உங்கள் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி? பயன் தரும் குறிப்புகள்

உங்கள் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி? பயன் தரும் குறிப்புகள்

ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கால கட்டத்தில் நாம் நல்ல நிலைக்கு முன்னேறி(self improvement) வர வேண்டும் என்று எண்ணுவார்கள். பலர் பல குறிக்கோள்களுடன் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் அவர் தன் வாழ்க்கையை ஒரு நல்ல குறிக்கோளுடனும், அர்த்தத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள் என்பதை குறிக்கிறது. எனினும், அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தாலும், பலரால் எண்ணியபடி வெற்றி பெற முடியாமல் போகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் தெரிந்து கொண்டு தேவையான மற்றும் சரியான முயற்சிகளை(self improvement) எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.


சுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம் அணுகும் முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள் குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தான். பலர் தெளிவற்ற குறிக்கோள்களுடன் இருப்பதை நாம் காண்கிறோம். மேலும் பலர் தங்களது நேரத்தை சரியாகத் திட்டமிடத் தெரியாமல், வீணாக்குவதையும் நாம் காண்கிறோம். இப்படி சரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன்  இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும்(self improvement) இல்லாமல் ஒரே இடத்திலேயே நிர்ப்பீர்கள்.


ஏன் ஒருவர் சுய முன்னேற்றத்திற்கு(self improvement) முக்கியத்த்துவம் கொடுக்க வேண்டும்?
ஒருவர் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அவர் நினைத்த காரியத்தில் எளிதாக வெற்றி பெற முடியும். ஒருவர் சுய முன்னேற்றத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு இங்கே சில காரணங்கள்.


உங்கள் முன்னேற்றத்தை பற்றி நீங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால், அடுத்தது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுவீர்கள். இதனால் உங்களுக்கு தெளிவான பாதையும் பிறக்கும். உங்கள் குறிக்கோளில் நீங்கள் ஒரு தெளிவு பெறுவீர்கள். சரியான முயற்சிகளை எடுப்பதோடு, நேர்மறை நோக்கங்களையும் வளர்த்துக் கொள்ள தொடங்குவீர்கள்.


tips-about-self-improvement003


  • சுய முன்னேற்றத்திற்கான முயற்சிகள்(self improvement) உங்களை உற்சாகப்படுத்தும். இதனால் நீங்கள் உங்கள் குறிக்கோள்களை விரைவாக முடிக்க முயல்வீர்கள்

  • உங்கள் வாழ்க்கையில் ஒரு முழுமைப் பெற்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்

  • உங்கள் தவறுகளை எளிதாக நீங்கள் புரிந்து கொண்டு அதனைத் திருத்தி சரியான பாதையை நோக்கி பயனிப்பீர்கள்

  • உங்கள் முயற்சிகள்(self improvement) அனைத்தும் உங்கள் முன்னேற்றத்தை நோக்கி நேர்மறையாகவே இருக்கும்

  • உங்கள் தன்னமிப்க்கையை அதிகப்படுத்தும். நீங்கள் உங்கள் சுய முன்னேற்றத்திற்கான சரியான பாதையை நோக்கி செல்லும் போது உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்

  • தனித்து செயல் படுவீர்கள். எந்த காரியம் எடுத்தாலும் அதற்கு மற்றவர்களின் உதவி இல்லாமல் நீங்கள் உங்களை மட்டும் நம்பி தனித்து செயல் படத் தொடங்குவீர்கள். இது உங்கள் முன்னேற்றப் பாதையில் நீங்கள் சரியாக செல்குரீர்கள் என்பதை உறுதி படுத்தும்


உங்கள் சுய முன்னேற்றத்தை(self improvement) அதிகரிக்க சில எளிய மற்றும் பலன் மிகுந்த குறிப்புகள்
சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பின், அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் என்னதான் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்திருந்தாலும் எப்படி அதை செயல் படுத்துவது என்று தெரியாததால் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றினால், உங்கள் முன்னேற்றத்தில் வெற்றி பெறலாம்.


உங்களுக்கு உதவ, இங்கே சில பலன் தரும் குறிப்புகள்


வெற்றி பெரும் நோக்கத்தோடு இருங்கள்
முதலில் நீங்கள் எண்ணியதில் வெற்றி அடைந்து விட்டதாகவும், சாதித்து விட்டதாகவும் எண்ணுங்கள். இந்த எண்ணம் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தை(self improvement) நோக்கி முதல் படியை எடுத்து வைக்க உதவும். நீங்கள் எப்படி என்னுகுறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும். அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டதாக அதிகம் கற்பனை செய்து பார்த்து உங்கள் ஆள் மனதிற்குள் ஒர் மகிழ்ச்சியையும், உற்ச்சாகத்தையும் ஏற்படுத்துங்கள்.


உங்கள் குறிக்கோள் என்னவென்று எழுதுங்கள்
நீங்கள் முன்னேற முடிவு செய்து விட்டால், அடுத்ததாக உங்கள் குறிக்கோள் என்ன மற்றும் அதற்காக நீங்கள் எனென்ன செய்யப் போகுரீர்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி பட்டியலிடுங்கள். இந்த குறிப்புகள் அவ்வப்போது, காலபோக்கில் நீங்கள் சரியாக செயல் படுகுறீர்களா அல்லது உங்கள் திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உதவும்.


தினந்தோறும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்
தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் நீங்கள் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் முயற்சி(self improvement) தீவிரம் அடையும். நீங்களும் உங்கள் குறிக்கோளை விரைவாக அடைந்து விட முடியும்


தினந்தோறும் கற்பனை செய்து பாருங்கள்
இது மற்றுமொரு முக்கியமான குறிப்பு. நீங்கள் தினமும், உங்கள் முன்னேற்றப் பாதையில் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும். உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டதாகவும் கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களுக்குள் ஒரு உற்சாகம் ஏற்படும். இதனால் நீங்கள் மேலும் ஊக்கமடைவீர்கள்.


எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும்
நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு முயற்சி(self improvement) செய்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு சில மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை ஏற்படுவது இயல்பே. இதனால் நாம் கோபப் படுவது மற்றும் பதற்றம் அடைவது என்று நம் மனம் பாதிக்கப் படும். அவ்வாறு நேராமல், முடிந்த வரை உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும், எந்த தடை ஏற்பட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் உங்கள் குறிக்கோளை மட்டும் நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது மேலும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரிக்கும்.


தவறுகளை கண்டறியுங்கள்
நீங்கள் அவ்வப்போது சரியாகத் தான் உங்கள் சுய முன்னேற்றத்தை நோக்கி செல்குறீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களை நாம் செய்யும் சில தவறுகளை கவனிப்பதில்லை. இது என்றாவது ஒரு நாள் நம்மை சிக்கலில் கொண்டு விடக்கூடும். அதனால் நீங்கள் அவ்வப்போது ஏதாவது சுய முன்னேற்ற முயற்சியில்(self improvement) தவறுகள் இருக்கிறதா, நாம் சரியாகத்தான் செயல் படுகிறோமா என்று உறுதி படுத்திக் கொள்வது முக்கியம்.


தீய பழக்கங்களை விட்டு விடுங்கள்
உங்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல், தீய நண்பர்கள் வட்டாரம் என்று ஏதாவது தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள். மேலும் இது மட்டும் தீய பழக்கங்கள் அல்ல, நீங்கள் அதிக நேரம் தூங்குவது, சோம்பல் படுவது, உடற் பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான உணவு பழக்கங்களை பின்பற்றாமல் இருப்பது என்று பல விடயங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.


தியானம், யோகா மற்றும் உடற் பயிற்சி செய்யுங்கள்
நீங்கள் உடற் பயிற்சி செய்யும் போது உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் நீங்கள் உற்சாகத்தோடு அனைத்து வேலைகளையும் செய்வீர்கள். யோகா செய்யும் போது மேலும் உங்கள் மனம் மற்றும் உடல் ஒரு நல்ல நிலைபாட்டிற்கு வந்து நீங்கள் கட்டுபாட்டுடன் செயல் படுவீர்கள். நீங்கள் தினமும் த்யானம் செய்யும் போது உங்கள் மனம் அமைதி பெறுகிறது. மேலும் தெளிவும் பெறுகிறது. இதனால் நீங்கள் சரியாக சிந்திக்கும் திறனைப் பெற்று உங்கள் முன்னேற்றத்தில்(self improvement) சரியான பாதையை நோக்கி செல்வீர்கள்.


பயம் வேண்டாம்
எது நடந்தாலும் அதை தைரியத்தோடு எதிர் கொள்வேன் என்று நீங்கள் உறுதியோடு செயல் பட வேண்டும். எந்த ஒரு வெற்றியும் உங்களுக்கு எளிதாக கிடைத்து விடாது. அவ்வாறு எளிதாக கிடைத்து விட்டால் அதற்கு மதிப்பும் இருக்காது. அதனால் நீங்கள் சில சவால்களையும், சங்கடங்களையும் எதிர் கொள்ள நேரிடும். எது நடந்தாலும் பயம் இல்லாமல் துணிச்சலோடு செயல் பட வேண்டும்.


இப்போதே செயல் படுத்துங்கள்
நீங்கள் ஒன்றை செய்ய முடிவு செய்துவிட்டால் அதை தள்ளிப் போட வேண்டாம். இப்போதே செயல் படுத்த தொடங்குங்கள். இது நீங்கள் விரைவாக உங்கள் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க உதவும்.
tips-about-self-improvement004


படிப்படியாக முன்னேறுங்கள்
ஒரு சிலர் நாம் விரைவாக வெற்றி பெற வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக செயல் படுவார்கள். இதனால் பதற்றம் ஏற்பட்டு உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் ஏற்படலாம். அதனால், படிப்படியாக முன்னேற முயற்சிப்பதே(self improvement) சிறந்தது.


உங்களை நீங்கள் அங்கீகரியுங்கள்
மற்றவர் உங்களை ஊக்கப் படுத்த வேண்டும் மற்றும் அங்கீகரிக்க வேண்டும் என்று காத்திருக்கவோ அல்லது எதிர் பார்க்கவோ வேண்டாம். உங்களை நீங்களே அங்கீகரித்து, ஊக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, யாருடைய உதவியும் இன்றி தனித்து செயல் பட்டு விரைவாகவும் மற்றும் தன்னம்பிக்கையோடும் முன்னேறுவீர்கள்(self improvement).


எந்நிலையிலும் பின் வாங்கக் கூடாது
நீங்கள் ஒரு முறை முடிவு எடுத்து விட்டால், அதில் எந்த காரணத்தை கொண்டும் பின் வாங்கக் கூடாது. அவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் உறுதியோடு செயல் படவில்லை என்பதையே குறிக்கும். அதனால் எந்த சூழலிலும் மற்றும் காரணம் கொண்டும் எடுக்கும் முயற்சிகளில்(self improvement) இருந்து பின் வாங்கக் கூடாது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறிப்புகள் மட்டுமில்லாமல் நீங்கள் மேலும் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளது. குறிப்பாக நீங்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது, உங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வது, உங்கள் பலவீனத்தில் இருந்து வெளி வருவது, சௌகரியத்தை விடுத்து உழைக்க வேண்டிய முக்கயத்துவத்தை உணருவது என்று பல உள்ளன. இவற்றை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு செயல் படத் தொடங்கினாலே நீங்கள் உங்கள் சுய முன்னேற்றத்தில்(self improvement) வெற்றி பெறுவீர்கள். மேலும் எந்த காரணம் கொண்டும் நீங்கள் முன்னேறி விட்டாலும், வெற்றி பெற்று விட்டாலும், அது முடிவல்ல, மற்றுமொரு குறிக்கோளுக்கான தொடக்கம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!


முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்


வீட்டிலிருந்தே இனி ஹேர் கலர் செய்துக் கொள்ளலாம்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo