கை நிறைய காசு புரளும் யோகம் உங்களுக்கு உள்ளதா : சரி பாருங்கள் ராசி பலனை!

கை நிறைய காசு புரளும் யோகம் உங்களுக்கு உள்ளதா : சரி பாருங்கள் ராசி பலனை!

மேஷம்

வேலை பரபரப்பாக இருக்கும். நாளின் இரண்டாம் பாதியில்  கவனம் தேவை. அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள். உங்களுடன் பழகுபவர்களை புரிந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். உங்கள் ராசிக்கு (astro) சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு முன்னர் இழந்த நண்பர்களை தொடர் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்

குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உங்களுடன் இருப்பவர்களின் நாடகத்தால், ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். தனிப்பட்ட முறையில் எந்த விஷயங்களையும் எடுத்து கொள்ள வேண்டாம். சமூக வாழ்க்கையில் பிசியாக இருக்கும் போது தனிப்பட்ட மன அழுத்தம் காரணமாக உங்களை நாடுபவர்களை தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று நீங்கள் அனைத்தையும் சமமாக எடுத்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலை இருந்து கொண்டே இருப்பதால் உங்களுக்கு மன ரீதியில் சவாலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரக்கூடும் என்பதால் அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீற வேண்டாம். நண்பர்களால் மன அழுத்தம் ஏற்படும். உடனிருப்பவர்களின் அரசியலுக்கு நீங்கள் இழுக்கப்படலாம் என்பதால் சகிப்புத்தன்மை தேவைப்படும்.

கடகம்

அலுவலகத்தில் இன்று வேலை மிகவும் நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள காகித வேலைகள் அனைத்தையும் முடிப்பீர்கள். ஆனால் வேலையில் கூடுதல் நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்று புதிய நபர்களுடன் வேலை செய்யலாம். அன்பானவர்களுடன் நேரம் செலவழிப்பதால் குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதால் சமூக வாழ்க்கை மெதுவாக செல்லும்.

நிஷா கணேஷிற்கு வளைகாப்பு நடத்திய கியூட் வீடியோ வெளியீடு : ரசிகர்கள் வாழ்த்து!

சிம்மம்

 நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலை நிலையானதாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் முடிவுகளால் நீங்கள் சிக்கி தவிப்பீர்கள். நாளின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். நண்பர்களுடன் இருக்கும் போது சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

கன்னி


அலுவலகத்தில் வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் அடுத்த கட்ட வேலை செய்ய நீங்கள் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் நிதி குறித்த கவலை இருக்கும். வேலை தேடி கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் உறுப்பினர்கள் ஏதேனும் ஒரு வேலையை செய்ய சொல்லி உங்களை தூண்டலாம். எந்த வேலையையும் தள்ளி வைக்காதீர்கள். உங்கள் நண்பர்கள் பயணம் செல்ல திட்ட மிடுவார்கள். உங்கள் மனதை பின்பற்றுங்கள்.

துலாம்

ஆக்கபூர்வமான யோசனைகளும், கடைசி நிமிட மாற்றங்களுடன் வேலையில் பலனளிக்கும். ஆனால் வேலையை முடிக்க கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதுகு மற்றும் கண்களில் கண்களில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். சமூக ரீதியாக மக்கள் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என நினைப்பீர்கள். தேவைப்படும்போது நீங்களே எழுந்து நிற்கவும். மற்றவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் மேலும் கண்ணியமாக இருங்கள்.

தமிழ் சினிமாவில் இன்று வரை சிங்கிளாக இருக்கும் நடிகைகள்!

விருச்சிகம்

உடனிருப்பவர்களால் குழப்பம் ஏற்படுவதால், குழப்பங்களுக்கு மத்தியில் இருப்பதாக உணருவீர்கள். அவர்களின் குழப்பத்தை தீர்க்க முயற்சி செய்வதை விட உங்களது இலக்கில் கவனம் செலுத்துங்கள். வேலை நிலையானதாக இருக்கும். உங்கள் ராசிக்கு (astro) சிக்கனம் தேவைப்படும் நாள். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை அற்புதமான இருக்கும்.

தனுசு

இன்று பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் கோபமடைந்தால் அதன் தாக்கம் வரும் நாட்களை பாதிக்கும். புதிய வேலை கடினமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தனியாக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.

மகரம்

வேலை நிலையானதாக இருக்கும். உங்களை தேடி நிறைய பொறுப்புகள் வரும். உடனிருப்பவர்கள் உங்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அவர்களின் தெளிவுக்காகவே உங்களுடன் இருப்பார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதால் நீங்கள் மன அழுத்தமாக காணப்படுவீர்கள். சமூக கடமைகள் அதிகரிக்கும்.

கும்பம்

எந்த ஒரு விஷயத்திலும் முடிவு செய்வதற்கு முன்னர் மற்றவர்களின் பார்வையில் இருந்தும் யோசிக்க வேண்டும். நீங்கள் விரைவில் செய்ய வேண்டியது அதிகம் என்பதால் ஒத்திவைப்பதைத் தவிர்க்கவும். பழைய வாடிக்கையாளரிடமிருந்து புதிய வேலை பயனளிக்கும். உங்கள் வேலையில் புதிய முறையை சேர்ப்பது குறித்து திட்டமிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் சமூக வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும்.

மீனம்

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரலாம். ஆனால் அதை நீங்கள் உங்களது இலக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் தலையீட்டால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். உறுதியாக இருங்கள். நண்பர்கள் உங்களை அமைதிப்படுத்துவார்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குவார்கள்.

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

பிக் பாஸ்பு சீசன் 3 - புதிய மாற்றங்களுடன் தயாராகி இருக்கிறது ! புகைப்படங்கள் உள்ளே !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo