வெள்ளையோ கருப்போ அவரவர் நிறத்திற்கு தகுந்தாற்போல் மேக்கப்(makeup) செய்தால் எல்லாருமே தேவதைகள்தான். குறிப்பாக கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சருமம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சந்தேகமில்லை. வெயிலின் பாதிப்பு இருக்காது. அதனால் இளமையாகவும் சருமம் சுருக்கமின்றியும் இருக்கும். இது கருப்பாக இருப்பவர்களுக்கு கிடைத்த பரிசு என சொல்லலாம்.
தேவையானவை :
ஃபவுண்டேஷன்
ஃபேஸ் பவுடர்
அட்ர்த்தியான பிரஷ்
பிங்க் லிப் க்ளாஸ்
பிங்க் லிப்ஸ்டிக்
சிவப்பு உதட்டு லைனர்
ஐ லைனர்
அழியாத கண்மை
மெல்லிய பிரஷ்
செய்முறை :1 முதலில் ப்ரைமர் கொண்டு முகத்திற்கு ஒரே நிறம் தந்திட வேண்டும். அதனால் திட்டு திட்டாக முகத்தில்(makeup) உருவாவதை தடுக்க முடியும்.
ஸ்டெப் -2 கருப்பாக இருப்பவர்களுக்கு மஞ்சள் ஃபவுண்டேஷன் மிகவும் எடுப்பாக இருக்கும். ஆகவே அதனை வாங்கிக் கொண்டு முகம் முழுவதும் புள்ளிகளாக வைத்து மெதுவாக மேல்னோக்கி தடவுங்கள். மறக்காமல் கழுத்திற்கும் தடவுங்கள்.
3. கண்கள்: மேக்கப் செய்வதை முதலில் கண்களுக்குதான் தர வேண்டும். அதன் பின்தான் முகத்திற்கு(makeup) செய்ய வேண்டும். ஆகவே கண்களில் கருவளையம் இருந்தால் கண் மேக்கப் எடுபடாது. எனவே கான்சீலர் கொண்டு கண்களுக்கு அடியில் முக்கோணம் மாதிரி தடவுங்கள்.
4. ஐ ஷாடோ: பின்னர் ஐ ஷாடோவை கண்களில் நீங்கள் விரும்பும்படி லைட் நிறத்தில் கொடுத்து அதன் மேல் அடர்த்தியான ஊதா அல்லது பிங்க் நிறம் கொடுத்தால் எடுப்பாக இருக்கும். எளிதாக கண் மேக்கப்பிற்கு(makeup) கண்களின் ஓரத்திலிருந்து புருவத்தின் நுனி வரை ஒரு செலோடேப்பை நீள வாக்கில் ஒட்டி அதன் பி ஐ ஷேடோ போட்டால் கச்சிதமாக அமையும். அதன் பின் செல்லோ டேப்பை உருவி விடுங்கள்.
❤️ designer & Stylist – @anjushankarofficial 📷 – @kiransaphotography H&M- @vurvesalon pro – @sathish_pro pic.twitter.com/ZmefTMpQKL
— Vani Bhojan (@vanibhojanoffl) May 12, 2019
5. முகம்: இப்போது முகத்திற்கு வாருங்கள். இப்போது ஃபேஸ் பவுடரைக் கொண்டு(makeup) முகத்தில் பூசுங்கல். லேசாக பிரஷ் பட்டால் போதுமானது. அதுவே மிகைப்படுத்தாத மேக்கப்பை காண்பிக்கும்.
6. உதடு : உதட்டிற்கு அடர்த்தியான சிவப்பு நிற லைனரை உபயோகியுங்கள். அதன் பின் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை பூசவும். இது உங்களை அழகாக காண்பிக்கும். இந்த அடர்த்தியான நிறம் பிடிக்க வில்லையென்ரால் லைட் கலர் லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்ளலாம்.
இந்த மெத்தடை தினமும் பாலோ பண்ணி பாருங்கள். பிறகு நீங்களே வியந்து போயிடுவிங்க!
அற்புதமான டிப்ஸ்
பன்னீரும் தேனும் ரோஸ் வாட்டர் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.
உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணெணை தடவலாம். ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும்.
காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.
வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.