தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!

தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!

பெண்கள் 25 வயதை கடந்து விட்டாலே எப்போது  திருமணம் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கும். ஆனால் தற்போதைய காலத்தில் வயது என்பது ஒரு நம்பர் தான் என்பது போல பெரும்பாலான துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். இதேபோல் சினிமா துறையிலும் தங்கள் வயதை பொருட்படுத்தாமல் தற்போது வரை காதல், கல்யாணம் என இல்லாமல் இருக்கும் நடிகைகள் குறித்த விவரங்களின் தொகுப்பை காணலாம்.

1. நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் திரைக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித் தான் தற்போதும் உள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 96 திரைப்படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மேலும் அதிகரித்துள்ளது. த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் வருன் மணியன் என்பவருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது. இதனிடையே நடிகர் ராணாவை அவர் காதலிப்பதாக தகவல்கள் வெளி வந்தது. ஆனால் தற்போது வரை நடிகை த்ரிஷா சிங்கிளாக தான் உள்ளார்.

twitter

2. நயன்தாரா

சினிமாவில் முன்னணி நடிகையாக (actress) நயன்தாரா திகழ்ந்து வருகிறார். தமிழில் முதலில் ஐயா படத்தில் அறிமுகமான இவருக்கு அப்பாதையில் இருந்தே நடிகர்கள் (actress) பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது. அந்த படத்தை தொடர்ந்து நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவரை எப்போதும் சர்ச்சைகள் துரத்தி வந்தாலும் தனது திறமையால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சிறிது காலம் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்த போதிலும், தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டார்.

twitter

தற்போது நயன்தாராவிற்கு 35 வயதாகியுள்ள நிலையில், அவர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவர் எப்போது திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆவர் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

நீச்சல் குளம்.. முத்தமிடும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் ..

3. அனுஷ்கா ஷெட்டி

அனுஷ்கா ஷெட்டி 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது முதல் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். தற்போது அவருக்கு 38 வயது ஆகும் நிலையில் இளைமையாகவே காணப்படுகிறார். தன்னுடைய இளமையின் ரகசியம் யோகா என்று அவர் கூறியுள்ளார். இன்று வரை திருமணத்தில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகர் பிரபாஸுடன் மெகா ஹிட் திரைப்படமான பாகுபலியில் நடித்தார். அப்போதில் இருந்து அவருக்கும், நடிகர் பிரபாஸுக்கும் இடையே காதல் மலர்ந்தாக தகவல்கள் கசிந்தது. மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

twitter

4. காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழில் பழனி படத்தில் அவர் அறிமுகமானார். சமீபத்தில் துளி மேக் அப் கூட இல்லாத ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு 2 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் வந்தது குறிப்பிடத்தக்கது. கல்யாணத்தை பற்றி தற்போது யோசிக்க நேரமில்லை என்று காஜல்  அகர்வால் கூறுகிறார்.

twitter

6. ராகுல் ப்ரீத்தி சிங்

ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த தேவ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பல்வேறு படங்கள் கைவசம் உள்ளதால் சினிமாவில் ஏதேனும் சாதித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் புடிக்கிறார்.

twitter

6. தமன்னா

தமிழ் கல்லூரி திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தராத போதிலும் அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 30 வயதானாலும், மெழுகு சிலை போல இருக்கும் தமன்னா தற்போது வரை சிங்கிளாகவே உள்ளார்.

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

twitter

7. ப்ரியா ஆனந்த்

கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணக்கூடாது என்று விளக்குகிறார் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழில் வாமனன், எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த் நான் என்ன பண்ணனும், எந்த வேலைக்கு போகணும்னு முடிவு பன்ற பெண்களுக்கு யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கும். சரியான நபர் கிடைத்தால் தாராளமாக கல்யாணம் பணிக்கலாம், இல்லைனா சிங்கிளா இருக்கிறதே பேஸ்ட் என்று கூறும் ப்ரியா ஆனந்த் சிங்கிளாவே இருந்து வருகிறார்.

twitter

8. ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசன் மகளான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. பின்னர் இருவருக்கும் பிரேக் அப் ஆனதாக கூறப்படுகிறது. புதிய அத்தியாயத்துடன் தனியான பாதையில் பயணிப்பதாக அவர் இன்ஸ்ட்ராகிராமில் குறிப்பிட்டுள்ளது ஸ்ருதிஹாசன் சிங்கிளாக இருப்பதை உறுதி செய்கிறது.

twitter

9. கேத்ரினா தெரஸா

மலையாள பெண்ணான இவருக்கு 30 வயதாகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழில் மெட்ராஸ் படத்தில் அறிமுகமானார். கல்யாணம் என்ற பேச்சிற்கு தற்போது இடமில்லை என கூறும் இவர், இதுவரை எவ்வித கிசுகிசுகளிம் சிக்கவில்லை. சிங்கிளாக ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

twitter

10. கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்சுக்கு தற்போது 27 வயது தான் ஆவதால் திருமணம் குறித்த ஐடியாக்கள் எதுவும் இல்லையாம். சமீபத்தில் இவர் சாவித்ரி வேடத்தில் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கீர்த்தி சுரேஷ் எவ்வித கமிட்ஸ்மென்ட்டிலும் சிக்காமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

பிக் பாஸ்பு சீசன் 3 - புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது ! புகைப்படங்கள் உள்ளே !

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo