வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!

கோடை காலம் முடிந்து விட்டாலும் இந்த வெயிலின்(summer) தாக்கம் குறைந்த பாடில்லை. சுட்டெரிக்கும் வெயிலில்(summer) சென்று வீடு திரும்புவதற்குள் அப்பாடா என்றாகி விடுகின்றது. இந்த வெயிலை(summer) நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு பதிலாக வெயிலால்(summer) ஏற்படும் சரும பிரச்சணையை வேண்டமானால் சரிசெய்யலாம்.


சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது. இதற்கு நீங்கள் பார்லர் தான் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டிலிருந்தே இழந்த அழகை மீண்டும் பெறலாம். நமது வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே வெயில்(summer) தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட டானிங், சோர்வு, சரும வறட்சி ஆகியவற்றை தடுத்து, உங்களின் பொலிவை மீட்டெடுக்கலாம்.


அவ்வகையில் கோடை காலத்தில் வெயிலினால்(summer) ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு வீட்டிலிருக்கும் எளிய பொருட்கள் எப்படி தீர்வாகிறது எனப் பார்ப்போம்.


எலுமிச்சை


எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலந்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசிக்கொள்ளலாம்.இப்படி செய்தால் வெயிலினால்(summer) பாதிப்படைந்த உங்கள் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.


முட்டை மாஸ்க்


கோடை காலத்தில் ஏற்படும் சரும நிற மாற்றத்திற்கு உகந்தது முட்டை மாஸ்க். வெயிலில்(summer) இருந்து வீடு திரும்பியதும் உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் மாஸ்க் போல பூசுங்கள். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது தேன் கலந்துக்கொள்ளலாம். இந்த கலவை உங்கள முகத்தில் இருக்கும் சோர்வை போக்குவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் போக்கும்.


beauty003


ஆண் நண்பரிடம் செக்ஸ் விருப்பத்தை வெளிபப்படுத்த உதவும் 10 அட்டகாசமான மீம்ஸ்கள்


தயிர்


உங்களது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். ஒரு பாத்திரத்தில், தயிர், சிறிதளவு கடலை மாவு அல்லது முல்தானிமட்டி, அரைத்த ஆரஞ்சு தோல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசிவந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமத்தில் ஈரப்பதமும் தக்கவைக்கபடும்.


வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காய் சாறை, துருவிய வெள்ளரிக்காயுடன் கலந்து வெயிலினால்(summer) பொலிவிழந்த சருமத்தின் மீது பூசினால் சருமம் குளுமை பெறுவதுடன், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.


கற்றாழை


சோற்று கற்றாழையின் சாறை உங்கள் கைகள், பாதங்கள், கழுத்து பகுதி மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.


உருளை கிழங்கு


சூரிய கதிர்வீச்சால் பெரும்பாலானோருக்கு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். முகத்தின் அழகை பாதிக்கும் இந்த கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். உருளை கிழங்கு சாறையும் கூட கண்களை சுற்றி தடவலாம்.
beauty004
கை நகங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?


கண் கருவளைம்


கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.


துர்நாற்றம் போக


குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு சூடாக்கி அந்த நீரல் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.


கண்களைக் காக்க


வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.


கூந்தல் பராமரிப்பு


வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.


இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள்.


தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல்(Love) வசனங்கள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo