ஒரு முறைக்கு 40 ருபாய்.. என் உடம்பின் மொத்த விலை 400 ருபாய்.. ஒரு பாலியல் தொழிலாளியின் கண்ணீர் கதை.

ஒரு முறைக்கு 40 ருபாய்.. என் உடம்பின் மொத்த விலை 400 ருபாய்.. ஒரு பாலியல் தொழிலாளியின் கண்ணீர் கதை.

ஒரு முறைக்கு 40 ரூபாய்.. நாள் முழுக்க பயன்படுத்த 400 ரூபாய்.. யாரும் வரவில்லை என்றால் பட்டினி.. பாலியல் தொழிலாளியின் வேதனை கதை..


உலகில் மிகப்பெரிய வேதனைகளில் தீராத வேதனை மனிதத்தை மனிதம் சாப்பிடும் காம வேட்கை. இதனை தீர்த்து வைக்க உதவி செய்யும் பாலியல் தொழிலாளிகளின் நிலைமை எப்போதும் கவலைக்கிடம்தான்.


ஆண்கள் தங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள தேடுகின்ற ஒரு உடல் அந்த பாலியல் தொழிலாளியின் பட்டினியை போக்குகிறது. இதனால் வறுமை தீரா பொழுதுகளில் பெண்கள் மனம் வெதும்பி இந்த வேலைக்கு வருகின்றனர்.


இரண்டு பெண்களுக்கு இடையில் ஏற்படும் ஈர்ப்பு எதனால் நடக்கிறது..உலகெங்கும் இந்த வேதனை நிரம்பிய கிடக்கிறது. நம்மால்தான் நாம் வாழும் இடம் தாண்டி பயணிக்க முடிவதில்லை. இதற்கான தீர்வாகவே டாகுமெண்ட்ரிகள் இருக்கின்றன. ஆப்பிரிக்காவை சேர்ந்த சியாரா லியோன் எனும் இடத்தின் தலை நகர் பிரீ டவுன். இங்கிருந்துதான் ஒரு டாகுமென்ட்ரீ ஆரம்பிக்கிறது.


இந்த இடத்திற்கு தெரிந்துதான் பெயர் வைத்தார்களா என்று தெரியவில்லை. இயற்கையின் வளங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அழகிய ஊரில் பெண்கள் பாலியல் தொழிலுக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.


மழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. உலக சுற்று சூழல் தினம்! இதில் நமது பொறுப்புகள் என்னென்ன..இயற்கையின் வளங்களை எல்லாம் அதிகார வர்க்கம் அள்ளிக்கொண்டு போக மக்களுக்கு என்று மிச்சம் இருந்தது பசி மட்டுமே. நம்மை ஆள்பவர்களால் நமக்கு நன்மை வர போவதில்லை என்பதை உணர்ந்த பெண்கள் தங்கள் குடும்பத்தை காக்க பாலியல் தொழிலுக்குள் இறங்கியிருக்கும் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.


70 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த இடத்தில் வளமை சுரண்டப்பட்டு வறுமை மட்டுமே மிஞ்சி போக வருமானத்திற்காக பெண்கள் செக்ஸ் தொழிலுக்கு தங்களை பழக்கப்படுத்தி இருக்கின்றனர். இதில் 3 லட்சம் பெண்கள் இந்த தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.

Subscribe to POPxoTV

மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா வைரஸ் அதிகம் பரவி வருவதால் பெண்கள் தெருவில் நின்றபடியே ஆண்களை அழைத்து செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் வீட்டில் காத்திருக்கும் பெண்களுக்கு கஸ்டமர்கள் கிடைப்பதில்லை.


இந்த டாக்குமென்டரியின் ஒரு பகுதியாக பட்மடா கணு (Futmada kanu ) எனும் பாலியல் தொழிலாளி (sex worker) தன்னுடைய கண்ணீர்கதையை இங்கே பகிர்கிறார்.


எப்போதாவது ஒருமுறை ஒரே நாளில் 7 முதல் 8 வாடிக்கையாளர் வரைக்கும் வருவார்கள் என்றும் பல நாட்கள் வெறும் 40 ரூபாய்க்கு செக்ஸ் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் நடைபெறும் என்றும் கூறுகிறார். அதற்கும் கூட ஆள் வரவில்லை என்றால் அந்த நாள் முழுக்க தான் பட்டினி கிடப்பதாக அவர் கூறியிருக்கிறார்.உடல் உறவு வேண்டும் எனும் ஆண்கள் தன்னை அவர்களது வீட்டிற்கு கூட்டி சென்று ஒரு நாள் முழுதும் பயன்படுத்தி கொண்டு வெறும் 40 ரூபாய் மட்டுமே தருவதாகவும் அவர் கூறியது பாலியல் தொழிலின் வலியை நமக்குள் கடத்துகிறது.


என் உடம்பின் விலை 400 ரூபாய் மட்டுமே. இதில் ஆணுறை வாங்கவே பாதி பணம் போய் விடும் மீதி பணத்தில் குடும்பத்தை ஒப்பேற்றுகிறேன் என்கிறார் பட்மடா. தன்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்காகவே தான் இந்த தொழிலுக்கு வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.


இபோலா வைரஸால் அம்மா இறந்து விட.. சகோதரிகளின் படிப்பிற்காக இந்த தொழிலில் இருக்கும் பட்மடாவின் ஏக்கம் தான் ஒரு செவிலியர் ஆக வேண்டும் என்பதுதான்.


இவரை போலவே மரியாமா எனும் பெண்ணின் கதையும் வேதனைகள் நிரம்பியது.. இவர் வாடிக்கையாளர் ஒருவரே இவரது மொபைல் உள்பட இவரது சேமிப்பு காசுகள் அனைத்தையும் திருடி சென்றிருக்கிறார். அதைப்பற்றி அந்த நபரிடம் பேசியபோது பலமாக தாக்கப்பட்டிருக்கிறார்.லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் இருந்தாலும் சிறைக்கு செல்லும் பல ஆயிரம் பெண்களை சில சமயம் காவல்துறையும் ஒரு கை பார்கிறதாம். சேமித்து வைத்த பணத்தை சிறைக்கு கட்டி விட்டு மீண்டும் வெளியில் வந்த உடன் தெருவில் வடிக்கையாளருக்காக காத்திருப்பது சகஜமாம்.


பெண்களை உயிருள்ள சக மனுஷியாகக் கூட பார்க்க வக்கற்ற வக்கிரம் பிடித்த ஆண்கள்தான் உலகில் பல பெண்களை இப்படி பாலியல் தொழிலில் இறக்கி வைத்து வேடிக்கை பார்க்கின்றனர். முன்னேற வழியற்ற பெண்கள் மேலும் மேலும் தங்கள் உடலை வாடகைக்கு விடும் வலியை அனுபவித்தபடியே இருக்கின்றனர்.

Subscribe to POPxoTV

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.