கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளில் ஐ லைனர் (eye liner) தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும், அழகும் பல மடங்கு அதிகரித்து காட்டும். உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண்கள். சிலருக்கு கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. இளம் பெண்களின் மத்தியில் வில் போன்ற ஐ லைனர் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதுமானது.
gifskey, pexels, pixabay
- பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால் ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு, பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
புடவை கட்டுது எப்படி : பராமரிப்பு மற்றும் தேர்வு செய்வதற்கான பயனுள்ள குறிப்புக
gifskey, pexels, pixabay
- இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.
- ஐ லைனர் (eye liner), ஐ ஷேடோ போடும்போது கையில் நடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனை 3 எளிய வழிகளில் நீக்கிவிடலாம். ஒரு சேரில் வசதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். வாட்டமான இடத்தில் கை முட்டியை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை நடுக்காமல் இருக்க தாடை பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டால் ஆட்டம் இல்லாமல் ஐ லைனர் போடலாம்
- ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது. களைந்த உடனே அழித்தால் மேக்கப் கலையாமல் அழித்து விடலாம்.
- திரவ ஐ லைனரில் பால் போன்ற அமைப்பு இருப்பதால் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் கவனமாக பயன்படுத்தாவிட்டால் ஸ்மட்ஜாக வாய்ப்புள்ளது. முதலில் கண்ணின் மேல் இமையில் எப்படி போட வேண்டும் என பார்க்கலாம்.
gifskey, pexels, pixabay
- ஐ லைனரை தட்டையாக அதாவது ஐ லைனரின் பிரஷ்சை தட்டையாக வைத்து போட வேண்டும். நேராக வைத்து வரைந்தால் விட்டு விட்டு போட்டது போல தோற்றமளிக்கும்.
- உங்களுக்கு ஏற்ற வடிவத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன்படி மெலிதாக ஒரு கொடு போல போட்ட பின்னர் அதன் மீது அழுத்தமாக வரைய வேண்டும்.
- கண்ணின் மேல் இமையின் நடுப்பகுத்தியில் இருந்து பின்னர் வில் போன்ற வடிவத்திற்கு வரைய வேண்டும். அதிலிருந்து முன்னோக்கி வரைந்து ஆரம்ப இடத்திற்கு வர வேண்டும்.
- கீழ் இமையில் ஐ லைனர் (eye liner) போடும் போது கண் இறுதியில் இருக்கும் வில் போன்ற பகுதியில் இருந்து ஆரம்ப இடத்திற்கு வரைய வேண்டும். அப்போது தான் கண்ணிற்கு வில் போன்ற அமைப்பு கிடைக்கும்.
பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!
Youtube
- இறுதியில் கண்ணின் ஆரம்பத்தில் இரண்டு இமைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் வரைய வேண்டும். வாட்டர் ப்ரூப் மற்றும் ஸ்மட்ஜ் ப்ரூப் ஐ லைனரை பயன்படுத்துவது நல்லது.
- புதிதாக திரவ ஐ லைனர் (eye liner) பயன்படுத்துவபவர்கள் முதலில் புள்ளிகள் அல்லது சிறிய கோடுகள் வரைந்து, பின்னர் அவற்றை ஒன்றிணைத்து வரையலாம்.
- வில் போன்ற அமைப்பு இரண்டு பக்கத்திலும் ஒன்றாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வித்தியாசமான தோற்றம் இருப்பது போல தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் முன்னர் இரண்டு பக்கத்திலும் புள்ளி ஒன்றை வைத்து விட்டு வில் போன்ற அமைப்பை வரைய தொடங்கலாம்.
- கண்கள் சிறிதாக இருப்பவர்கள் முழு இமைகளிலும் ஐ லைனர் பயன்படுத்தாமல், மேல் இமையில் முழுதாக போட்டுவிட்டு கீழ் இமையில் இடமிருந்து வலமாக பாதிவரை போட்டுகொண்டால் எடுப்பாக காட்சியளிக்கும். தற்போது இந்த டிசைன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
pixabay
- கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐ லைனர் பயன்படுத்துங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.
- கண்களை அழகாக்க புருவ அழகு மற்றும் இமை முடிகளும் அவசியம். கண் இமைகள் இயற்கையாகவே நீளமா, அடர்த்தியா இருக்கிறவங்களுக்கு மஸ்காரா தேவையில்லை. அடர்த்தி குறைவா இருந்தால் மஸ்காரா தடவி அதை நீளமா, அடர்த்தியா காட்டினால் எடுப்பாக இருக்கும்.
- பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தொடர்ந்து தடவி வந்தால் கண் இமைகள் அடர்த்தியா வளரும். எந்தக் காரணம் கொண்டும் கண்களில் போட்ட மேக்அப்பை கழுவாமல் தூங்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
pixabay
தூசி மற்றும் சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை பாதுகாப்பது எப்படி!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo