இருக்கும் இடத்தை தேடி பணமும் பரம்பரை சொத்தும் வர போகிற அதிர்ஷ்டக்கார ராசியில் உங்க ராசி இருக்கிறதா ! சரிபாருங்கள் !

இருக்கும் இடத்தை தேடி பணமும் பரம்பரை சொத்தும் வர போகிற அதிர்ஷ்டக்கார ராசியில் உங்க ராசி இருக்கிறதா ! சரிபாருங்கள் !

இன்று புதன் கிழமை தசமி திதி அஸ்த நட்சத்திரம் வைகாசி மாதம் 29ம் தேதி. இன்று உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம். ( Astro )மேஷம்


நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் ஏற்கனவே இலக்கை அடைந்திருந்தாலும் மேலும் முன்னேற கூடிய தருணம் இது. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அங்கிருந்து வளர தொடங்குங்கள். புதிய பாதைகளில் பயணியுங்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மேலும் வெற்றிகளை தேடி தரும். அபிரிமிதமான செல்வமும் வெற்றியும் உங்கள் வசப்பட போகிறது.


ரிஷபம்


உங்களுக்கு தரப்பட்டதை நீங்கள் ஏற்று கொண்டாலும் தொடர்ந்து நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள். அதற்கு பதிலாக உங்களுக்கு கிடைத்த நல்ல ஆசீர்வாதங்களை நினைத்து பார்த்தால் இன்னும் அதிகமான அருள் உங்களை வந்து சேரும். நீங்கள் நினைப்பதை விட அதிகமானதை இந்த பிரபஞ்சம் தர காத்திருக்கிறது. உங்களது முயற்சியில்தான் எல்லாமே இருக்கிறது


மிதுனம்


உலகின் ஆக சிறந்த வசதிகள் எல்லாம் உங்கள் விரல் நுனியில் இருக்கிறது. உங்கள் கடந்த காலம் காயங்களால் ஆகியிருந்தாலும் இப்போது சந்தோஷத்திற்கான நேரம். உங்கள் உழைப்பிற்கான அறுவடையை நீங்கள் பெற போகும் நேரம். பணம் மற்றும் பாராட்டுக்கள் உங்களை தேடி வரும். நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது.


கடகம்


யாரோ ஒருவர் உங்களுக்கு நல்ல செய்தியையோ அல்லது தேவையான செய்தியையோ கூற போகிறார். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். தெளிவான மனத்தோடும் உள்ளுணர்வின் தாக்கங்களோடும் நீங்கள் இருப்பீர்கள். இது உங்களுக்கு புதிய சிந்தனைகள் மற்றும் உத்வேகத்தை கொடுக்கும்.


சிம்மம்


ஒரு புதிய வேலைவாய்ப்பு அல்லது இடமாற்றம் உங்களுக்கு ஏற்படலாம். ஒரு அந்தரங்க பரிசு அல்லது பரம்பரை சொத்து உங்களுக்கு கிடைக்கலாம். இது கொண்டாடும் நேரம். சந்தோஷத்தில் நிறைந்திருங்கள். இதற்கான நன்றியுணர்வோடு இருங்கள்.


கன்னி


உங்கள் அருகே நீங்கள் வைத்திருக்கும் நபர்கள் உங்களுக்கு உண்மையானவரா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் பிடியை விட்டு விட்டால் நீங்கள் நிலையான போட்டி ஒன்றின் மூலமாக ஏற்படும் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள். மீதியை பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும்.


துலாம்


அதிரடியான முடிவுகளை நீங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பின்னால் வருந்த நேரிடலாம். பழைய பகையை முன்னால் கொண்டு வராதீர்கள் அதனால் உங்கள் தொடர்புகளை இழக்க நேரிடலாம். ஒரு சமாதானம் வரும்போது ஏற்று கொள்ளுங்கள். திறந்த மனதோடும் அடுத்தவரை ஏற்று கொள்ளும் குணத்தோடும் இருப்பதற்காக சந்தோஷப்படுங்கள்


விருச்சிகம்


காதல் என்பது எப்போதும் உறவுகளை உருவாக்கும் செயல் அல்ல. அது தரும் படைப்பு திறன் கொண்ட ஆற்றல் உங்களை எப்போதும் நிம்மதியாகவும் இதமாகவும் இளக்கமாகவும் வைத்துக் கொள்கிறது. நீங்கள் செய்யும் சரியான செயல்களில் இருந்துதான் முழுமையான திருப்தி உணர்வு கிடைக்கிறது. இதுவும் காதல்தான். உத்வேகமாக இருங்கள்.


தனுசு


உங்கள் துணிகரமான முயற்சிக்கு பெரிய விலை கொடுக்க நேரிடலாம். தேவையற்ற பாரங்களை சுமப்பதன் மூலம் உங்களை வாழ்க்கையை நீங்கள் சிக்கலாக்கி கொள்கிறீர்கள். வாழ்க்கை , குடும்பம், வேலை, நண்பர்கள் போன்றவற்றை சமநிலையில் வைக்க கற்றுக்கொள்ளுங்கள். தொழிலோ மனிதர்களோ உங்களுக்கு சந்தோஷம் தராத எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.


மகரம்


உங்களை நீங்களே பார்த்து கொள்ள முடியும். உங்களால் எந்த செயலையும் செய்ய முடியும். உங்களுக்கு எல்லாமே எதிராக இருந்தாலும் உங்களிடம் போதிய வளங்கள் இல்லாமல் போனாலும் நீங்கள் வெல்வீர்கள். உங்கள் திறமை அத்தகைய பலம் கொண்டது. உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். கோபத்தை குறையுங்கள்


கும்பம்


நீங்களோ அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஒருவரோ மனதை மாற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பீர்கள். அது உங்கள் எண்ணங்களின் போக்கையும் நடத்தையையும் மாற்றும். சண்டைகளில் விருப்பம் கொள்ளாதீர்கள். அது விவாதங்களையும் தவறான புரிதல்களையும் உருவாக்கி விடும்.


மீனம்


வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவங்களும் நமக்கு பல பாடங்களை கற்பிக்கின்றன. அது எவ்வளவு சிறிய அனுபவமாக இருந்தாலும் கூட நாம் கற்று கொள்ள அதில் ஏதாவது ஒன்று இருக்கிறது. நீங்கள் உங்களை சுற்றிலும் உள்ள விஷயங்கள் பற்றி எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்களோ அவ்வளவு விஷயங்கள் நீங்கள் கற்று கொள்ளலாம். அதனை கற்று கொள்ளும்போது உங்களுக்கு தெளிவும் ஞானமும் கிடைக்கும். வலிகளை விடவும் சந்தோஷங்கள் அற்புதமான ஆசிரியர் என்பதை மறந்து விடாதீர்கள்.


----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.