நுனி முடி பிளவு பிரச்னையை தவிர்க்க பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்!

நுனி முடி பிளவு பிரச்னையை தவிர்க்க பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்!

முடி உதிர்வு, இளநரை, பொடுகு என தலை முடியால் பல்வேறு பிரச்சனைகள் ஏறடுகிறது. இதனை தவிர்க்க ஆளாளுக்கு கூறும் அறிவுரைகளை பின்பற்றி மேலும் பிரச்சனைகளை அதிகமாக்குகின்றோம். நுனி முடி பிளவு (split hair) தற்போது பெரிய பிரச்சையாக மாறிவருகிறது. தலைமுடி வறட்சியடைவதால் முடியின் நுனியில் பிளவு ஏற்படுகிறது. இதனை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். 

 • எண்ணெய் குளியல் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் ஆயில் ஒன்றாக கலந்து மஜாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் தலையில் ஊற வைத்து குளித்து வர முடிவு முடி பிளவு குறைவைதை காணலாம். 

வார விடுமுறை வந்துவிட்டது!... சுட சுட மனமனக்கும் சூப்பரான ரெசிப்பிக்களுடன் அசத்துங்கள்!

 • மாதம் ஒரு முறை நுனி முடியை வெட்ட வேண்டும். அல்லது சலூன் சென்று முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். நீளமாக முடி இருப்பவர்களுக்கே இந்த பிரச்னை பெரும்பாலும் ஏற்படுகிறது. ஏனெனில் முடியின் நீளம் வரை போதிய போஷாக்கு இருக்காததே இதற்கு காரணம். ரெகுலரான ட்ரீமிங் முடி பிளவு ஏற்படுவதை தவிர்க்கும். ட்ரிம் செய்வதால் உங்கள் முடியின் நீளம் குறையாது. 
 • ஆண்டி டாண்ட்ரப் ஷாம்பு பயன்படுத்தும் போது முடியில் உள்ள ஈரப்பதம் குறைத்து போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க ஷாம்பு பயன்படுத்திய பின்னர் தரமான கண்டிஷனர் பயப்படுத்துவது நல்லது. இதனால் முடியில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள் ஹெர்பல் அல்லது ஹென்னா வகையிலான கலரிங் முறைகளை தேர்வு செய்வது நல்லது. 

 • முட்டையில் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதனை முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலைக்கு குளிக்கவும். இதனை மாதத்திற்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வர முடி பிளவு சரி ஆவது மட்டுமின்றி, முடி மென்மையாவும் மாறும். 
 • அரை கப் தேங்காய்ப் பாலுடன், பொன்னாங்கண்ணிக் கீரை அரைத்த ஜூஸ் அரை கப் கலந்து இதில் சிறிது பயத்தமாவைச் சேர்த்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்துவந்தால் வறட்சி, பிளவு இல்லாமல் முடி நன்கு வளரும்.

பளபளப்பான பொலிவான முகம் வேண்டுபவர்களுக்கு.. சில ரகசிய மேக்கப் குறிப்புகள் !

 • வெங்காய சாற்றை தலையில் தடவி குளித்து வர முடி பிளவு குறையும். நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து முடியின் வேர்களுக்கு உறுதியை அளிக்கிறது. இதனால் நுனி முடியில் ஏற்படும் பிளவு சரி செய்யப்பட்டு, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.

 • வெங்காயத்தை நன்கு அரைத்து, வடிகட்டவும். இந்த சாற்றுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்  கலந்துகொள்ளவும். இந்த சாற்றை பஞ்சால் நனைத்து உச்சந்தலை மற்றும் நுனியில் நன்கு தடவவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, ஆர்கானிக் ஷாம்பு அல்லது சிகைகாயால் தலை முடியை அலசவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து ஐந்து மாதங்களாவது செய்து வந்தால் முடியில் உள்ள பூச்சி வெட்டு பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும். 
 • அவகடோ பழத்தின்(Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். அவகாடோவில் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமினோ அமிலம், கூந்தலில் ஈர பதத்தை தக்க வைக்க உதவுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் மசித்த அவகாடோ 3 ஸ்பூன் சேர்த்து கலக்கி முடி முழுவதும் தேய்க்கவும். 30 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் குளிர்ந்த நீரால் ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு அலசவும். 
 • ஹர்ட் ரையர், முடியை நேராக்கும் சாதனங்கள் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் முடிந்தவரை முடியை இயற்கையான முறையில் காய விடுங்கள் ஈரக் கூந்தலுடன் தலையை வாரக் கூடாது. கைகளால் முடியைக் கோதியபடியே காயவைப்பது ஒன்றே முடிக்கான பாதுகாப்பு.

 • தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காய் முடி உதிர்வதில் இருந்து முடி பிளவுபடுவது (split hair) வரை அனைத்தையும் கட்டுப்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
 • நுனி முடி பிளவு (split hair) வந்த பின்னர் அதனை சரி செய்யும் முயற்சியில் இறங்குவதை விட, வரும் முன்னர் காப்பதே நலம். நாம் அன்றாட சாப்பிடும் உணவுப் பொருட்களே நம் உடல் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டயட்ஸ்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.