அத்திப்பழத்தை(anjeer) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பல வகை பழங்கள் இருந்தாலும், அத்திப்பழம் சற்று மாறுபட்ட சுவையோடும், பல ஆரோக்கிய நன்மைகளோடும் இருகின்றது. இதனை பற்றி வவரிக்கவே முடியாது என்பது போல இதன் நன்மைகள் இருகின்றது. இந்த பழத்தை நீங்கள் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். உங்கள் உடலுக்குத் தேவையான போஷாக்கை இது தரும். மேலும் ஏதாவது சத்துக்கள் குறைவாக இருந்தால், அதனை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அத்திப் பழம்இருக்கும்.
பார்க்கவும், சுவைக்கவும் வித்யாசமாக இருந்தாலும், இதனை நீங்கள் தினமும் உட்கொளும் போது பல நன்மைகளைப் பெறுவீர்கள். இதனை அப்படியே சாப்பிடலாம். இருந்தாலும், பெரும்பாலோனர்கள் இதனை உலர வைத்து பின் சாப்பிடுவார்கள். உலர்ந்த அத்திப்பழம் பல உணவு வகைகளிலும் சேர்த்துக் கொள்ள பயன் படுகின்றது. இது ஒரு அற்புதமான பழ வகையாகும். உலர்ந்த பழத்தில் கொட்டைடல் மொரு மொருவென்று இருக்கும்.
அத்திப்பழத்தை பற்றி தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். உங்களுக்கு நிச்சயம் சில சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்.
அத்திபழத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள் (Nutritional facts of Anjeer)
இனிப்பிற்கு ஒரு நல்ல மாற்றாக இந்த அத்திப்பழம் இருகின்றது. இதை கேக், சாலட் என்று பல உணவு வகைகள் செய்ய பயன் படுத்துவார்கள்.
அத்திபழத்தை பற்றி நீங்கள் சில தகவல்களை தெரிந்திருந்தாலும், பின் வரும் மேலும் சில தகவல்கள் உங்களை ஆச்சரியப் பட வைக்கும். இதன் சத்துக்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், இந்த பழத்தை நிச்சயம் தவறாமல் சாப்பிடுவீர்கள். உங்களுக்காக சில முக்கிய தகவல்கள் உங்களுக்காக இங்கே:
1௦௦ கிராம் உலர்ந்த அத்திபழத்தில் நிறைந்திருக்கும் சத்துக்கள்:
கலோரிகள்-249, மொத்த கொழுப்பு- 0.9 கிராம், நிறைவுற்ற கொழுப்பு- 0.1, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 0.3 கிராம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு 0.2 கிராம், கொழுப்பு 0 மி.கி, சோடியம் 10 மி.கி., பொட்டாசியம் 680 மி.கி., மொத்த கார்போஹைட்ரேட் 64 கிராம், உணவு நார் 10 கிராம், சர்க்கரை 48 கிராம், புரதம் 3.3 கிராம்
அத்திப்பழத்தில் மேலே குறிப்பிடப் பட்டுள்ள சத்துக்கள் மட்டுமல்லாது, வைட்டமின், A, C, D, B-6, B-12 மற்றும் கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்களும் நிறைந்துள்ளது.
உலர்ந்த அத்திப்பழம்(anjeer) அனேக இடங்களில் எளிதாக கிடைக்கும். மேலும் இதனை பல வருடங்கள் நீங்கள் வைத்து பயன் படுத்தலாம். ஒரு ஆய்வின் படி, உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான நார் சத்து, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் போஷாக்குகள் கிடைக்கும் என்று நிரூபணமாகி உள்ளது.
அத்திபழத்தின் வகைகள்(Types of Figs)
அத்திபழம் பல வகையில் பல இடங்களில் கிடைகின்றன. இவை ஒவ்வொன்றும் சற்று மாறுபட்டிருந்தாலும், அதன் சுவையும், சத்துக்களும் ஒன்றே. நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே பல வகை அத்திபழங்கள்
1. அத்திப்பழம்:
இது நன்கு பழுத்து சாறு நிறைந்ததாக இருக்கும். இதனை அப்படியே சாப்பிடலாம். இதை முழுமையாக பழுக்கும் முன்னரும் சிலர் சாப்பிடுவார்கள். எனினும், இதனை 2௦ டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வைத்து பதப் படுத்தினால் அதிக நாட்கள் நல்ல நிலையில் இருக்கும்.
2. சியர்ர:
இந்த வகை அத்திப்பழம்(anjeer) ஒரு புது வகையாக கருதப் படுகின்றது. இது சற்று பெரியதாகவும், வட்ட வடிவிலும் இருக்கும். இதனை சீஸ் மற்றும் ஆலிவ் எண்ணையோடு கலந்து சலடாக சாப்பிடலாம்.
3. கிங்:
இந்த வகை அத்திப்பழம் பொதுவாக குளிர்ந்த பிரதேசங்களில் விளைவிக்கப் படுகின்றது. இது ஒரு நீர்த்துளி வடிவத்தில் இருக்கும். அடர்ந்த கத்திரிப்பூ நிறத்தில், அதிக சதைப் பிடியோடு இருக்கும். இதனை நன்கு பழுக்க வைத்து உண்ண வேண்டும்.
4. அட்ரியாடிக்:
இந்த வகை அத்திப்பழம் இளம் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறம் வரையிலான நிறங்களில் பொதுவாக வரும். இது அதிக இனிப்பு சுவையோடு இருக்கும். இது ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை அறுவடை செய்யப் படுகின்றது. ஐஸ் க்ரீம் மற்றும் சாலட் வகைகளோடு இதனை சேர்த்து உண்ணலாம்.
5. ப்ளாக் மிசன்:
இந்த வகை மிக அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். எனினும், இதற்கு இருக்கும் பெயரை போல இது கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. எனினும், அடர்ந்து நீல மற்றும் கத்திரிப்பூ நிறத்தில் இருக்கும். இதன் இனிப்பு சுவை இதனை அப்படியே சாப்பிடத் தூண்டும்.
உங்கள் வாழ்க்கை சிறக்க வாஸ்துவின் முக்கியத்துவம் – உங்கள் வீட்டிற்கு சில எளிய வாஸ்து குறிப்புகள்
6. ப்ரௌன் டர்கி:
இந்த வகை அடர்ந்த காப்பி நிறத்தில் இருக்கும். இதில் இனிப்பு சுவை குறைவாகவே இருக்கும். இதை பொதுவாக சாலட் செய்வதற்கும், ஒரு சில உணவு செய்வதற்கும் பயன் படுத்துவார்கள்.
7. கலிமிர்ணா:
இந்த அத்திப்பழம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் தோல் சற்று மஞ்சள் நிறத்தில் காணப் படலாம். இது ஒரு மாறுபட்ட சுவையோடு இருக்கும். டெசர்ட் மற்றும் சாலட் செய்வதற்கு இது அதிகம் பயன் படுத்தப் படுகின்றது.
8. காடோடா:
இந்த வகை இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இதில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும். இதனை பச்சையாக அப்படியே சாப்பிடலாம். இதை பழரசம் மற்றும் ஜாம் செய்வதற்கு பயன் படுத்துவார்கள்.
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் உடல் எடை இழப்பு (Dried figs and weight loss)
அத்திப்பழத்தை அப்படியேவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். எனினும், இதனை உலர்ந்த வகையில் சாப்பிடும் போது மேலும் பல சத்துக்கள் கிடைகின்றது. இந்த வகையில், இந்த உலர்ந்த அத்திப்பழம் உங்கள் உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது. இதற்கு முக்கிய காரணம், இந்த உலர்ந்த பழத்தில் அதிகம் நார் சத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் இருப்பது தான். இதனை நீங்கள் தயிர், சாலட் மற்றும் வேறு வகையான உணவுகளோடும் சேர்த்து சாப்பிடலாம்.
ஏன் உலர்ந்த அத்திப்பழம் உடல் எடையை குறைக்க ஏற்றதாக உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில விடயங்கள் உங்களுக்காக
1. உலர்ந்த அத்திப்பழத்தில் நிறைந்துள்ள கலோரிகள்:
அத்திபழத்தில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இதனால், நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும், உங்கள் உடல் எடையை இது அதிகரிக்காது. மேலும் இது உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் தரும்.
2. அதிக நார் சத்து நிறைந்துள்ளது
அத்திப்பழத்தில் அதிக நார் சத்தும் நிறைந்துள்ளது. நார் சத்து உங்களுக்கு எப்போதும் வயிர் நிறைந்தும் நல்ல உண்ட திருப்த்தியையும் தரும். மேலும் மல சிக்கல் ஏற்படாமலும் காக்கும். உங்கள் உடல் எடை குறைய இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
3. தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள்
அத்திப்பழத்தில் அதிகம் வைட்டமின் A, B1 மற்றும் B2 நிறைந்துள்ளது. மேலும் இதில் மங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனோடு சேர்த்து, செம்பு, இரும்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கும்.
4. கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது
அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும். இதனால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.
5. நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும்
அத்திப்பழம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப் படுத்தும். இதனால் குறிப்பாக, உங்கள் உடலில் ஏற்படக் கூடிய உடல் எடை அதிகரிப்பு, மாத விடாய் காலத்தில் ஏற்படும் வலி, மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளை இது போக்க உதவும்.
6. ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளது
அத்திப்பழத்தில் பெநோல் என்ற ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் அது உங்களுக்கு இருதய நோய் ஏற்படாமலும், பல வகை புற்றுநோய்கள் ஏற்படாமலும் இருக்க உதவுகின்றது. இது ஆக்ஸிஜனேற்றம் நிரந்த ஒரு நல்ல சத்தான உணவு என்று கூறலாம்.
7. ஜீரணத்தை அதிகப் படுத்தும்
அத்திப்பழத்தில் பீட்ட-கரோடின் இருப்பதால் மேலும் இதில் பஞ்சல்டிஹாய்ட் இருப்பதாலும் பிசின் என்னும் ஜீரணிக்கும் என்சைமை உருவாக்குகின்றது. இதனால் ஜீரணம் எளிமையாகின்றது.
உடல் நலத்தை அதிகரிக்க அத்திப்பழம் (Health Benefits of Anjeer)
அத்திப்பழம் பல நன்மைகளை தருகின்றது. இதனை தொடர்ந்து சாப்பிடும் போது, உங்கள் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மேலும் இதனை உலர்ந்த பழத்தை சாப்பிடும் போது மேலும் பல நன்மைகள் ஏற்படுகின்றது. இந்த வகையில், அத்திபழத்தின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில விடயங்கள், உங்களுக்காக
1. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்:
அத்திபழத்தில் அதிகம் நார் சத்து இருப்பதால் இது உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இந்த நார் சத்து நம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று. நார் சத்து உணவை எளிதாக ஜீரணிக்க செய்யும். மேலும் இதனால் உடலில் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நீரழிவு நோய் மற்றும் இருதய நோய் போன்ற அறிகுறிகளையும் இது வர விடாமல் செய்யும்.
2. இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்:
அத்திப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது உங்கள் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் சோடியம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இது எதிர்த்து நல்ல பலன்களை தருகின்றது.
3. ஆரோக்கியமான இனபெருக்கம் செய்ய உதவுகின்றது
அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது நல்ல இனபெருக்க ஆரோக்கியத்தை அதிகரிகின்றது. இதில் ஜின்க், மாங்கனீஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் இனபெருக்க ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகின்றது. குழந்தை பெறுவதில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், இந்த பழத்தை தினமும் சாப்பிடலாம்.
4. இருதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகின்றது:
உடம்பில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைக்க இது உதவுகின்றது. இது ஒரு வகையான கொழுப்பு சத்து. அது இரத்த அணுக்களில் அதிகம் இருக்கும். இதனால் இருதய நோய் அதிகம் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகின்றது.
சிறந்த தமிழ் படங்களின் பட்டியல் : இயக்குனர், நடிகர் குறித்த முழு விவரங்கள்!
5. மல சிக்கலை போக்கும்
இதில் அதிகம் நார் சத்து நிறைந்திருப்பதால் முக்கியமாக ஜீரணத்தை சீர் செய்ய உதவும். இதனால் மல சிக்கலும் ஏற்படாமல் தவிர்க்க இது உதவுகின்றது. மலத்தை சீராக வெளியேற்ற நார் சத்து அதிகம் தேவைப் படுகின்றது. அந்த வகையில், அத்திப்பழம் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்
6. எலும்புகளை திடப்படுத்தும்
உலர்ந்த அத்திப்பழம் அதிக கால்சியம் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. ஒரு நாளைக்கு 1௦௦௦ மில்லி கிராம் கால்சியம் ஒரு சராசரி நபருக்குத் தேவைப் படுகின்றது. இந்த வகையில், தினமும் ஒரு கணிசமான அளவு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், தேவையான கால்சியம் கிடைத்து உங்கள் எலும்புகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
7. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் படுத்தும்
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனால் உணவில் இருக்கும் சர்க்கரை உங்கள் உடம்பில் எளிதாக சார்ந்து விடும். இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது.
8. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைகின்றது
குறிப்பாக குடலில் ஏற்படும் புற்றுநோயை வரவிடாமல் தடுக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது மல சிக்கலை ஏற்பட விடாமல் தடுப்பதால் தான். இதில் நிறைந்திருக்கும் நார் சத்து உங்கள் உடலில் புற்றுநோயை எதிர்க்கத் தேவையான சக்தியைத் தருவதால், புற்றுநோய் ஏற்படாமல் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
9. கொழுப்பு சத்தை குறைக்க உதவும்
அத்திபழத்தில் நிறைந்திருக்கும் பெக்டின் உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்தை பெரிதும் குறைக்க உதவுகின்றது. பைடோ ச்டேரோல்ஸ் என்னும் பொருள் சிறப்பாக இயற்கையான முறையில் அதிக கொழுப்பு சத்தை உடலில் இருந்து அகற்ற உதவுகின்றது. இதனால் உங்கள் உடல் நல்ல ஆரோகியத்தையும் பெறுகின்றது.
10. தொண்டை வலியை போக்கும்
அத்திப்பழத்தில் முசிலேஜ் என்னும் பொருள் இருப்பதால் தொண்டையில் எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டால் அதனை போக்க உதவும். இது உங்கள் தொண்டைக்கு ஒரு பாதுகாப்பான படிவத்தை உண்டாக்கி, எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுகின்றது.
11. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிகின்றது
அத்திப்பழம் கல்லீரலில் இருக்கும் என்சைம் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனால் இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து தினமும் சாப்பிடும் போது உங்கள் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
12. கண்ணின் ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும்
இதிள் அதிக வைட்டமின் A இருப்பதால் உங்கள் கண்ணின் ஆரோக்கியத்தை இது சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளையும் ஏற்படாமல் தடுகின்றது.
சரும பாதுகாப்பிற்கு அத்திப்பழம் (Figs for skin care)
அத்திப்பழம் உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சரும பாதுகாபிர்க்கும் பயன் படுகின்றது. இதனை சரியான முறையில் பயன் படுத்தும் போது உங்களுக்கு பல நன்மைகள் கிடைகின்றது. இதனால் உங்கள் சருமம் நல்ல பொலிவோடும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருகின்றது. எப்படி அத்திப்பழம் உங்கள் சரும ஆரோகியதிர்க்கு பயன் படுகின்றது என்பதை இங்கே காணலாம்
1. மிருதுவான சருமம்
வயதாவதால் அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்களால் உங்கள் சருமம் பொலிவை இழந்து வறண்டு காணப் படலாம். எனினும் அத்திப்பழத்தை நீங்கள் பயன் படுத்தும் போது, உங்கள் சருமம் மிருதுவாகவும் மற்றும் நல்ல பொலிவையும் மீண்டும் பெறுவதை நீங்கள் காணலாம்.
2. பருக்களை போக்கும்
அத்திப்பழத்தை தேனோடு சேர்த்து நன்கு மசித்து உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைவதை நீங்கள் காணலாம். இது உங்கள் முகப்பருக்களை போக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
3. இறந்த சருமத்திற்கு உயிர் கொடுக்கும்
அத்திபழத்தின் தோல் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்களை அகற்றி, நல்ல மிருதுவான மற்றும் உயிர் உள்ள சருமத்தை உங்களுக்கு கொடுக்கும்.
4. சருமத்திற்கு ஈரத்தன்மையை கொடுக்கும்
உங்கள் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்க போதுமான ஈரத்தன்மை தேவை. இந்த வகையில், சிறிது அத்திப்பழத்தை எலுமிச்சை பழ சாரோடு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால், நல்ல பொலிவும், புத்துணர்ச்சியும் உங்கள் முகத்திற்கு கிடைக்கும்.
5. கரும்புள்ளிகளை போக்கும்
அத்திபழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளை போக்க உதவும். இதன் சாற்றை தினமும் அல்லது அவ்வப்போது உங்கள் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கரும் புள்ளிகள் மறையும்.
அத்திப்பழம் பேஸ் பாக் செய்வது எப்படி (Anjeer Face pack Preparation tips)
அத்திப்பழ பேஸ் பாக் உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் உங்கள் முகத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் போஷாக்கைத தரும். இந்த பேஸ் பாக் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்;
· ஒரு தேக்கரண்டி அத்திப்பழ பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்
· அதே அளவு தயிர் எடுத்துக் கொள்ளவும்
· இதனுடன் சிறிது தேன் கலந்து கொள்ளவும்
· அனைத்தையும் நன்கு கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
· பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
· இதனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் நலல் பலன் கிடைக்கும்
தலை முடி பாதுகாபிற்கு அத்திப்பழம் (Figs for hair care)
அத்திப்பழம் சரும பாதிகாப்பு மற்றும் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், இது தலை முடியை நன்கு வளரவைக்கவும் உதவுகின்றது. இந்த வகையில், இது எப்படி உங்கள் தலை முடியை பாதுகாகின்றது என்று இங்கே பார்க்கலாம்
மிருதுவான கூந்தல்:
அத்திப்பழ எண்ணை உங்கள் கூந்தலுக்கு நல்ல போஷாக்கைத் தரும். சிறிது அளவு அத்திப்பழ எண்ணையை உங்கள் தலை முடியில் தேய்த்து வந்தால் அது தலை முடி வளர்ச்சியை அதிகப் படுத்துவதோடு நல்ல ஆரோக்கியமான கூந்தலையும் பெற உதவும்.
தலை முடி வளர்ச்சியை அதிகப் படுத்தும்
இதில் அதிகம் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் உங்கள் தலை முடி ஆரோக்கியமாக வளர இது உதவுகின்றது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 அல்லது 3 அத்திப்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் தலை முடியில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.
நீண்ட அடர்த்தியான கூந்தல்
பெண்கள் இப்படி பட்ட கூந்தலை பெரிதும் விரும்புவார்கள். அத்திப்பழ எண்ணையை நீங்கள் தொடர்ந்து பயன் படுத்தி வரும் வரும் போது உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!
கேள்வி பதில்கள்(FAQ)
1. ஒரு நாளைக்கு எத்தனை அத்திப்பழம் சாப்பிடலாம்?
சராசரியாக 40 கிராம் அத்த்ப்பழம் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். இதில் இருக்கும் சத்துக்களே ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு போதுமானதாக இருக்கும்.
2. அத்திப்பழம் உடல் எடையை குறைக்க உதவுமா?
இதில் இருக்கும் நார் சத்து நல்ல ஜீரணத்தை ஏற்படுத்தி, உங்கள் வயிறு நிறைந்த இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதால், நீங்கள் அதிகம் உணவு உண்ண ஆர்வம் காட்ட மாட்டீர்கள். எனினும், இந்த அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்களுக்கு போதுமானதாகவும், உடல் எடையை குறைக்க உதவுவதாகவும் இருக்கும்.
3. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடலாமா?
இதில் நார் சத்து இருப்பதால், இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதனை நிச்சயம் சாப்பிடலாம்.
4. அதிக அளவு அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?
இது ஒரு மலமிலக்கியாக செயல் படுவதால், இந்த பழத்தை அதிக அளவு உண்ணும் போது வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பரிந்துரைக்கப் பட்ட அளவே இதனை உண்ண வேண்டும்.
5. அத்திப்பழத்தை சாப்பிட ஏற்ற நேரம் எது?
உலர்ந்த அத்திபழத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். 5 அத்திபழத்தை நீரில் நன்கு ஊற வைத்து தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நலல் பலன்களை தரும்.
6. இரவு நேரத்தில் அத்திபழத்தை சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம். எனினும், குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.