குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா.. ஒரே ஒரு எளிமையான பரிகாரம்..! ஒரே வாரத்தில்உங்கள் வாழ்வே மாறும் அதிசயம் ..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா.. ஒரே ஒரு எளிமையான பரிகாரம்..! ஒரே வாரத்தில்உங்கள் வாழ்வே மாறும் அதிசயம் ..!

குலதெய்வம் என்பது ஒருவருடைய வம்சத்தை காக்கும் தெய்வமாகும். பாரம்பரியமாக ஒரு குலத்தை சேர்ந்தவர்களின் வம்சத்தை அடுத்த தலைமுறைகளை காக்கும் தெய்வமாக ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தெய்வம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. குல தேவதை என்றும் அழைப்பார்கள்.


இவர்களை நாம் வணங்கி அந்த தெய்வத்தை மகிழ வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாக நேரிடும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும்.


திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !குலதெய்வ அருள் இல்லை என்றால் திருமணத்தடை, புத்திர சோகம், நல்ல வருமானம் இருந்தும் நம்மிடம் பணம் நிலைக்காமல் இருக்கும், தொழிலில் சோபிக்க முடியாது, உடல்நிலை கோளாறுகள், மன நிம்மதி இன்மை என பல தொந்தரவுகள் உங்கள் குடும்பத்தில் (Family) நடந்து கொண்டேயிருக்கும்.


குலதெய்வத்தை பொறுத்தவரை வேண்டியன எல்லாம் அருளும் தெய்வம் அவர்கள்தான் . நம் நம்பிக்கையை சோதிக்காமல் உடனே வேண்டியவைகளை நடத்தி தருவார்கள்.


கடன் பிரச்னைகள் நீங்கி வருமானமும் வசதியும் அதிகரிக்க வேண்டுமா? எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது எளிய கற்பூரம் !பெரும்பாலும் குலதெய்வங்கள் உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தில் குடியிருக்கும். அங்கேதான் அவை எழும்ப பட்டிருக்கும். அங்கு அடிக்கடி சென்று குலதெய்வ மரியாதையை செய்ய முடியாமல் இருப்பவர்கள் குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க முடியும். குலதெய்வம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யும்.


நம்மில் பலருக்கு இன்றைய தலைமுறைக்காரர்களுக்கு குலதெய்வம் என்றால் என்ன என்றே தெரியாது. அவர்களும் கூட கீழ்கண்ட எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் பெயர் அறியாத குலதெய்வமும் உங்கள் வீட்டில் வாசம் செய்யும். உங்களை பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பார்கள்.


இந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்!குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க எளிய வழிமுறை


தேவையான பொருள்கள்


சதுர வடிவ சிவப்பு நிற துணி 1
விரலி மஞ்சள் 2 துண்டுகள்
சாம்பிராணி சிறிதளவு
கரித்துண்டு 1
சந்தனம் சிறிதளவு
குங்குமம் சிறிதளவு
விபூதி சிறிதளவு
கருப்பு நிற நூல் கொஞ்சம்


சிவப்பு நிற துணியை விரித்து அதனுள் விரலி மஞ்சள், சாம்பிராணி, கரித்துண்டு, சந்தனம், குங்குமம், விபூதி ஆகியவற்றை சேர்க்கவும். துணியை மூட்டை போலாக்கி அதனை கருப்பு நிற நூல் கொண்டு அவிழாதவண்ணம் கட்டிக் கொள்ளவும். இப்போது உங்கள் எளிமையான பரிகாரம் தயார் ஆகிவிட்டது.

Subscribe to POPxoTV

இதனை நிலைவாசல்படியின் உள்புறத்தில் கதவிற்கு மேலே ஒரு ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அவ்வளவுதான். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து விட்டீர்கள்.


ஒரே வாரத்தில் உங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை உங்களால் பார்க்க முடியும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்து விட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு தெளிவாகும். தொழில் லாபம், பணவரவு, குடும்ப சண்டைகள் முடிவுக்கு வருவது, வீட்டில் அமைதி போன்றவை நடக்கும்.இந்த துணி மூட்டையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை மாற்றி கொள்ளலாம். வருடக்கணக்கில் மாற்றாமலும் வைத்திருக்கலாம். விஷேஷ நாட்களில் மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். பழைய மூட்டையை நீர்நிலைகளில் அல்லது செடிகள் வேரில் போட்டு விடுங்கள்.


மேலே குறிப்பிடப்பட்ட பரிகாரம் செய்வதன் மூலம் குலதெய்வம் நம் வீட்டில் வாசம் செய்வதாக ஆன்மிக பரிகாரங்கள் சேனல் நமக்கு தெரிவிக்கிறது


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.