கையில் தாராளமாக காசு பணம் புரள வேண்டுமா ? மஹாலக்ஷ்மி மனம் மகிழ நீங்கள் செய்ய வேண்டிய சிம்பிள் பரிகாரங்கள் !

கையில் தாராளமாக காசு பணம் புரள வேண்டுமா ? மஹாலக்ஷ்மி மனம் மகிழ நீங்கள் செய்ய வேண்டிய சிம்பிள் பரிகாரங்கள் !

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவ சித்தனும் கூட பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போய் விட்டார். பொருளோடு இருந்தால்தான் இந்த உலகம் நம்மை மதிக்கிறது. Wealth


லட்சங்களில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்டேன் என்கிறது என்பவர்களும் கடன் வாங்கும் சந்தர்ப்பத்திற்கு ஆளாகி அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு அடுத்து குறிப்பிட போகும் சில எளிய பரிகாரங்கள் நிச்சயம் உதவும்.


கடன் பிரச்னை அதிகமாக இருப்பவர்கள் செவ்வாய் கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் செவ்வாய் பகவானை அவருக்கு பிடித்தவைகளை கொண்டு வழிபட்டு வரலாம். அல்லது ஒரு வெற்றிலையில் செவ்வாய் பகவானுக்கு உகந்த தானியத்தை (துவரை) நீங்கள் வைத்து வழிபடலாம்.


இந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்!காலை கண் விழிக்கும் போதே தங்க உலோகத்தை பார்ப்பது நன்மை தரும். அதனால்தான் அந்த காலத்தில் பெண்கள் தாலியின் முகத்தில் விழித்தார்கள். தங்கம் வெள்ளி நிறைந்த படம் அல்லது ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றில் கண் விழிப்பது நன்மை தரும்.


மகாலக்ஷ்மி அனுக்கிரகம் பெற மனைவிக்கு தர வேண்டிய பரிசுகள் ! குடும்பத்தில் செல்வம் நிலைக்க சில வழிமுறைகள் !ஒவ்வொரு மாதமும் வளர்பிறை த்ரிதியை அன்று அன்ன தானம் செய்து வாருங்கள். 100 பேருக்கு முடியாவிட்டாலும் குறைந்தது ஒருவருக்கு 4 இட்லிகளாவது வாங்கி கொடுங்கள். நிச்சயம் கடன் பிரச்னைகள் தீர்ந்து செல்வ வளம் பெருகுவது உங்களுக்கே தெரியும்.கை நிறைய செல்வம் இருந்தும் நிலைக்கவில்லையா ? வீண் விரயங்கள் ஆகிறதா? அன்றாடம் காலையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் அல்லது இனிப்பு கலந்த அவுல் போன்ற உணவை வழங்கி வாருங்கள். எல்லாம் கட்டுக்குள் வரும்.வீட்டை சுற்றிலும் நீரோட்டம் இருந்தால் செல்வம் உயரும். குடி தண்ணீருக்கே தட்டுபாடான இந்த காலத்தில் செயற்கை நீரூற்றுக்களை வாங்கி வீடுகளில் வைக்கலாம். பணவரவு அற்புதமாக இருக்கும். வீட்டில் கடுகு எண்ணெய் இருப்பது செவ்வாயை வலுப்படுத்தும்.


கடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் !காலையில் குளித்து விட்டு பூஜை செய்யும் முன்னர் சிறிது சர்க்கரையை உங்கள் வீட்டு வாசலில் தூவுங்கள். இதனை சிறு எறும்புகள் மற்றும் பூச்சிகள் உண்ணும். இவைகள் நீங்கள் தந்த உணவை சாப்பிட சாப்பிட உங்கள் பண கஷ்டங்கள் கடன்கள் எல்லாம் காணாமல் போவதை கண்கூடாகவே பார்ப்பீர்கள்.எவ்வளவுதான் சேமிக்க நினைத்தாலும் உங்களால் சேமிக்க முடியாமல் தடைகள் வருகிறதா? நீங்கள் உடைகளை வைக்கும் பீரோவில் கருநீல துணியை பரப்பி அதன் மேல் துணிகளை அடுக்கவும். இப்படி செய்து வந்தால் வெகுவிரைவில் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகம் ஆகும்.வெள்ளிக்கிழமை அன்று மாலை ஐந்து மணி முதல் 7 மணிக்குள் கல் உப்பை கடையில் வாங்கி வந்து வீட்டில் அடுப்படி அருகே வைக்க வைக்க உங்கள் செல்வம் பெருகி கொண்டே போவதை பார்க்க முடியும்.அதை போலவே வெள்ளி கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு ஆகியவற்றுடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து ஒரு தாளில் மடிக்க வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து விடுங்கள். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று காசை உண்டியலில் போட்டு விடுங்கள். இப்படியே செய்து வர 11 வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.கடன் தீர்ந்து பண வரவு பெருக நம் முன்னோர்கள் குறிப்பிட்ட முறைகளில் சிலமுறைகள் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இவை பற்றிய மேலும் பல தகவல்கள் youtube மூலம் கிடைக்கின்றன, அறிந்து பயன் பெறுக.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.