இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வேலை தேடி வரும்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வேலை தேடி வரும்!

மேஷம்

அலுவலத்தில் இன்று வேலை நிலையானதாகவும், சுமூகமாகவும் இருக்கும். உங்கள் விருப்பப்படி வேலையில் கடைசி நிமிட மாற்றங்களை நீங்கள் கொண்டு வருவீர்கள். உடன் இருப்பவர்களுடன் அதிக சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த வேலையில் பிசியாக இருப்பார்கள். மாலை நேரத்தை நீங்கள் தனியாக செலவழிக்க விரும்புவீர்கள்.

ரிஷபம்

வேலையில் உங்கள் மனதை ஒழுங்கமைக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்கள் மற்றும் மற்றவர்களின் ஆலோசனையால் உங்களை நீங்களே குழப்பி கொள்ளாமல் உறுதியாக இருங்கள். நாளின் இரண்டாம் பாதியில் நல்ல செய்தி வரும், ஆனால் முடிவுகள் இன்று தெரியாது. குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் நண்பர்களுக்காக நேரம் செலவழிக்க நேரிடும். உங்களது நண்பரின் உறவில் தெளிவு ஏற்பட உங்களை உணர்ச்சி ரீதியாக சார்ந்து இருக்கலாம்.

மிதுனம்

உங்கள் எண்ணங்கள், செயல்களை சீரமைக்க வேண்டும். நீங்கள் ஒன்றை சொல்லி விட்டு வேறு ஒன்றை செய்தால் மகிழ்ச்சியை தராது. எந்த ஒரு காரியத்தையும் தள்ளி போட வேண்டாம். குடும்ப உறுப்பினரின் உணர்ச்சி தேவைக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.  சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்

நேற்றையதை விட இன்று வேலை மிகவும் சிறப்பாக இருக்கும். இறுதி முடிவுகளில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். மற்றவர்களுடன் மென்மையாக இருங்கள். மற்றவர்களின் நாடகம் காரணமாக குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் தரலாம். நாளின் இரண்டாம் பாதியில் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

நிஷா கணேஷிற்கு வளைகாப்பு நடத்திய கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!

சிம்மம்

வேலை நிலையானதாக இருக்கும். இன்று உங்களுக்கு கருணை மற்றும் தெளிவு கிடைத்ததாக உணருவீர்கள். உங்களது யோசனைகள் மற்றும் படைப்பு ஆற்றல்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. உங்கள் துறையில் புதிய நபர்களை நீங்கள் சந்திக்கலாம். அவர்களுடன் புதிய நட்பு மலரும்.

கன்னி

வேலை நிலையானதாக இருக்கும்போது, தனிப்பட்ட பிரச்சினைகளால் நீங்கள் திசை திருப்பப்படுவீர்கள். அதனால் உங்களால் சிறந்த வேலையை தர முடியாத நிலை உருவாகும். சில விஷயங்களை தீர்க்க சக ஊழியர்கள் உங்களை அணுகுவார்கள். மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சற்று விலகி இருங்கள். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் சமூக ரீதியாக நீங்கள் துண்டிக்கப்பட்டதாக உணருவீர்கள். தனியாக நேரம் செலவழியுங்கள், இல்லையென்றால் நீங்கள் மன ரீதியாக சோர்வாக இருப்பாக உணர்வீர்கள்.

துலாம்

உங்கள் வேலையை சிறந்த வழிகளில் மேம்படுத்த புதிய யோசனைகள் மற்றும் உத்திகளைக் கொண்டு வருவீர்கள். அதற்கு சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அதனை செயல்படுத்துவதற்கு முன் சில தொழில்நுட்ப சிக்கல்கள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இன்று வாய்ப்புகள் வரும். வேலை முன்னுரிமையாக இருப்பதால் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு வரும் புதிய வேலையில் தெளிவு கிடைக்கும். உங்களுக்கான பொறுப்புகள்  அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை வேடிக்கையாகவும், பரபரப்பாகவும் இருக்கும். கடந்த காலங்களில் உங்களுடன் சண்டையிட்ட  பழைய நண்பரை சந்திப்பீர்கள். மன்னிப்பவராக இருங்கள்.

தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!

தனுசு

வேலையில் கடைசி நிமிட மாற்றங்கள் விரக்தியை ஏற்படுத்தும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண வேண்டும். வேலை மெதுவாக இருக்கும். நிலுவையில் உள்ள தொகையை வழங்குவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். கடைசி நிமிட திட்டங்கள் காரணமாக சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். போதுமான அளவு உறங்கம் தேவை.

மகரம்

அலுவலகத்தில் உங்களையும், சக பணியாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். வேலை சீராக இருக்கும் போது நிதி பிரச்சனை ஏற்படும். புதிய நண்பர்களை சந்திக்கும் போது இயல்பாக இருங்கள். அதே நேரத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும்.

கும்பம்

அலுவலகத்தில் இன்று புதிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளதால் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுடனான தொடர்பு நாள் முதல் பாதியில் மெதுவாக இருக்கும். உங்கள் துணையின் உணர்ச்சி சிக்கல்களால் குடும்ப வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கும். சமூக வாழ்க்கையில் நேற்றை விட அதிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்து கொள்ள வேண்டாம்.

மீனம்

நீங்கள் திட்டமிடாத எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடக்காது. அலுவலத்தில் நீங்கள் எதிர்க்கபட்டதாக உணரலாம். அதற்காக நீங்கள் உங்களையோ, மற்றவர்களையோ குறை சொல்ல வேண்டாம். உங்கள் நேரத்தை நீங்கள் செலவழியுங்கள். நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதால் குடும்ப வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கும். உங்கள் ராசிக்கு (astro) எந்த விதமான பதிலடியும் உங்களுக்கு மோசனமான விளைவை தரலாம்.

பிக் பாஸ்பு சீசன் 3 - புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது ! புகைப்படங்கள் உள்ளே !

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo