இன்று மகிழ்ச்சியாக இருக்கும் மூன்று ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ள சரிபாருங்கள்!

இன்று மகிழ்ச்சியாக இருக்கும் மூன்று ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ள சரிபாருங்கள்!

இன்று புதன் கிழமை. விகாரி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் நவமி திதி ஸத்தம் நட்சத்திரம். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) பார்த்து பலன் பெறுங்கள்.

மேஷம்  

அலுவலகத்தில் வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணருவீர்கள். நீங்கள் இரவில் சரியாக தூங்காததால் அப்படி இருக்கலாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மீது வெறுப்பை காட்ட வேண்டாம். காலையில் வேகமாக எழுந்து உங்களுக்கான நேரத்தை செலவழியுங்கள். உங்கள் சோர்வு குறித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலைப்படுவார்கள். மேலும் அது குறித்து உங்களிடம் கேக்க முயற்சி செய்வார்கள். 

ரிஷபம் 

அலுவலகத்தில் வேலை மெதுவாக போகும் என்பதால் நீங்கள் வெறுப்பாக உணர்வீர்கள். நீங்களே உங்களை குற்றவாளியாக நினைத்து கொள்வீர்கள். ஆனால் சிந்திய பாலை நினைத்து அழுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கொடுக்கல், வாங்கலை முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். எனினும் குடும்ப உறுப்பினரின் உடல்நலத்திற்கு சிறிதளவு கவனம் தேவைப்படும். மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்காதீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களை சந்திப்பீர்கள். 

ஆரம்பமே அபிராமியின் காதலில் .. முதல் நாளே திட்டு வாங்கிய தர்ஷன்.. பிக்பாஸ் 3 சுவாரஸ்யங்கள்

மிதுனம் 

இன்று (astro) நீங்கள் விரும்பியதை செய்யும் சரியான நாளாக இருக்கும். வேலையில் உற்பத்தி இருக்கும் மற்றும் சக ஊழியர்கள் ஆலோசனைக்காக உங்களை அணுகலாம். காகித வேலை தொடர்பாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் உங்களுக்காக பரபரப்பான ஒரு மாலை நேரத்தை பணிகளை பட்டியலிடுவார்கள். நீங்கள் அவர்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களாக இணைவீர்கள். நாள் இறுதிக்குள் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படும்.

கடகம் 

அலுவலகத்தில் உடன் பணி புரிபவரின் தாமதத்தால் வேலை மெதுவாக நடைபெறும். அதனால் நீங்கள் எரிச்சலைடைவீர்கள். உங்கள் வேலையை ஒழுங்கமைக்கவும். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேலைக்கு பொறுப்பேற்று அதனை தொடங்குங்கள். மேலும் சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் , இல்லையென்றால் அசிடிட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மோதலை தவிருங்கள். மேலும் அவர்களின் செயல்கள் குறித்து விமர்சிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

சிம்மம் 

அலுவலகத்தில் உங்கள் வேலையை நீங்கள் மறுசீரமைக்க வேண்டும். இது உங்களை ஏமாற்றமடைய செய்யலாம். உங்கள் முயற்சியால் உடனிருப்பவர் மகிழ்ச்சியடையமாட்டார். என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, அதன்படி வழங்க வேண்டும். தனிப்பட்ட முறையில் விஷயங்களை எடுத்துக்கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலும் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். சமூக வாழ்க்கை வேடிக்கையாக இருக்கும்.

youtube

கன்னி 

வேலை நிலையானதாக இருக்கும். உங்களுக்கு வழங்கும் சில அங்கீகாரம் அல்லது வாடிக்கையாளருடனான ஒப்புதல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். படைப்பாற்றல் உச்சத்தில் இருக்கும் என்பதால் அதை சந்தேகிக்க வேண்டாம். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.

துலாம் 

அலுவலகத்தில் வேலை தேங்கி கிடக்கும். ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் அல்லது புதிய திட்டங்களில் உங்கள் பங்கு குறித்த தெளிவை பெறுவீர்கள். சில ஆலோசனை கூட்டம் நடக்க தாமதம் ஆகலாம் . ஆனால் இறுதியில் உங்களுக்கு ஆதரவாக அனைத்தும் நடக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நல பாதிப்பால் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள். அதனால் சமூக வாழ்க்கையில் செலவிட நேரம் கிடைக்காது. 

விருச்சிகம் 

மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளவோ அல்லது வேகத்தை கட்டுப்படுத்தவோ முடியாது என்பதால், உங்கள் மனதின் வேகத்தை நீங்கள் குறைக்க வேண்டும். நீங்களே உங்களது பொறுப்பை ஏற்றுக்கொள்வது நல்லது. வேலை காரணமாக குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும். உங்கள் துணை அவரது சொந்த வேலை பிரச்சினை காரணமாக பரபரப்பாக இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான நேரத்தை அவர்களுக்கு கொடுங்கள். உங்கள் கண்கள் மற்றும் தொண்டையை கவனித்துக் கொள்ளுங்கள்.

தனுசு 

விரிவாக்க யோசனைகள் அல்லது புதிய வேலையைச் சேர்ப்பதன் மூலம் வேலை நிலையானதாக இருக்கும். உங்களது துறையில் உள்ளவர்களிடமிருந்தும் நீங்கள் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். நேரத்தை நிர்வகிக்கும்போது மிகவும் சீரானதாக இருங்கள். உங்கள் வயிற்றை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பாக இருப்பார்கள். பழைய நண்பர்களை சந்தித்து இரவு உணவு சாப்பிடுவீர்கள். சமூக வாழ்க்கை சீராக இருக்கும்

மகரம் 

வேலை நிலையானதாக இருக்கும். மேலும் உங்களுக்கு அதிக வேலை மற்றும் பொறுப்பு கிடைக்கும். ஆனால் அந்த வேலைகளுக்கு தலைமை வகிக்க நீங்கள் விரும்ப மாட்டிர்கள். உங்கள் இலக்குகளை நீங்கள் மறுசீரமைப்பீர்கள். சிந்தனையின் தெளிவுபடுத்த மன வலிமையுடன் செயல்படுங்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். நீங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள். 

கலகலப்பாக நடந்த நடிகை சமீரா ரெட்டியின் சீமந்தம் : கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

கும்பம் 

உங்கள் (astro) வேலையில் சமநிலையை கண்டறியவும். இல்லையென்றால் நீங்கள் பணிகளை விட்டு விலகி இருப்பதாக தோன்ற வாய்ப்புள்ளது. அனால் இன்று நீங்கள் உங்கள் முன்னால் நாடாகும் விஷயங்கள் குறித்து நன்கு புரிந்துகொள்வீர்கள். உங்கள் மனதின் வேகத்தை மெதுவாக்குங்கள். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். நிலுவையில் உள்ள வேலையை முடிக்க நீங்கள் குடும்பத்திலிருந்து விலகுவீர்கள். கடைசி நிமிட சமூக திட்டங்கள் உற்சாகமாக இருக்கும்.

மீனம் 

அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் அதிகமாக இருப்பதால் பரபரப்பாக இருக்கும். புதிய பொறுப்புகள் வரும். நடந்துகொண்டிருக்கும் பணிகள் குறித்த தெளிவு கிடைக்கும். உங்கள் குழு உறுப்பினருக்கான வேலையையும் நீங்கள் முடிக்க வேண்டியிருக்கும். என்பதால் நீண்ட  நேரம் வேலை செய்வீர்கள். ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. உங்கள் முதுகு மற்றும் முழங்கால்களை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் திட்டங்களில் பிஸியாக இருப்பார்கள்.

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo