வீட்டில் இருந்தபடியே லட்சாதிபதி ஆக விரும்புபவரா நீங்கள் ? உங்களுக்காகவே சில வாய்ப்புகள் !

வீட்டில் இருந்தபடியே லட்சாதிபதி ஆக விரும்புபவரா நீங்கள் ? உங்களுக்காகவே சில வாய்ப்புகள் !

சிக்னல்களால் தாமதமாகி சூரியனிடம் வறுபட்டு கசகசவென வெயிலில் வேர்த்து விறுவிறுத்து அலுவலகம் ஓடி அங்கே ஐந்து நிமிடம் தாமதமாக நுழைந்ததற்கு அரை நாள் விடுப்பு போடப்பட்டு.. திரும்ப வீட்டுக்கும் போக முடியாமல் செய்வதறியாமல் சம்பளமின்றி வேலை செய்பவர்கள் பலர்.


இப்படிப்பட்ட வேலையெல்லாம் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்டாக லட்சங்களில் சம்பாதிக்க விரும்புகிறோம் என்பவர்களுக்கான பதிவுதான் இது.நாம் தினமும் அவசியமே இல்லாமல் இணையத்தில் பல மணி நேரம் செலவழிக்கிறோம். அதனையே கொஞ்சம் ஒழுங்குபடுத்தி உங்கள் திறமைகளை அதனுடன் ஒருங்கிணைத்தால் நிச்சயம் நீங்கள் நினைத்தபடி வீட்டில் இருந்தே லட்சங்களை சம்பாதிக்கலாம்.


இதற்காகவே இணையத்தில் பல வேலைவாய்ப்புகள் (jobs) வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் ஒரு தனி நபராக அல்லது குழுவாக கூட பதிவு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் சொல்லியிருக்கும் வேலைகளை முடித்து கொடுக்க வேண்டும். அதற்கான வருமானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் வகையிலான ஆன்லைன் பாதுகாப்புகள் இருக்கிறது.நீங்கள் இணையத்தில் செலவிடும் ஒவ்வொரு மணி நேர வேலைகள் பொறுத்து அதன் சம்பளம் 1000 முதல் 5000 வரை இருக்கலாம். இதில் ஒரு சில வேலைகளை மட்டும் உங்களுக்கு உதாரணமாக பட்டியல் இட்டுள்ளோம்.


எழுத்து பணிகள்


இ புத்தகம் எழுதுதல் , டேட்டாக்களை பதிவு செய்தல், கதை எழுதுதல் போன்ற பல விஷயங்களை இங்கே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட முறையில் பிளாக் எழுதுவதை விட தனியார் நிறுவனத்திற்கு ஊதிய அடிப்படையில் வேலை செய்து கொடுப்பது உங்களுக்கு நன்மையே தரும்.தொழில்நுட்ப உதவியாளர்


உங்களுக்கு தொழிநுட்பங்கள் மீது ஆர்வம் என்றால் நீங்கள் அது பற்றிய படிப்பினை வைத்திருந்தீர்கள் என்றால் உங்களால் இங்கே பல லட்சங்களை ஈட்ட முடியும். இதற்கு நீங்கள் கணினி மொழிகளான சி, சி++, ஜாவா, டாட் நெட் போன்ற ப்ரோக்ராம் பற்றிய அறிவுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த ப்ரோக்ராம்களை நீங்கள் எழுதுவதன் மூலம் எண்ணற்ற வாய்ப்புகளை பெற முடியும்.வெப் டிசைனிங்


இந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்றால் நீங்கள் இதனை முயலலாம். பல முக்கிய நிறுவனங்களுக்கு வெப் டிசைனிங் செய்யும் வாய்ப்புகளை பெற முடியும். கூடவே அலுவலக அழுத்தங்கள் ஏதும் இல்லாமல் நீங்களாவே கொடுத்த நேரத்துக்குள் உங்கள் விருப்ப நேரங்களில் வேலை செய்து கொடுக்கலாம்.எடிட்டர் வேலைகள்


உங்களுக்கு வீடியோ எடிட்டிங் தெரியும் போட்டோ எடிட்டிங் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த வேலையை முயற்சிக்கலாம். இதை போலவே லோகோ வும் உங்களுக்கு வடிவமைக்க பிடிக்கும் என்றால் இதனையும் முயற்சிக்கலாம். இதன் மூலம் நீங்கள் மணிக்கு 2 முதல் 3 ஆயிரங்கள் வரை சம்பாதிக்க முடியும்.புகைப்படக்கலைஞர்


உங்களுக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்காக இருந்தால் அதனை உங்கள் வருமானமாகவும் ஆக்கி கொள்ளலாம். உங்களிடம் தேவையான கிரியேட்டிவிட்டி மற்றும் புகைப்பட சாதனங்கள் இருந்தால் போதுமானது. உங்கள் புகைப்படங்களை விற்பதன் மூலமாகவோ அவர்களுக்கு புகைப்படம் எடுத்து கொடுப்பதன் மூலமாகவோ நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்ள முடியும்.virtual உதவியாளர்


இது உண்மையில் டெக்னலாஜி வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு அற்புத மாற்றம். நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்தபடியே ஒருவருக்கு உதவியாளராக பணியாற்ற முடியும். அவர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்தல் அவர்களின் மெயில்களை படித்து பதில் அனுப்புதல் அவர்கள் தினசரி வழக்கங்களை பின்பற்ற செய்தல் போன்ற உதவியாளர் விஷயங்கள் அடங்கும். பாஸை பார்க்காமலே அவருக்கு வேண்டியதை செய்து தரும் அதிர்ஷ்டக்கார உதவியாளர் ஆக விரும்பினால் இதனை முயற்சிக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு 500 முதல் 800 வரை இதில் வருமானம் கிடைக்கும்.உங்களுக்கு பிடித்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கீழே ஐந்து ஆன்லைன் நிறுவனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்துமே பல வருட அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள். பல பணியாளர்களின் விமர்சனங்கள் அடிப்படையில் இந்த ஐந்து நிறுவனங்கள் பற்றிய தகவல் உங்களுக்கு தரப்படுகிறது.


ஈலேன்ஸ் (elance)


இந்த இணையதளத்தை உலக அளவில் பலரும் பார்வையிடுகின்றனர். அதிகமான எண்ணிக்கை கொண்ட ஆன்லைன் வேலைகள் இங்கே கொட்டி கிடக்கின்றன. உங்கள் திறமை மற்றும் முன் அனுபவங்கள் குறித்து நீங்கள் ஒரு சுயவிவர பட்டியலை தயாரித்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியை பெறவும் விலை கேட்கும் முறை உண்டு. குறைந்த விலை அதிக தரம் என்பதை உங்கள் மந்திரமாக்குங்கள்.ஓடேஸ்க் (odesk)


இந்த இணையமும் ஈலேன்ஸ் போன்றதுதான். இங்கே நீங்கள் சைன் அப் செய்த உடனே வேலைகள் கிடைக்க ஆரம்பிக்கும். நீங்கள் பிரெஷர் என்றாலும் அனுபவஸ்தர் என்றாலும் எப்படிப்பட்டவருக்கும் தேவையான வேலைகள் இங்கே குவிந்து கிடக்கின்றன. இன்றே நீங்கள் ஆரம்பித்து உங்கள் வருமானத்தை அதிகரியுங்கள்.பிரீலேன்சர் (freelancer) https://www.freelancer.in/


இந்த இணையதளம் பகுதி நேர பணிகளுக்கு பல்வேறு வித வேலைவாய்ப்பினை வழங்குகிறது. பணியாளர்களின் நன்மதிப்பை பெட்ரா இந்த தளம் நீங்கள் பணிபுரிய பாதுகாப்பானது.Fiverr (பைவ்வர்) https://www.fiverr.com/


இந்த இணையதளத்தின் மூலம் உங்கள் வேலைகளை நீங்கள் விற்க முடியும். ஒவ்வொரு வேலையும் ஹிக்ஸ் எனப்படும். இது ரூ 350 என்கிற மதிப்பில் இருக்க வேண்டும். உங்கள் எந்த வகையான திறமையையும் இங்கே விற்க முடியும். ஓவியம் , புகைப்படம் , லோகோ மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என நீங்கள் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்.குரு Guru https://www.guru.com/


இந்த இணையதளமும் மற்றவை போலவே பகுதி நேர பணியாளர்களை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் ஏராளமான வேலைகள் எல்லாவித மக்களும் செய்யும் வண்ணம் இருக்கிறது. முயன்று பாருங்கள்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---               


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.