இன்று வியாழக்கிழமை துவிதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் ஆனி மாதம் 19ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பார்த்து பலன் பெறுங்கள்.
மேஷம்
அலுவலகத்தில் வேலை நிலையானதாக இருக்கும். இன்று நீங்கள் புதிய நபர்களைச் சந்திப்பீர்கள். உங்களுக்கு தேவையான உந்துதலைத் தரும் புதிய யோசனைகளை அவர்களிடம் இருந்து பெறுவீர்கள். இரண்டு சக ஊழியர்களுக்கு இடையிலான சூழ்நிலைகளை நீங்கள் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். நண்பர்களுடனான திட்டங்கள் வைத்திருப்பீர்கள். ஆனால் குடும்ப கடமைகள் இருப்பதால் அவற்றில் தாமதம் ஏற்படலாம்.
ரிஷபம்
இன்று அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருப்பதால் நீங்கள் கவனம் செலுத்துவது கடினம். அனைத்து வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்பதால் எந்த பணிகளையும் ஒத்திவைக்க வேண்டாம். நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் உங்கள் உடல்நலம் பாதிக்கும். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை துண்டிக்கப்படும். எனினும் நாளை ஒரு சிறந்த நாளாக இருக்கும்.
மிதுனம்
உங்கள் எண்ணங்களிலும், நோக்கங்களிலும் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். தோராயமாக எந்த ஓரி வேலையையும் செய்ய வேண்டாம். நீங்கள் நினைக்கும் அனைத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே உங்கள் கருத்தை நிரூபிக்க நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் செய்ய நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் வீட்டிலுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் மன சோர்வாக இருப்பிர்கள். மற்றவர்களின் பிரச்சனைகள் குறித்து சிந்திப்பதை தவிர்த்து, உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் புதிய திட்டங்களில் பணியாற்ற வேண்டும். ஆனால் முதலில் அது குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களிடையே மன அழுத்தம் காரணமாக அதிருப்தி அடைவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சிம்மம்
வேலை நிலையானதாக இருக்கும். உங்களுக்கு தேவையான ஊக்கம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகளை குறித்து நீங்கள் விவாதிக்க வேண்டாம். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. உங்கள் அன்பானவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதால் குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். மன அழுத்தம் காரணமாக சமூக வாழ்க்கை கொந்தளிப்பாக இருக்கும்.
கன்னி
சுற்றி இருப்பவர்கள் பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ளதால் வேலை சிக்கலாக இருக்கும். சுற்றியுள்ள மக்களை சமாதானப்படுத்துவதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழுவாக பணியாற்றுங்கள். நீங்களே அனைத்து வேலையையும் சுமக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்.
youtube
துலாம்
வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் உங்கள் மனநிலை மோசமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் படுக்கையின் தவறான பக்கத்திலிருந்து எழுந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகுவீர்கள். உடனிருப்பவர்கள் தீங்கு நினைக்கலாம் என்பதால், அமைதியாக இருங்கள். உங்கள் ஆற்றல்களை மாற்றியமைக்க வேண்டும்.
விருச்சிகம்
வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் நிலுவையில் உள்ள பணம் காரணமாக உங்களுக்கும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஆக்ரோஷமாக இருப்பதை தவிர்த்து, உறுதியுடன் செயல்படுங்கள். உடன் இருப்பவர்களால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. கோபமாக இருப்பது விரக்திக்கும் வழிவகுக்கும் என்பதால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். நண்பர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.
தனுசு
பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கபட்டுள்ளதால், நிலுவையில் உள்ள பணிகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். பணிகளை தள்ளி போடாதீர்கள். ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் வேலையில் சில விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். உடனிருப்பவர்களின் நோக்கங்களை கண்டறியுங்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடைசி நிமிட சமூக திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தும்.
மகரம்
வேலை பலனளிக்கும் வகையில் இருக்கும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள். வேலையில் புதிய முன்னேற்றங்கள் செயல்படுத்த உங்கள் கவனம் தேவை. உங்கள் யோசனைகள் குறித்து மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும். கடந்த கால வேலைக்கான பாராட்டு கிடைக்கும். குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட்டங்களில் பங்கேற்பீர்கள். உடன் இருபவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
வேலையில் இன்று கவனம் தேவைப்படும் நாள். மக்கள் ஆலோசனை அல்லது விளக்கங்கள் கேட்டு உங்களை தேடி வரலாம். தகவல் தொடர்பில் தாமதம் ஏற்படலாம். கண்களுக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. நண்பர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். பிரச்சனைகள் குறித்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துரைங்கள்.
மீனம்
அலுவலகத்தில் இன்று வேலை நன்றாக இருக்கும். மேலும் உற்பத்தி அதிகரிக்கும். நீங்கள் உணர்ச்சி ரீதியாக குறைவாக இருப்பதாக உணர்வீர்கள். நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும் போது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரலாம். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். அவசியமில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்கி, அதனை நிங்களே தீர்ப்பீர்கள். சமூக ரீதியாக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆனால் நீங்கள் மக்களைச் சந்திப்பதை போல் உணர மாட்டீர்கள்.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.