குடும்பத்தினரின் பரிபூரண ஆதரவு கிடைக்கும் ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

குடும்பத்தினரின் பரிபூரண ஆதரவு கிடைக்கும் ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று செவ்வாய் கிழமை ஷப்தமி திதி பூரட்டாதி நட்சத்திரம் ஆனி மாதம் 24ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம் 

இன்று நீங்கள் (astro) புதிய வாடிக்கையாளர்களுடன் பணிபுரிவீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அதுகுறித்த விவரங்கள் உங்களுக்கு தெரியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும்  அவசரப்பட வேண்டாம். பின்னர் நீங்கள் அதுகுறித்து வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். இன்று சோர்வாக இருப்பீர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் அவர்களுடனான உங்கள் உறவு குறித்து கவலை தெரிவிக்கலாம். அதிக பொறுமையுடனும் இருங்கள்.

ரிஷபம் 

வேலையில் இருப்பவர்களைப் புறக்கணிக்கும் கலையை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். இன்று பெரும்பாலான நேரத்தை திட்டமிடலில் செலவிடுவீர்கள். மற்றவர்களிடமிருந்து வழிகாட்டுதல் அல்லது உதவியைப் பெறுவதற்கு தயக்கம் வேண்டாம். நீண்ட வேலை இருப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாது. தொண்டை, முதுகு மற்றும் முழங்கால்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - முதன் முதலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு : கண்கலங்கிய தர்ஷன்!

மிதுனம் 

உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்தி வரும் நீங்கள், இன்று அதிலிருந்து வெளியேறி உங்களை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களது யோசனைகளை விட முடிவுகளை விரும்புவார்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படும். குடும்ப உறுப்பினருடனான கருத்து வேறுபாடு தேவையற்ற நாடகத்திற்கு வழிவகுக்கும். சமூக வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாது. 

கடகம் 

நீங்கள் செய்து வரும் வேலையில் புதிய யோசனைகளை குறித்த தெளிவை பெறுவீர்கள். புதிய நபர்களுடன் நீங்கள் திட்டமிடுவீர்கள் அல்லது பணியாற்றுவீர்கள். இன்று புதிய நபர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள். தலைவலி அல்லது தசைப்பிடிப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் ஒருவரின் உணர்ச்சி சிக்கல்கள் உங்களை கவலையடைய செய்யும். நண்பர் ஒருவர் உங்களது ஆலோசனைகளை பெற வருவார். 

சிம்மம் 

நீங்கள் மனரீதியாக சோர்வடைவதை உணருவீர்கள். இது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக அமையும். நீங்கள் எப்போதும் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது. மக்களை மகிழ்விக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் அது உங்களை ஏமாற்றமடைய செய்யும். போதுமான ஓய்வு அவசியம். 

கன்னி 

புதிய யோசனைகள் மற்றும் படைப்பு ஆற்றல்களுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் வேலையில் உராய்வை வரிசைப்படுத்துவீர்கள். பணிகள் சீராக இருக்கும். முன்பு செய்த வேலைக்கான ஒப்புதலைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். சமூக ரீதியாக நீங்கள் கடந்த கால நண்பர்களுடன் மீண்டும் இணைவீர்கள்.

youtube

துலாம் 

உங்களுக்காக (astro) தேவையில்லாத விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்து நீங்கள் வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்.  உங்களை எரிச்சலை கொடுக்கும் விஷயங்களை உள்நோக்கி பாருங்கள். நீங்கள் ஒரு சிறந்த கேட்பவராக இருக்க வேண்டும்ஆரோக்கியம் குறைவாக இருக்கும்குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். சமூக சகாக்களுடன் உராய்வைத் தவிர்க்கவும். சகிப்புத்தன்மையுடன் இருங்கள்.

விருச்சிகம் 

இன்று புதிய யோசனைகளை நீங்கள்செயல்படுத்துவீர்கள். மேலும் அதற்கான முடிவுகளை உடனடியாக காணிப்பீர்கள். பணியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலும் உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒருவர் உணர்ச்சிவசப்படுவதை குறைவாக உணரக்கூடும் என்பதால் குடும்ப வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கும். கடைசி நிமிட சமூக பயணங்கள் ஒரு நல்ல யோசனையாக இருக்கும். 

மேலும் படிக்க - வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

தனுசு 

உங்கள் படைப்பு ஆற்றல்களை நீங்கள் பயன்படுத்தி மகிழ்வீர்கள். புதிய வேலை உங்களை தேடி வரும். ஆனால் அதற்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பது கடினம். இன்று வேலை பரபரப்பாக  இருக்கலாம். இதன் காரணமாக நீங்கள் சமூக திட்டங்களை மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் தேவையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகு மற்றும் முழங்கால்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

மகரம் 

இன்று நீங்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு விரும்பிய முடிவுகளை தராது என்பதால் அதிருப்தியாக இருப்பிர்கள். வேலையில் இருப்பவர்களிடம் மகிழ்ச்சியடைய மாட்டீர்கள். மற்றவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள். கடந்த வாரம் நீங்கள் சந்தித்த அனைத்து மன அழுத்தங்களுக்கும் பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் திறந்த உரையாடல் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதால் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். சமூக வாழ்க்கை சீராக இருக்கும்.

கும்பம் 

இன்று உங்கள் (astro) வழியில் வரும் வரை அனைத்தும் சீராக இருக்கும். தொடர்ச்சியாக அனைத்து வேலைகளின் முடிவுகளுடன் சீராக இருக்கும். வேலையில் இருப்பவர்களுடன் லேசான உராய்வு ஏற்படும். ஆனால் இது ஒரு நல்ல சீரான நாளை அடைவதைத் தடுக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூக கடமைகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடமிருந்து சில வணிக யோசனைகள் தொடங்கப்படலாம்.

மீனம் 

மக்களுடனான உங்கள் வேறுபாடுகளுக்கு இடையில் சமநிலையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உடன் இருப்பவர்கள் மீது எரிச்சல் காட்ட வேண்டாம். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் சமூக ரீதியாக நீங்கள் துண்டிக்கப்பட்டதாக உணரலாம். உங்கள் வயிறு மற்றும் தொண்டையை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - அப்பாவுடன் தினம் ஒரு பெண்.. தவறாக நடந்த அப்பாவின் நண்பர்கள்.. வனிதாவின் மகள் பகிர்ந்த வலி

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.