உங்கள் சருமத்திற்கு போஷாக்கு அளிக்க சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய குறிப்புகள்!

உங்கள் சருமத்திற்கு போஷாக்கு அளிக்க  சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய குறிப்புகள்!

வறண்ட மற்றும் பொலிவற்ற சருமம் நம் தோற்றத்தை பாதிப்பதோடு, இயற்கையாக இருக்கும் அழகையும் குறைக்கிறது. ஒவ்வொருவரும் தான் அழகாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். இவ்வாறு இருக்கும் போது, வாழ்க்கை சூழலாலும், இடையுறாது வேலைகளில் ஈடுபட்டு தன் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும் போது நம் தோற்றமும் பாதிக்கப் படுகிறது.


நல்ல முகத் தோற்றம் ஒருவருக்கு மிக முக்கியம். இது குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியம். பெண்கள் நல்ல முகப் பொலிவோடு இருக்கும் போது அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.


மேலும், சோர்வடைந்த மற்றும் வறண்ட சருமம் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும். காலப்போக்கில் இதனால் உங்களுக்கு பல உபாதைகளும் ஏற்படக் கூடும். இது நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் சருமத்தின் மீது கவனம் (பராமரிப்பு ) செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.


உங்கள் சருமம் (skin) ஏன் பாதிப்புக்குள்ளாகிறது? 


ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையே இதற்க்குக் காரணம். நாம் வேலை பார்க்கும் இடம், நம் வாழ்க்கை முறை, நாம் சருமத்திர்க்காக பயன் படுத்தும் பொருட்கள், நம் உணவு பழக்கங்கள் என்று பல காரணங்களால் உங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது.


உங்கள் சருமத்தை பாதிக்கும் சில முக்கிய விடயங்கள்:


1. தூசி நிறைந்த இடம்  நீங்கள் அதிகம் தூசி நிறைந்த இடத்தில் வசிக்கும் போது உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் அரிப்பு போன்ற உபாதைகள் உங்கள் சருமத்தில் ஏற்படக் கூடும்.


2. காரம் நிறைந்த உணவு


நீங்கள் அதிகம் காரம் மற்றும் ,மசாலாக்கள் நிறைந்த உணவை உண்ணும் போது உங்கள் இரத்த அணுக்களை அது பாதித்து உங்கள் சருமத்தில் சில உபாதைகளை ஏற்படுத்துகிறது


3. காப்பின்


காப்பின் உங்கள் சருமத்தை அதிகம் வறட்சி அடையச் செய்கிறது. மேலும் இது விரைவாக உங்கள் சருமம் முதிர்வடையவும் செய்கிறது. இதனால் விரைவாக உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படுகிறது.


4· மதுஅதிக அளவில் ஒருவர் மது அருந்தும் போது சருமம் பாதிக்கப் பட்டு விரைவாக முதிர்வடையும் தோற்றம் ஏற்படுகிறது


5. எண்ணை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு: நீங்கள் அதிகம் கொழுப்பு மற்றும் எண்ணை நிறைந்த உணவு பொருட்களை உண்ணும் போது உங்கள் சருமம் பாதிக்கப் படுகிறது. இதனால் முகத்தில் பரு, அரிப்பு, தடிப்பு, சருமம் சிவந்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது


6. மன அழுத்தம்: ஒருவர் அதிக அளவில் மன அழுத்தத்தோடு இருக்கும் போது பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. இதனோடு சேர்ந்து சருமமும் பாதிக்கப் படுகிறது. இதனால் உங்கள் அழகும், இளமையான, தோற்றமும் குறைகிறது.


உங்கள் சருமம் போஷாக்குப் பெற என்ன வழி?


இன்றைய விரைவாக ஓடும் வாழ்க்கை முறையில் தனியாக உங்களால் நேரம் ஒதுக்கி உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியாத சூழல் இருக்கலாம். எனினும், சரும தோற்றம் மற்றும் முக அழகு மிக முக்கியம். உங்களுக்கு உதவும் வகையில் உங்களுக்காக இங்கே சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய டிப்ஸ் (tips) :


1. அதிகம் தண்ணீர் பருகுங்கள்முடிந்த வரை உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சோம்பல் படாமல் அல்லது தள்ளிப் போடாமல் அல்லது குறைவாக இல்லாமல் போதிய தண்ணீர் பருகுங்கள். இதனால் உங்கள் உடலில் நீர் சத்து அதிகரித்து உங்கள் சருமம் பொலிவு பெறத் தொடங்கும்.


2. இயற்க்கை பொருட்களைக் கொண்டு பேஸ் பாக் செய்யுங்கள்


தேன், பால், தயிர், தக்காளி, கடலை மாவு போன்ற எளிமையாக கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு பேஸ் பாக் செய்ய முயற்சி செய்யுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் முகத்தில் தடவி, மிதமாக மசாஜ் செய்து, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவும் போது உங்கள் புத்துணர்ச்சி ஏற்படுவதை நீங்கள் காணலாம்.


3. முகத்தில் எண்ணைத் தடவுங்கள்


 தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெய் போன்ற ஏதாவது சருமத்திற்கு ஏற்ற எண்ணையை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு முறையாவது நன்கு தேய்த்து குளிப்பதால் உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து நீங்கள் நல்ல தோற்றம் பெற உதவும்.


4. அதிகம் கீரை மற்றும் பச்சை காய்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்முடிந்த வரை நீர் சத்து மற்றும் நார் சத்து நிறைந்த காய் வகைகள் மற்றும் கீரை வகைகளை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உள்ளிருந்து உங்கள் சருமத்திர்க்குத் தேவைப்படும் சத்துக்களை, விட்டமின்களை மற்றும் தாதுப் பொருட்களைக் கொடுக்கும். இதனால் உங்கள் சருமம் நல்ல பொலிவுப் பெரும்.


5. ரசாயனம் இல்லாத குளியல் பொருட்களை பயன் படுத்துங்கள்: முடிந்த வரை ரசாயனம் கலந்த சோப் மற்றும் ஷம்பூக்களைத் தவிர்ப்பது நல்லது. இதனால் உங்கள் சருமம் விரைவாக வறட்சி அடைந்து போஷாக்கை இழக்கிறது. அதனால் வீட்டிலேயேத் தயார் செய்த ஸ்நானப் பொடி மற்றும் சியக்கை போன்றவற்றை பயன் படுத்தி வருவது நல்லது.


6. சத்து நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்: எப்போதும் நீங்கள் காலையில் உண்ணும் உணவில் அனைத்து சத்துக்களும் நிறைந்துளதா என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். காலையில் நல்ல சத்து நிறைந்த உணவை உண்ணும் போது உங்கள் உடலுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் சருமத்திற்கும் தேவையான போஷாக்கு மற்றும் சத்து கிடைக்கிறது.


7. உடற் பயிற்சிதினமும், குறிப்பாக அதிகாலை வேளைகளில் உடற் பயிற்சி செய்யும் போது உங்கள் இரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதனால் உங்கள் சருமத்திர்க்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, குறிப்பாக காலை வேளைகளில் பிரணவாயுவின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் சருமம் அதனை எளிதில் உள்வாங்கி நல்ல பொலிவைப் பெறுகிறது.


எத்தகைய உணவு உங்கள் சருமத்திற்கு ஏற்றது?


நாம் உண்ணும் உணவு நம் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் அழகை நிர்ணயிக்கிறது. எனினும் நம்மில் பலர் அதற்க்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதனால் உடலிலோ அல்லது சருமத்திலோ ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுகிறோம். மேலும் ரசாயன கலவைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது, தற்ச்சமயம் உங்கள் உடல் குணமடைவது போலத் தெரிந்தாலும் நாளடைவில் பாதிப்புகளுக்குள்ளாகிறது. இதனால் உங்கள் சருமம் பெரிய அளவில் பாதிக்கப் படுகிறது. உங்கள் உடலும் சருமமும் நல்ல பொலிவுப் பெற சிறந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.


உங்கள் சருமம் நல்ல போஷாக்குப் பெற சில உணவு பொருட்கள் 


1. கொழுப்பு சத்து நிறைந்த மீன்ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் சருமம் நல்ல போஷக்கைப் பெரும். மேலும் இது உங்கள் சருமம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும் உதவும். ஒமேக 3 கொழுப்பு அமிலம் உங்கள் சருமத்தை எப்போது ஈரப் பதத்தோடும், போஷாக்கோடும் வைத்துக் கொள்ள உதவும். இதனால் வறண்ட சருமம் விரைவில் குணமாகும்.


2. அவக்கோட்


 இதில் வைட்டமின் E சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொழுப்பு சத்து உங்கள் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.   சூரிய கதிர்களால் உங்கள் சருமம் பாதிக்கப் பட்டுள்ளது என்றால், இது ஒரு நல்ல நிவாரணியாக உங்களுக்கு இருக்கும். பாதிக்கப்பட்ட சருமத்திற்கு போதுமான பிராணவாயு கிடைக்க இது உதவும். மேலும் இதில் வைட்டமின் C சத்தும் நிறைந்துள்ளது. இதனால் வறண்ட, கடினமான மற்றும் போஷக்கில்லாத சருமத்தை இது மெருகூட்டும்.


3. பால்இது மற்றுமொரு சிறந்த உணவு. தினமும் பால் பருகுவதோடு, கடலை மாவுடன் சேர்த்து பேஸ் பாக் செய்து வாரத்திற்கு இரண்டு முறையாவது தடவி மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் நல்ல பொலிவு பெரும். இது உங்கள் சருமத்திர்க்குத் தேவையான எண்ணை சத்தை கொடுத்து சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும்.


4. சூரியகாந்தி விதை


இது உங்கள் சருமத்திர்க்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. இதில் வைட்டமின் E, செலெனியம் மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது. இவை சருமம் நல்ல ஆரோக்கியம் மற்றும் பொலிவு பெற மிகவும் உதவுகிறது.


5. தக்காளி


இதனை நீங்கள் உணவில் பயன் படுத்துவதோடு நேரடியாக உங்கள் சருமத்திலும் பேஸ் பாக்காகவும் செய்து பயன் படுத்தலாம். தக்காளியில் பீட்டா-கரோடின், லைகோபீன் மற்றும் லுடீன் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சூரிய கதிர்களால் உங்கள் சருமம் பாதிக்காமல் பாதுகாக்கிறது. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தக்காளி ஒரு நல்ல உணவு பொருளாக உள்ளது.


 


6. பீட்ரூட்


இதில் அதிகம் வைட்டமின் A மற்றும் E நிறைந்துள்ளது. இது உங்கள் உடலையும் சருமத்தையும் சுத்திகரிக்க உதவுகிறது. பீட்ரூட் உங்கள் உடல் மற்றும் சருமத்திர்க்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு நல்ல நிறத்தையும் பெற உதவுகிறது. இதனால் நீங்கள் மேலும் அழகாகத் தோற்றமளிப்பீர்கள்.


7. வெள்ளரிக்காய்இதில் நீர் சத்து நிறைந்துள்ளதால் நீங்கள் உணவில் பயன் படுத்துவதோடு உங்கள் சருமத்திலும் நேரடியாக பயன் படுத்தலாம். இதில் கலோரிகள் இல்லை. இதனால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. மேலும் சோர்ந்து காணப் படும் சருமத்திற்கு இது உயிரூட்டம் வகையில் தேவையான சத்துக்களைத் தருகிறது.


8. வால்நட் (வாதுமை கொட்டை)


இது உங்கள் சருமத்திர்க்கேற்ற ஒரு நல்ல உணவுப் பொருள். இதில் ஒமேக 3 மற்றும் ஒமேக 6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இதனால் சோரியாசிஸ் போன்ற சருமத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும். வால்நட்டில் வைட்டமின் E, C மற்றும் செலெனியம் உள்ளது. மேலும் இதில் புரத சத்தும் உள்ளது. இதனால் உங்கள் சருமம் நல்ல போஷாக்குப் பெறுகிறது.


இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது மட்டுமல்லாது நீங்கள் அவ்வப்போது குளிர்ந்து நீரில், உங்கள் முகத்தை எந்த சோப்பும் இல்லாமல் கழுவி, வந்தால், சூடு குறைந்து பருக்கள் மற்றும் வறட்சி குறைந்து ஆரோக்கியமாக இருக்கும். முடிந்த வரை மன அழுத்தம் மற்றும் பதற்றம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது நீங்கள் எப்போதும் இளமையாகவும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்க உதவும்.


பட ஆதாரம்  - giffy,gifskey,instagram


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.