நீங்கள் அதிகம் ப்ரயத்தனப் பட வேண்டாம்.
Step 1. உங்கள் கூந்தலை நன்கு நீரில் அலசுங்கள்.
Step 2. அதனை ஒரு சாடின் துணியில் wrap செய்யுங்கள்.
Step 3. அடுத்த நாள் காலையில் உங்களுக்கான ஹேர்ஸ்டைல் தயாராக இருக்கும்.
நீளமான சுருள் முடி ஹேர்ஸ்டைல்
கொஞ்சம் நீளமான சுருள் முடி உள்ளவர்கள் இந்த வடிவத்தை முயற்சி செய்யலாம்.
Step 1 ஸ்கால்ப் பகுதிகள் சுருள்கள் அப்படியே இருக்க வேண்டும்.
Step 2 உங்கள் மற்ற கூந்தல் சுருள் சுருளாக நீளமாக இருக்க வேண்டும்.
Step 3 சுருள்களை நீளமாக்கி பின்னல் போட வேண்டும்.
மேற்கண்ட வடிவமும் அழகும் கிடைத்து விடும்.
ஸ்ட்ரைட் ஷார்ட் ஹேர்ஸ்டைல்
சுருட்டையான கூந்தல் கொண்டவர்களுக்கான அடுத்த ஹேர்ஸ்டைல் இதுதான்.
உங்கள் கூந்தல் அதிக அடர்த்தியாகவும் சுருளாகவும் இருக்கும்போது உங்களால் பராமரிக்க முடியாமல் போகலாம்.
Step 1. அந்த சமயங்களில் அதிகமான முடிகளை ஒன்றாக்கி தலையில் பின் போடுங்கள்.
Step 2. நீங்கள் மடக்கி பின் போடுவது நீட்டாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்கவும்.
உங்கள் அழகிய தோற்றம் இப்போது தயார்.
அலைஅலையான கூந்தல்
அலைஅலையான கூந்தல் என்பது சுருள் முடியை விட சற்று நீளமான கர்ல்கள் இருக்கும். பார்ப்பதற்கு அலைகள் போலத் தோற்றமளிக்கும்
ஸ்ட்ரீக்ஸ்
அலைஅலையான கூந்தலுக்கு என்றே அறிமுகமான ஹேர்ஸ்டைல்தான் ஸ்ட்ரீக்ஸ் என்றாலும் சில சமயம் இதனை நேரான கூந்தல் கொண்டவர்களும் பயன்படுத்தலாம்.
Step 1 கூந்தலின் இறுதியில் இயல்பாக இருக்கும் சுருள்களை ஸ்டைல் செய்தால் அதுதான் ஸ்ட்ரீக்ஸ்.
Step 2 ஹேர் கர்லர் மூலம் இந்த சுருள்களை நீங்கள் உருவாக்கலாம்.
Step 3 விருப்பம் இருந்தால் ஹைலைட் நிறங்களை ஆங்காங்கே சேர்க்கலாம்.
ஒரு பார்ட்டியின் மைய கவனிப்பாக உங்கள் கூந்தல் இருக்கும் மாயம் உணர்வீர்கள்
மீடியம் லேயர்ட் ஹேர்ஸ்டைல்
அலைஅலையான கூந்தல் உடையவர்கள் இந்த லேயர் ஸ்டைலை பின்பற்றலாம்.
Step 1 மீடியம் வகை கூந்தலை உடையவர்களுக்கானது.
Step 2 உங்கள் கூந்தலை லேயர்களாக்கி வெட்டுவார்கள்
Step 3 உங்களுக்கு விருப்பம் எனில் ஹைலைட் கலர்களை சேர்க்கலாம்.
மீடியம் கூந்தல் உடையவர்களுக்கானது.
மீடியம் பிஷ்டெயில் பிளைட்ஸ்
இந்த வகையான பின்னல் உங்கள் அலைஅலையான கூந்தலை அழகாக்கி கொடுக்கும்.
Step 1 இதனை ஆயிரங்கால் ஜடை என்று நம் வழக்கில் சொல்வார்கள்
Step 2 வழக்கமான பின்னல் என்றால் நாம் முடியை மூன்று பாகமாகப் பிரிப்போம்
Step 3 இந்தப் பின்னலுக்கு ஐந்து அல்லது ஆறு பாகமாகப் பிரித்து பின்னிக் கொண்டே வர வேண்டும்.
மீடியம் பிரைட் ஓபன் ஸ்டைல்
உங்கள் கூந்தலின் அழகை மேலும் அழகாகக் காட்ட இந்த ஸ்டைல் உதவுகிறது.
Step 1. உங்கள் கூந்தலை நன்கு வாரிக் கொள்ளவும்.
Step 2. காதுகளின் இருபுறம் இருந்தும் ஒரு கொத்து முடியை பிரிக்கவும்.
Step 3. அதனை சுருட்டி விட்டபடி நடுமத்திக்கு கொண்டு வந்து ரப்பர் பேண்ட் போடவும்.
Step 4. இதைப்போலவே இன்னொரு கொத்து முடியையும் செய்யவும்.
Step 5. இப்போது ரப்பர் பேண்ட் போடப்பட்ட பகுதியில் பூவினை சொருகுங்கள்.
உலகின் பேரழகியெல்லாம் வியப்பார்கள்.
வேவி மீடியம் ஹேர்டூஸ்
அலைஅலையான கூந்தலை உடையவர்களுக்கான அடுத்த ஐடியா.
இந்த ஹேர்ஸ்டைல் பார்த்தாலே ஈர்க்கும் தன்மை உடையது.
Step 1. உங்கள் அலைஅலையான கூந்தலை அழகாக லேயர் செய்வார்கள்.
Step 2. சிறிய சிறிய முடிகளை எடுத்து லேயர் செய்தபடி வர வேண்டும்.
Step 3. இறுதியில் அவைகளை ஜிக்ஜாக் வடிவில் ஒன்றிணைக்க வேண்டும்.
மீன்களின் செதில்களை போல அழகிய கூந்தல் உங்கள் வசப்படும்.
ஃபிரிஸ்ஸி ஹேர் ஸ்டைல்கள்
கொஞ்சம் வறண்ட கூந்தலை உடையவர்களுக்கான சில முக்கிய ஹேர்ஸ்டைல்கள். அதிக வறட்சி, காற்றில் பறந்தாலே நீட்டிக்கொள்ளும் முடி உடையவர்கள் கீழ்க்காணும் ஸ்டைல்களை முயற்சி செய்யலாம்.
சைடு போனி டெயில்
Step 1. உங்கள் கூந்தலை ஆங்காங்கே பிசிறு பிசிறாக விடவும்
Step 2. அத்தனை கூந்தலையும் அள்ளி எடுத்து ஒருபக்கமாக போனி டைல் போடுங்கள்.
அவ்வளவுதான் ஃபிரிஸ்ஸியிலும் பிரிஸ்கி எனப் பெயர் எடுப்பீர்கள்.
மெஸ்ஸி ஹாஃப் அப்
ஃபிரிஸ்ஸி வகை என்பதை விரும்பியே செய்து கொள்ளும் அளவிற்கு இப்போது அவை ட்ரெண்டானவை
அதில் ஒருவகைதான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சோம்பலான நேரங்களில் இருப்பதை போன்ற லுக் கிடைக்கும்
படு இயல்பான அழகிய லுக் கிடைக்கும்
Step 1. உச்சந்தலையில் உள்ள முடியை மட்டும் தளர்வான கொண்டை போல போடவும்.
Step 2. மீதமுள்ள முடிகளை நேராக வாரி விட்டு விடுங்கள்.
உங்கள் மெஸ்ஸி ஹேர்ஸ்டைல் ரெடி.
மினி சைட் பின்னல்
ஃபிரிஸ்ஸி ஹேர் உள்ளவர்களுக்கு எடுப்பான சிறப்பு தோற்றம் வேண்டும் என்றால் இவ்வகைப் பின்னலை செய்யலாம்.
Step 1. ஏற்கனவே கூறிய ஆயிரங்கால் ஜடையை சைடாகப் பின்ன வேண்டும்.
Step 2. கொஞ்சம் பிரென்ச் பிளாட்ஸ் சேர்க்க வேண்டும்.
Step 3. கூந்தலை ஒரு புறமாகக் கொண்டு வர வேண்டும்
Step 4. தலைப்பகுதியில் ஒரு புறமாக பிரென்ச் பிளாட் இட வேண்டும்.
Step 5. தலைப்பகுதி முடிந்த இடத்தில் ஆயிரங்கால் ஜடை பின்ன வேண்டும்.
உங்கள் அழகின் திமிரை அனைவரும் ரசிக்கட்டும்.
டஸில்ட் பிரைட்
ஃபிரிஸ்ஸி கூந்தலுக்கான அடுத்த ஸ்டைல் இதுதான்.
Step 1. டஸில்ட் பின்னல் என்பது உங்கள் கூந்தலில் நிறைய இடங்களை ஓபனாக விட்டு விட வேண்டும்.
Step 2. தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் சன்னமாக பின்னல் பின்னி இறுதியில் பேண்ட் போடுங்கள்.
ஃபிரிஸ்ஸி கூந்தலும் ஆங்காங்கே இடப்பட்ட பின்னல்களும் சேர்த்து ஒரு அழகுப் பெட்டகமாக உங்கள் கூந்தலை மாற்றியமைக்கும் மாயம் உணர்வீர்கள்.
கேர்ள்ஸ் பூஃபி வேஃபி ஹேர்ஸ்டைல்
கொஞ்சம் நீளமான அடர்த்தியான அலைஅலையான கூந்தல் கொண்டவர்களுக்கானது.
Step 1. உங்கள் முடியை சிக்கலின்றி நன்றாக வாரிக் கொள்ளவும்.
Step 2. உச்சியில் இருந்து உங்கள் முடியை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
Step 3. அவற்றை ஒன்றாக்க வேண்டும்.
Step 4.அப்படியே அடுத்தடுத்த முடிகளை எடுக்கவும்.
Step 5.அவைகளை ஒன்றாக்கிக் கொண்டே செல்லவும்.
Step 6.பின்னல் போல தோற்றமளிக்கும். ஆனால் நீட்டாக இருக்கும்.
Step 7. இறுதியாக பெரிய பேண்ட் மூலம் முடிச்சிடவும்.
Step 8. நடுவே அலங்கார பின்களை சொருகினால் அழகாக இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.