குறைந்த செலவில் வயநாடு போகணுமா ! வழி இருக்கு வாங்க !

குறைந்த செலவில் வயநாடு போகணுமா ! வழி இருக்கு வாங்க !

மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையான மலை தொடர்களுக்கு நடுவே அமைந்திருப்பதுதான் வயநாடு. இங்கே உலகெங்கும் இருந்து மக்கள் வருகின்றனர். இப்போது அரசியலில்ராகுல் காந்தி இந்த தொகுதியைத் தான் போட்டியிட தேர்ந்தேடுத்தார்.


அதன் பின் வயநாடு இன்னும் பிரபலமாகி விட்டது. கண்களுக்கு அலுக்காத இந்த வயநாட்டின் இயற்கை காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்க எளிமையான செலவில் சென்று வர IRCTC உடன் இணைந்து உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.


தமிழ்நாட்டில் எந்தெந்த மாதங்களில் எங்கெங்கு சுற்றுலா செல்லலாம் - ஒரு விரிவான கட்டுரை                       வயநாட்டை சுற்றிலும் எடக்கல் குகைகள் மீன்முட்டி அருவி குருவா டிவீப் சூச்சிப்பாறை அருவி செம்பரா சிகரம் ஆகிய இடங்கள் சுற்றுலாத் தலங்களாக நிரம்பியிருக்கிறது. இயற்கை எழில் பொங்கும் வயநாட்டிற்கு குறைந்த செலவில் செல்ல சுற்றுலா பேக்கேஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறது IRCTC.


நீங்கள் வாரம் வரும் வியாழன் அன்று மட்டுமே இந்த பேக்கேஜை பயன்படுத்த முடியும். இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை ஆறு மணிக்கு புறப்படுகிறது. சென்னையில் இருந்து வயநாடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை இதற்காக நீங்கள் பயன்படுத்தி கொள்ள வழி செய்திருக்கிறது IRCTC.


சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை - அதிசயமும் அற்புதமும்                        சென்னை மங்களூரு எக்ஸ்பிரஸ் 12685 இந்த ரயில் மாலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி அதிகாலை 4 மணியளவில் வயநாடு சென்றைடைகிறது.


அதை போலவே சுற்றுலா முடிந்த உடன் கோழிக்கோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸில் நீங்கள் மறுநாள் காலை 8 மணிக்கு சென்னையை வந்தடையலாம்.                    
சுற்றுலா பேக்கேஜிற்கான விபரம்


தனி நபர்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் irctc அலுவலகத்தை அணுகி தங்கள் சந்தேகங்களை கேட்டு கொள்ளலாம்.


ஏலியன்கள் வந்து போகும் இமயமலை.. அதிர வைக்கும் மர்மங்கள்.. கைலாஷ் - மானசரோவர் ஒரு தேடல் !புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                      


---                                     


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.