இன்று பணவரவும் பூரண மன அமைதியும் வெற்றியும் இந்த ராசிகளுக்கு கிடைக்க போகின்றன !

இன்று பணவரவும் பூரண மன அமைதியும் வெற்றியும் இந்த ராசிகளுக்கு கிடைக்க போகின்றன !

இன்று புதன்கிழமை துவிதியை திதி பூராட நட்சத்திரம். ஆனி மாதம் 4ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று மிக நீண்ட நாள் போல தோன்றலாம். பல வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்து போட்டுகொண்டு செய்வீர்கள். குடும்ப வாழ்வில் எல்லோரும் உங்களின் உதவியை எதிர்நோக்கியே காத்திருப்பார்கள். உரசல்களை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

வேலை நிலையானதாக இருந்தாலும் உடன்பணிபவர்கள் செயலால் அதிருப்தி ஏற்படும். அதிலிருந்து விலகி உங்களுக்கு எது முக்கியமோ அதில் உங்கள் கவனத்தை செலுத்துவது நன்மை தரும். தலைவலி உடலில் நீர்ச்சத்து இல்லாமை போன்றவைகளால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணங்களை விட்டு விடுங்கள்

மிதுனம்

இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தது போல இல்லாததால் நீங்கள் எரிச்சலடையலாம். நிறை வேலைகள் நீங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்றாலும் உங்கள் கவனமின்மையால் எல்லாவற்றையும் இழக்க வேண்டி வருகிறது. நேரத்திற்கு சாப்பிடுங்கள். குடும்ப உறவுகள் நிலையாக இருக்கும்.

கடகம்

வேலை நெட்டி நிமிரும். தொடர் குழப்பங்களால் பணிபுரிபவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும். உங்கள் தொண்டை மற்றும் முழங்கால்களை கவனியுங்கள். உணர்வு நிலை மாற்றங்கள் உங்கள் வாழ்க்கை துணையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். கடன்கள் தீரும்

சிம்மம்

வேலை செய்பவர்கள் மீது அவநம்பிக்கையோடு இருப்பீர்கள். அதிக கவனமும் ஒருங்கிணைப்பும் இருந்தால் இதனை சரி செய்யலாம். பொறுமையோடு இருந்தால் மட்டுமே வேலை வாங்க முடியும். அடுத்தவர்கள் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். நண்பர்களோடு இருப்பது நல்லது.

கன்னி

முக்கியமான மீட்டிங் ஒன்று மிக மெதுவாக நடத்த வேண்டி வரும். ஒட்டு மொத்த நபர்களும் உங்கள் கருத்தை கேட்டு கொண்டிருப்பதால் கவனித்து பேசவும். வீட்டில் நீங்கள் பேசாமல் இருப்பதால் தவறான புரிதல்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை உடையாமல் இருக்கும்.

நீச்சல் குளம்.. முத்தமிடும் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் ..

 

 

துலாம்

நடந்து கொண்டிருப்பவைகளால் மனதிருப்தியும் அமைதியும் அடைவீர்கள். வேலை எப்போதும் போல இருக்கும் ஆனால் திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல் நலம் இல்லாமல் போகலாம். வாழ்க்கை துணையுடன் நேரம் செலவழிப்பது உறவை மேம்படுத்தும். அவர் ஒதுக்கப்பட்டவராக உணர்கிறார். சிக்கனமாக இருங்கள்.

விருச்சிகம்

மிக கவனமாகவும் நேர்மையாகவும் இருங்கள். உங்களுடைய தவறுகளை நீங்கள் ஏற்க மறுப்பதால் சிரமங்கள் உங்களுக்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் இருந்து விலகி ஓடுவது மேலும் சிக்கல்களைத்தான் உருவாக்கும். உங்கள் கண்களை கவனிக்கவும். உதவிகள் கிடைக்க தாமதம் ஆகும்.

தனுசு

புதிய சிந்தனைகள் மற்றும் மாற்று கருத்துக்கள் உங்கள் நாளை அற்புதமாக மாற்றும். குழு உறுப்பினர் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் அவர்களை சமாளிக்க உங்களால் முடியும். குடும்பத்தில் கடந்த கால தவறுகளை தற்போது சுட்டி காட்டாமல் இருப்பதே நல்லது. தவறாக புரிந்து கொள்பவராக இருப்பதை விட கவனமாக கேட்பவராக இருங்கள். உற்சாகமான நாள்.

மகரம்

இன்று உங்கள் பதவி , பொறுப்புகள், போன்றவற்றை மாற்றியமைக்கும் நாள். நீங்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய நாள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும்.

கும்பம்

உங்கள் உடல்நலனில் கவனம் வேண்டும். இல்லை என்றால் இந்த நாளை அது குலைத்து விடும். குடும்ப நபர்கள் உதவியாக இருப்பார்கள். உங்கள் உடல் கேட்கும் ஓய்வை அதற்கு கொடுங்கள். செயல்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

மீனம்

நடக்கும் எல்லாவற்றையும் உங்களுக்கு நடப்பதாகவே எடுததுக் கொண்டால் வாழ்க்கை சிரமமாக இருக்கும். எதை செய்தாலும் முழு கவனத்தோடு செய்து விட்டு மறந்து விடுங்கள். இது உங்கள் நாளை நன்மையாக மாற்றும். உங்கள் கண்களையும் தொண்டையையும் கவனித்து கொள்ளுங்கள். அடுத்தவருடைய உணர்ச்சி குறுக்கீட்டால் குடும்ப வாழ்க்கையில் சில நாடகங்கள் அரங்கேறும். வெளிப்படை பேச்சு நல்லது.

 

ஜோதிட பலனை கணித்தவர் Astro ஆஷா ஷா

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.