ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து பெண்களும் (womens) விரும்புகின்றனர். ஆனால் முறையற்ற உணவு முறையினாலும், உடற்பயிற்சி செய்யாததாலும் உடல் எடை அதிகரித்தும், ஆரோக்கியம் அற்றும் உள்ளனர். இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் பெண்கள் தங்களது உடல் ஆரோகியத்தில் கவனம் செலுத்த தனியாக நேரம் ஒதுக்குவது இல்லை எனினும் நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருந்த படி சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகித உணவுகள் எடுத்து வந்தாலே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமானது.

gifskey

உணவு முறை (Healthy Foods)

  • பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவே சரிவிகித உணவு என்றழைக்கப்படுகிறது. வைட்டமின், புரதம், மாவுசத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். உணவில் பச்சை காய்கறிகளை அதிகளவு சேர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்தவற்றை தவிர்ப்பது நல்லது.
  •  பெரும்பாலும் மூன்று வேளை அதிகளவு சாப்பிடுவதற்கு பதிலாக ஆறு வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இல்லையென்றால் இடைவேளை நேரத்தில் பழங்கள், நட்ஸ் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்தவற்றை சாப்பிடலாம். ஏதாவது ஒரு தானியம், காய்கறி, பழங்கள் ஆகிவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதிசய நன்மைகள் கொண்ட வெள்ளை சோளம்! இப்படியும் சாப்பிடலாமா?

  • இன்றைய இளம்பெண்கள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாக பாலிசிஸ்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் மாத்திரை மூலம் கரைக்க முடியும். ஆனால் நீர்க்கட்டி பெரிதானாலோ அல்லது கர்ப்பப்பைக்கு அருகில் இருந்தாலோ அறுவை சிகிச்சை செய்து அகற்றும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிக்க கசப்பு மற்றும்  துவர்ப்பு சுவை நிறைந்த பாகற்காய், வாழைப்பூ, அத்திக்காய் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்

வைட்டமின் டி அவசியம் (Vitami D)

  • வைட்டமின் டி நிறைந்த உணவுகளான கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக சால்மன் மீனை வாரந்தோறும் சாப்பிட வேண்டும். கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது சூரிய ஒளி படும் வகையில் வெயிலில் நிற்க வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளதாக ஆரோக்கிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
pexels

  • வைட்டமின் டி குறைபாட்டால் தசை மற்றும் எலும்புகள் பலவீனம் ஏற்படுகிறது. எனவே இதைனை தவிர்க்க சூரிய ஒளியில் சற்று நேரம் நடக்க வேண்டும் . முட்டை, பால், மீன் எண்ணெய், மீன், காளான், ஆரஞ்சு பழம் உள்ளிவைகளில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. கீரை வகைகள், பேரிட்சை, அத்தி பழங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

கருப்பட்டி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்!

உடற்பயிற்சி (Excercise)

  • பெண்கள் மட்டும் அல்லாது அனைவரும் உடற்பயிற்சி செய்வதை தினசரி பழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுகிறது. குறைத்தது 60 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது நிற்பது கூட உடற்பயிற்சிகள் தான். நிற்பதால் ஒரு மணி நேரத்திற்கு 190 கலோரிகள் செலவாகிறது.
pixabay

  • எனவே அலைபேசியில் பேசும் போதாவது நின்று கொண்டே பேசுவதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். பெண்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் உடல் சோர்வு மற்றும் உடல் உறுப்புகளை வலு இழக்க செய்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும். மேலும் லிப்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும்.  

யோகா (Yoga)

  • பெண்கள் பருவம் அடைவதில் தொடங்கி இல்வாழ்க்கை, குழந்தை பேறு, மோனோபஸ், முதுமை என பல்வேறு கட்டங்களை கடந்து வருகின்றனர். இந்த காலகட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது யோகா செய்ய வேண்டும். முதன்முறையாக யோகா செய்பவர்கள் யோகா செய்ய தொடங்கும் முன்னர் அங்க பிரதட்சணம் செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் தளர்வடையும்.
pixabay

தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to Avoid)

  • சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரைகளுக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். புட்டிகளில் அடைத்து விற்கப்படும் பானங்களுக்கு பதிலாக இளநீர் அல்லது பழ ஜூஸ் அருந்தலாம். பெருமைப்பாலும் பழங்களை ஜூஸ் செய்த சிறிது நேரத்திற்குள் குடித்தால் மிகவும் நல்லது.
pixabay

  • மேற்கண்ட உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை பின்பற்றினால் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம். நமது உணவு முறைகளே ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமை வேண்டுமா ! ஆரோக்கியமான அழகான வாழ்க்கைக்கு இந்துப்புவை இப்படி பயன்படுத்துங்கள

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo