இன்று இந்த ஐந்து ராசிக்காரர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள் : உங்கள் ராசியை சரி பாருங்கள்!

இன்று இந்த ஐந்து ராசிக்காரர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள் : உங்கள் ராசியை சரி பாருங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை. விகாரி ஆண்டு ஆனி மாதம் 8ம் நாள் ஷஷ்டி திதி ஆயில்யம் நட்சத்திரம். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்த்து பலன் பெறுங்கள்.

மேஷம்

இன்று உங்களுக்கு நிறைய திட்டங்கள் இருக்கலாம். ஆனால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் நீங்கள் ஏமாற்றம் அடைய நேரிடும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். உடல் ரீதியில் எதையும் உணரமாட்டீர்கள். வீட்டில் இருந்தபடி புத்தகம் படித்தும், திரைப்படம் அல்லது நண்பர்களுடனான உரையாடல் என நாள் இனிமையாக செல்லும். வெளியே உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்றைய நாள் நிதானமாக செல்லும். ஆனால் நீங்கள் நிறைய வேலை செய்வீர்கள். வேலை தொடர்பாக உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் குறித்து யோசிப்பீர்கள். எனவே உங்கள் வேலையை ஒழுங்கமைக்க அல்லது மின்னஞ்சல்களை அனுப்ப சிறிது நேரம் செலவிடலாம். நீங்கள் எடுத்த அல்லது எடுக்கவிருக்கும் சில தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள். ஆக்ரோஷமாக இருப்பதை தவிருங்கள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும் என்பதால் சமூக வாழ்க்கை சீராக இருக்கும்.

திருமணம் செய்ய வற்புறுத்தல் : ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டுவதாக நடிகை நிலானி புகார்!

மிதுனம்

இன்று நன்கு திட்டமிடப்பட்ட நாளாக இருக்கும். மேலும் மற்றவர்களுக்கும் வேலை  திட்டமிடும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். திட்டங்களில் கடைசி நிமிடத்தில் சிறிய தாமதம் அல்லது மாற்றங்கள் இருக்கலாம். எனினும் நண்பர்களுடன் நேரம் செலவழித்து ஒரு வேடிக்கையான நாளாக போகும். உங்கள் முழங்கால்கள் மற்றும் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்

இன்று நன்றாக ஓய்வெடுப்பீர்கள். மதிய நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடனான திட்டத்தில் சிறிது தாமதம் அல்லது திட்டத்தில் மாற்றங்கள் இருக்கலாம். அடுத்து வரவுள்ள திட்டங்களை ஒருங்கமையுங்கள். மாலை நேரத்தில் சமூக வேலைகளில் பரபரப்பாக இருப்பீர்கள். உங்களை போன்ற எண்ணங்கள் கொண்ட புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம்.

சிம்மம்

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு(astro) நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நாளாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடைபெறும். காரமான உணவை சாப்பிடுவதைத் தவிர்த்து, சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். குடும்ப உறுப்பினர்களிடையே பார்வை வேறுபாடு இருக்கும். ஆனால் நீங்கள் அதனை சரி செய்வீர்கள். உங்களை உணர்ச்சிவசப்படுத்திய நண்பரை மன்னித்து விடுங்கள். வரும் வாரம் பரபரப்பாக இருக்கும் என்பதால் மாலை நேரத்தை தனியாக செலவழியுங்கள்.

கன்னி

நீங்கள் எல்லா இடங்களிலும் இன்று பரபரப்பாக (astro) காணப்படுவீர்கள். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பும் அளவுக்கு சுற்றியுள்ள மக்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். கடந்தகாலம் குறித்து உடனிருப்பவர்களுடன் பேச வேண்டாம். ஜிம்மிற்குச் செல்வது அல்லது ஓடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

துலாம்

இன்று உங்களது வேலைகளை செய்ய முடியாத அளவுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் பல வேலைகள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க நேரிடும். உங்கள் முழங்கால்களை கவனித்துக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

இன்றைய நாளை நீங்கள் உற்சாகமாக தொடங்குவீர்கள். இன்று உங்களுக்கு ஒய்வு தேவை. மேலும் நீங்கள் நன்றாக உணரும் வரை தனியாக நேரத்தை செலவிடுங்கள். ஒரு நண்பருடன் தரமான நேரத்தை செலவிடுவது அமைதியாக இருக்க உதவும். குடும்பத்தினருடனான கடைசி நிமிட திட்டங்கள் வேடிக்கையாக இருக்கும், ஆனால் சோர்வாகவும் இருக்கும். உங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தவிர்த்து விடுங்கள்.

தனுசு

ஒரு சூப்பர் பரபரப்பான நாளாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. நீங்கள் தனியாக நேரத்தை செலவிட விரும்பலாம். இன்று வெளியே செல்வது, மக்களை மகிழ்விப்பது மற்றும் பழைய நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர இந்த நாளில் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் முதுகு மற்றும் வயிற்றை கவனித்துக் கொள்ளுங்கள்.

பேரழகு மின்னும் பொலிவான முகம் வேண்டுமா! செலவில்லாமல் செய்யலாம் ரெட் ஒயின் பேஷியல்!

மகரம்

இன்றைய நாள் திரைப்படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவது என மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடல்கள் என நேரம் செலவழிப்பீர்கள். சமூக வாழ்க்கைக்கு இன்று முக்கியத்துவம் கொடுக்க இயலாது. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

கும்பம்

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு (astro) ஒழுங்கற்ற நாளாக இருக்கும். நீங்கள் என்ன செய்ய முயற்சித்தாலும், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அதனை விட்டு வெளியேற்றப்படுவீர்கள். போதுமான தூக்கம் மற்றும் உணவு ஆறுதலாக இருக்க உதவும். குடும்ப உறுப்பினர்களின் வேலைக்கு உங்களை அணுகலாம். அவர்களின் தேவைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

மீனம்

இன்று நன்கு சீரான நாளாக இருக்கும். நீங்கள் செய்ய விரும்பும் வேலை செய்ய நீங்கள் தனியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து அவர்களை மகிழ்விப்பீர்கள். நீண்ட காலங்களாக இழந்த குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். வேலை தொடர்பான சில ஆலோசனைகளுக்காக ஒரு நண்பர் உங்களை அணுகலாம்.

அதிசய நன்மைகள் கொண்ட வெள்ளை சோளம்! இப்படியும் சாப்பிடலாமா?

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo