உங்கள் கூந்தல்(Hair) நலனை காப்பது என்று வரும் போது, அம்மாக்கள், பாட்டிகள் , சிகையலங்கார வல்லுனர்கள், தோழிகள் என்று எல்லோரும் எல்லா வகையான ஆலோசானைகளயும் அளிப்பார்கள். ஒருவர் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதன் அவசியத்தை வலியுறுத்தினால் இன்னொருவர் அதை தவிர்த்து விடுமாறு கூறலாம். இது போன்ற ஆலோசனைகளை கேட்டு குழம்பம் அடைந்து, கூந்தலை பராமரிக்க சரியான வழி எது என அறிய விரும்பினால், நீங்கள் கனவு காணும் கூந்தலை பெறுவதற்கு தேவையான குறிப்புகளை வழங்குகிறோம்.
வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!
தலை குளித்தல்
தலை முடியை உலர வைத்தல்
தலை குளித்தல்
ஆம், கூந்தல் பராமரிப்பு என்பது அடிப்படையான விஷயங்களில் இருந்து துவங்குகிறது. தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் கூந்தலை (Hair) மங்கச்செய்யலாம்.
- குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் பயன்பாடு: ஷவரில் இருந்து சூடான தண்ணீர் பொழியும் போது அதன் கீழ் நின்று கொண்டிருப்பது இதமளிப்பதாக தோன்றலாம். ஆனால் இது உங்கள் கூந்தலின் நீர்த்தன்மையை நீக்கி, உலர் தன்மை மற்றும் உடைந்த முனை பாதிப்பை உண்டால்லாம். எனவே எப்போதும், வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை(Hair) அலசவும். இதன் மூலம் கூந்தலில் உங்கள் ஈர்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
- ஷாம்புவை நீர்க்க செய்தல்: ஷாம்பு உங்கள் கூந்தலில் இருந்து அழுக்கு மற்றும் எண்ணெயை பசையை அகற்ற உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இயற்கை மற்றும் செயற்கை எண்ணெய் பசை இடையே வேறுபாடு தெரியாது. எனவே உங்கள் ஷாம்புவில் சிறிதளவு தண்ணீர் கலந்து அதை நீர்க்கச்செய்து அதன் பின் பயன்படுத்தவும்.
·தினமும் தலை குளியல் வேண்டாம்: தினமும் உங்கள் கூந்தலை(Hair) அலசாமல் இருப்பது ஆரோக்கியம் இல்லாதது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்ன எனில் தினமும் கூந்தலை (Hair) அலசும் அவசியம் இல்லை என்பது தான். இது இயற்கை எண்ணெய் பசையை அகற்றி, முடி உதிர்தலை உண்டாக்கலாம்.
ஆண் நண்பரிடம் செக்ஸ் விருப்பத்தை வெளிபப்படுத்த உதவும் 10 அட்டகாசமான மீம்ஸ்கள்
தலை முடியை உலர வைத்தல்
காற்றில் உலர வைக்கவும்: முடிந்த வரை, உங்கள் கூந்தலை (Hair) இயற்கையாக உலர வையுங்கள். டிரையர் பயன்படுத்துவது தவிர்க்க இயலாது எனில், கூந்தலை (Hair) ஓரளவு உலர வைத்துவிட்டு பின்னர் டிரையர் பயன்படுத்தவும்.
- பெரிய பற்கள் கொண்ட சீப்பு: ஈரமான, பாதி உலர்ந்த மற்றும் இப்போது தான் உலர வைத்த கூந்தலில் எப்போதும் பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தவும். இது கூந்தல் பாதிப்படைவதை குறைக்கும்.
ஈர கூந்தலோடு வெளியே செல்ல வேண்டாம்: ஈரமான , எண்ணெய் பசை நிறைந்த கூந்தலில் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் எளிதாக ஒட்டிக்கொள்ளும் என்பதால், தலைக்கு குளித்தவுடன் ஈரமான கூந்தலுடன் வெளியே செல்ல வேண்டாம்.
இந்த காரணங்களால் தான் கூந்தல் உதிர்கின்றது என்று சொல்ல முடியாது. நாம் உண்ணும் உணவும் மிக முக்கிய காரணமாகும். கூந்தலை குழிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குழிக்கும் போது கவனத்தில் கொண்டால் போது கூந்தல் உதிர்வதை கூடுமான வரை தவிர்க்கலாம். இந்த பராமரிப்பு முறையை கவனத்தில் கொண்டு கூந்தலை அலசுங்கள் ஆரோக்கியமாக இருங்கள். அழகாக வாழுங்கள்.
இனிய அன்பான உறவுகளுக்க ரமலான் பெருநாள் வாழ்த்து கவிதைகள்!
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo