நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்!

நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்!

கோடைக்காலம் வந்துவிட்டாலே, இளநீர், பழச்சாறுகள் மற்றும் பிற குளிர் பானங்களுக்கு தேவை அதிகரித்து விடுகிறது. மக்கள் ஏதாவது ஒரு குளிர் பானத்தை தங்கள் தாகத்தையும், வெயிலினால் ஏற்படும் சோர்வையும் போக்க அருந்துகிறார்கள். மேலும், மக்களின் தேவைக்கேற்ப, இயற்கையும் தன்னுடைய பங்கைத் தருகிறது.


கோடைக்காலத்தில், உங்கள் சூட்டை தணிக்கும் வண்ணம் பல பழங்கள்(fruits) விளைகின்றது. அதில் குறிப்பாக தர்பூசிணி, முலாம்பழம், பப்பாளி, மாம்பழம் என்று சிலவற்றை வகைப்படுத்தலாம். இந்த கோடைக்கால  பழங்கள்(fruits) அதிக நீர் சத்து நிறைந்ததாகவும், மற்றும் பிற சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அதனால், இது உங்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்து போதுமான சக்த்தியை உங்கள் உடலுக்குத் தர ஏற்றதாக உள்ளது.


கோடைக்காலம் வந்து விட்டாலே, வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மற்றும் உடம்பில் இருந்து வெளியேறும் நீரால் அதிக சக்தி விரயமாகிறது. இதனால் பல உடல் உபாதைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனை சரி செய்து உங்கள் உடலை சம நிலையில் வைத்துக் கொள்ள, கட்டாயம் நீங்கள் ஏதாவது ஒரு கோடைக்கால பழத்தை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


summer fruits003


சுவையான கனவாய் மீன் ரெசிபி


ஏன் கோடைக்கால பழங்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?


 • உங்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்த, இங்கே சில தகவல்கள்

 • சுட்டெரிக்கும் வெயில், அதிக வியர்வை மற்றும் நீர்ப்போக்கு, இவை அனைத்தும் கோடைக்காலத்தின் வருகையை உணர்த்துகிறது. இது பல பாதிப்புகளை ஏற்படுத்துவதால், உங்கள் உடலை சமமான சீர்தோஷ நிலையில் வைத்துக் கொள்வது முக்கியம்

 • கால மாற்றத்திர்க்கேர்ப்ப உணவு பழக்கங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதில் பழங்கள்(fruits) முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகையில், கோடைக்கால பழங்கள் மற்றும் காய்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்

 • கோடைக்கால பழங்கள்(fruits) உடலில் வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள்,

 • ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பிற சத்துக்கள் தேவைக்கேற்ப இருப்பதை உறுதி செய்யும்

 • கோடைக்காலப் பழங்கள்(fruits)பெரும்பாலும் இயற்கையாகவே, விரைவில் பழுத்து விடும். அதனால், நீங்கள் காயாக வாங்கி வந்தாலும், எந்த இரசாயன சேர்க்கையும் இல்லாமல் உங்கள் வீட்டிலேயே பழுக்க வைத்து உண்ணலாம். இது ஆரோக்கியத்தை மேலும் அதிகப்படுத்தும்

 • கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்கள்(fruits) விலை குறைவாகவும் அனைவரும் எளிதாக வாங்கும் வகையிலும் இருக்கும். இது அனைத்து இடங்களிலும் சுலபமாகவும் கிடைக்கும்

 • உங்கள் ஊரிலேயே விளையும் பழங்கள்(fruits)கோடைக்காலத்திற்கு ஏற்றது. இது அந்த நிலபரப்பிர்க்கு ஏற்ற வெப்பம் மற்றும் சுற்றுசூழல், ஆகிய இரண்டிற்கும் ஏற்றவாறு மனிதர்களுக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் தனியாக நேரம் செலவிட்டு உங்களுக்குத் தேவையான பழத்தை தேட வேண்டாம்.


உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கோடைக்கால பழங்கள்(fruits)


கோடைக்கால பழங்களின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட பின், இங்கே, சில குறிப்பிடத்தக்க கோடைக்கால பழங்கள்(fruits) என்னென்ன என்பதை பற்றிய சில தகவல்கள், உங்களுக்காக:


மாம்பழம்
முக்கனிகளின் முதன்மை பெற்றது மாம்பழம். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் அபாரமானது. மாம்பழம், ருமானி, சேலம் மாம்பழம், பங்கலவள்ளி, என்று பல வகைகளில் கிடைக்கின்றது. இவை ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு சுவையும், மகத்துவமும் இருக்கின்றது.  இதன் மனமும், சுவையும் வர்ணிக்க முடியாத அளவு இருக்கும்.


 • மாபலத்தில் வைட்டமின் A, C, மற்றும் D சத்துக்கள் நிறைந்துள்ளது

 • இதில் இரும்பு, பொட்டசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு உள்ளது

 • பெக்டின் மற்றும் நார் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது·         மேலும், கொழுப்பு சத்தின் அளவு குறைவாகவே இந்த பழத்தில் இருப்பதால், அனைவரும் உண்ணலாம்.

 • மாம்பழம் இரத்த அழுத்தம் மற்றும் இருதயத் துடிப்பு ஆகியவற்றை சீரான அளவு வைத்துக் கொள்ள உதவும்

 • இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்


summer fruits004


அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!
பப்பாளி


பப்பாளி அதிக அளவு வெப்பமண்டலப் பகுதிகலில் கிடைக்கும். இதை காயாகவோ, பழமாகவோ பயன் படுத்தலாம். பப்பாளியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலைகளும் மருத்துவத்திற்க்காக அதிகம் பயன் படுத்தப்படுகிறது.


 • பப்பாளி வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் நிறைந்துள்ளது

 • இதில் க்போலேட் மற்றும் பல வகை பைத்தோகெமிக்கல்களும் நிறைந்துள்ளது

 • இதில் பபயின் சத்து உள்ளது. இது இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது

 • காரட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, பப்பாளியில் அதிக அளவு பேர கெரோடின் நிறைந்துள்ளது

 • இருதய நோய், நீரழிவு நோய், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது

 • இனிப்பான சுவையோடு, பப்பாளிப்பழம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்த உதவுகிறது. 


தர்பூசணிப்பழம்


தர்பூசணி, கோடைக்காலங்களில் மிக மலிவான விலையில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். இது அனைவருக்கும் பிடித்த ஒரு சுவை மிகுங்கள் பழமாகும். இதில் அதிக நீர் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதன் இனிப்பான சுவை அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவார்கள். கோடைக்காலம் வந்துவிட்டாலே, தர்பூசணிப்பழம் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு வரவாகும்!


 •  92% பழம் நீரால் நிறைந்துள்ளது. அதனால் இது உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சத்தை இந்த வெயில் காலத்தில் பெற உதவுகிறது

 • கோடைக்காலத்திர்க்கென்றே இயற்கையால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு, இந்த தர்பூசணிப்பழம்

 • இதில் சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B6, மற்றும் C நிறைந்துள்ளது

 • இதில் அமினோ அமிலம், நார் சத்து, கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

 • இதில் அதிக அளவு லைகோபீன் நிறைந்துள்ளது. இது இருதயத்தின் ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகிறது


summer fruits005


முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!


 முலாம்பழம்


தர்பூசணிப்பழத்திற்கு அடுத்தப் படியாக, முலாம்பழம் பிரபலாமன ஒரு தேர்வாக மக்களுக்கு இருக்கின்றது. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அனைத்து இடங்களிலும், கோடைகாலத்தில் மலிவான விலையில் கிடைக்கின்றது.


 • ஒரு சிறியத் பழ\த் துண்டில் மட்டும் உங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் நிறைந்துள்ளது

 • இதில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் சத்துக்கள் அதிகம் உள்ளதால், உங்கள் கண் பார்வையை அதிகப்படுத்துகிறது

 • இந்த சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதில் போதுமான நீர் சத்து நிறைந்துள்ளது

 • வெப்பமண்டலப் பகுதிகளில் இந்த பழங்கள்(fruits) எளிதாக கிடைக்கின்றது

 • மயக்கம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்து, உங்களுக்குத் தேவையான சக்த்தியை இந்தப் பழம் கொடுக்கின்றது

 • கோடைக்காலத்திற்கு குளிர்ச்சித் தரக்கூடிய ஒரு நல்ல தேர்வு இந்த முலாம்பழம்


 திராட்சைப்பழம்  


மற்றுமொரு பிரபலமான கோடைக்காலத்திற்கு ஏற்ற பழம், திராட்சைப்பழம். இதில் அதிக நீர் சத்து இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனை அதிகம் கவனிப்பதில்லை. திராட்ச்சையில் அதிக வைட்டமின் C சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்திர்க்குத் தேவையான கொலஜென் உற்பத்தியை அதிகப்படுத்த உதவும். திராட்ச்சைப்பழத்தின் சாறு சருமம் மற்றும் தலை முடி பராமரிப்பிற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் இது பொடுகு மற்றும் முகப்பருவை போக்க உதவுகிறது.


 • திராட்சைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, கரையக்கூடிய மற்றும் கரையாத நார், சோடியம், வைட்டமின்கள், தாதுக்கள் என்று பல சத்துக்கள் நிறைந்துள்ளது

 • மத்திய தரைக்கடல் பகுதிகளில் திராட்ச்சை அதிகம் விளைகிறது

 • இது உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது

 • தினமும் உங்கள் உணவு பட்டியலில் திராட்சைப்பழத்தை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்குத் தேவையான சத்துக்கள் எளிதாக கிடைத்து விடும்

 • இதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்க உதவுகிறது

 • இதில் அதிக ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது பொட்டாசியம் நிறைந்த பழம்

 • அதிக கொழுப்பு சத்து மற்றும் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் நலம் சீராகும்

 • இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்

 • உங்கள் மூளைக்குத் தேவையான சத்துக்களை இது கொடுக்கும்

 • மூட்டு வலி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்

 • கண்கள் நீர் சத்தின்றி காய்ந்து போகாமல் பாதுகாக்க உதவும்

 • அஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவும்

 • மார்பகப் புற்றுநோயை தடுக்க மற்றும் குணப்படுத்த உதவும்


summer fruits006பிளம்ஸ்


தக்காளியைப் போன்று தோற்றமளித்தாலும், இனிப்பாகவும், மற்றும் சற்று புளிப்புக் கலந்த இனிப்பாகவும் பல சுவையில் இந்தப் பழம் கோடைக்காலங்களில் கிடைக்கிறது. பிளம்ஸ் ஒரு பிரபலமான பழம். இதில் வைட்டமின் C சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பழம் சீசன் நேரத்தில் மிக மலிவான விலையில் கிடைக்கும். நன்கு பழுத்த பலம் மிக ருசியாக இருக்கும். அடர்ந்த நிறத்தில் இருக்கும் பிளம்ஸ் உண்பதற்கு இலகுவாக இருக்கும்.


 • பிளம்ஸில் வைட்டமின் C, A மற்றும் K சத்துக்கள் நிறைந்துள்ளது

 • இதில் பொட்டசியம் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது

 • நார் சத்து, சர்பிட்டோல் மற்றும் ஐசட்டின் சத்துக்கள் மல சிக்கல் மற்றும் ஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது

 • அதிக இரத்த அழுத்தத்தில் இருந்து உங்கள் இருதயத்தை இது காக்க உதவும்

 • பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்

 • சில பழங்களில் இருக்கும் அந்தொசியனின் மற்றும் சிவப்பு நீல நிறமி நீரழிவு நோய், மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை பெரிதும் தடுக்க உதவுகிறது

 • ஒரு சிறிய பிளம்ஸில் 3௦ கலோரிக்கள் நிறைந்துள்ளது


 அன்னாசிப்பழம்


நார் சத்து நிறைந்து, குறைந்த கலோரிக் கொண்ட பழம், அன்னாசிப்பழம். இது கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் இது உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த மற்றும் சேதமடைந்த அணுக்களை அகற்ற உதவுகிறது. உங்கள் சருமத்தை பொலிவு பெற செய்கிறது. உங்கள் சருமத்திர்க்குத் தேவையான ஆக்சிஜனேற்றத்தைத் தருகிறது. இந்த பழத்தை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துகொள்ளும் போது, உங்கள் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளை விரைவாக போக்கி, இளமையானத் தோற்றத்தை தரும்.


 • அன்னாசிப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது

 • வெப்பமண்டலப் பகுதிகளில் இது அதிகமாகக் கிடைக்கிறது

 • இது கோடைக்காலங்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பழ வகை

 • மெட்டபாளிசத்தை அதிகப்படுத்தி நோய்த்தொற்றை குறைக்க உதவுகிறது

 • கலோரிக்களை எரிக்க உதவுகிறது

 • உயர் இரத்த அழுத்தத்தை சீர் படுத்த உதவுகிறது


 இந்த பழங்கள்(fruits)மட்டுமல்லாமல், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, கமலாப்பழம், சாத்துக்குடி போன்ற பல பழ வகைகளும் உங்கள் கோடைக்காலத்திற்கு விருந்தளிக்க உள்ளது. இவற்றில் உங்களுக்கு பிடித்ததும் மற்றும் விலை மலிவானதுமான பழங்களை தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால், கோடையிலும், குளிர் காலத்தை உங்களுக்குள் உணரலாம்!