எப்போதும் ஃப்ரெஷ் லுக் விரும்பும் பெண்களுக்கான பாதாம் பேஸ் பேக் !

எப்போதும் ஃப்ரெஷ் லுக் விரும்பும் பெண்களுக்கான பாதாம் பேஸ் பேக் !

தன்னை ஃப்ரெஷ் ஆகவே வைத்துக் கொள்ள விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் எத்தனை முயற்சிகள் செய்தும் முகம் சில மணி நேரத்தில் வாடி விடும். இதனை தவிர்க்க இயற்கை தந்த அற்புத பொருள்தான் பாதாம் (badam).

பாதாம் பருப்பில் உள்ள ஊட்டச்சத்து பொருள்கள் முகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முகம் இறுக்கமாக இருக்க உதவுகிறது. வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்கிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை புதிய பொலிவோடு திகழ வைக்கிறது.

மேலும் அதிகமாக இருக்கும் சருமத்துளைகளை சுருங்க வைத்து உங்கள் அழகை இன்னும் அதிகரிக்கிறது. வீட்டில் இருக்கும் இரண்டே இரண்டு பொருள்களைக் கொண்டு உங்கள் முகத்தை எப்படி பொலிவாகவும் அழகாகவும் மாற்றலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

Youtube

தேவையானவை

பாதாம் பருப்பு 10
பால் 1/4 டம்ளர்

பாதாம் பருப்பை பாலில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் அதனை மிக்சியில் மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை எடுத்து தனியாக வைக்கவும். முகத்தை தூசுகள் இல்லாமல் நன்கு கழுவிக் கொண்ட பின்னர் முகத்தில் இந்த பாதாம் கலவையை பூச வேண்டும். கழுத்துப் பகுதிக்கும் சேர்த்தே பேக் போடுங்கள்.

20 நிமிடம் முகத்தை உலர விடுங்கள். பாதாமின் சத்துக்கள் முகத்தால் உறிஞ்சப்பட்ட பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்னர் டவலால் ஒற்றி எடுங்கள். அதன் பின்னர் கண்ணாடியின் மினுமினுப்பை உங்கள் முகம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.                                                                          

 

Youtube

பாதாம் ஆன்டி ஏஜிங் தன்மை கொண்டதால் முகத்தின் இளமையைத் தக்க வைக்கிறது. சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சுருக்கங்களை சரி செய்கிறது. இறந்த செல்களை நீக்கவும் இந்த பேக் உதவுகிறது. அனைவரும் ரசிக்கும் பிரகாசமான முகத்தை உங்களுக்குத் தருகிறது.

இந்த இயற்கை முறையிலான பேக் உங்கள் பதின்பருவ சருமத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது. தினமும் ஒரு முறை அல்லது வாரம் மூன்று முறை இந்த பேக் போட்டு வாருங்கள். உங்கள் முகத்தின் இளமை பூரிப்பு என்றும் பதினாறாகவே இருக்கும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                       

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன