கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்... வீட்டிலேயே இதை செய்யலாம்!

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்... வீட்டிலேயே இதை செய்யலாம்!

கண்களை சுற்றி கருவளையம்(Dark Circles) இருந்தால் அது முகத்தின் அழகை முற்றிலுமாக கெடுத்துவிடும். கண்கள் சோர்வாக இருந்தால் முகம் முழுவதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வை தந்துவிடும். கண்கள் தான் முகத்திற்கு எடுப்பான அழகை தந்து பளிச்சிட செய்யும். கண்களை பராமரிப்பது மிகவும் முக்கியம். நன்றாக தூங்கி எழுந்தாலே கண்களை சுற்றி இருக்கும் கருவளையம்(Dark Circles) மறைந்து விடும். கண்களை சுற்றி கருவளையம்(Dark Circles) வருவதற்கான காரணம் சரியான தூக்கம் இன்றி இருப்பது, கம்ப்யூட்டரில் அதிக நேரம் பணிபுரிவது, நைட் சிப்டில் தொடர்ந்து பணி செய்வது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம்(Dark Circles) வருகின்றது.


கூடுமான வரை இயற்கை முறையில் இந்த கருவளையத்தை(Dark Circles) சரி செய்யலாம். ஆரம்பத்திலேயே இதற்கான முயற்சியை எடுத்தால் விரைவில் சரி செய்து விடலாம். காலம் சென்று எடுத்தால் கருவளையம்(Dark Circles) கண்களை விட்டு செல்ல கால தாமதம் ஆகும். என்ன என்ன வழிமுறைகளை பின் பற்றி கருவளையத்தை சரி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
simple-ways-to-remove-dark-circles-completely004


கருவளையத்தை(Dark Circles) சரி செய்வதற்கான இயற்கை முறைகள்


 • சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்புவளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை அதில் நனைத்து கண்ணின் மீது வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம்(Dark Circles) இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 • கண்ணுக்குக் கீழே கருவளையம்(Dark Circles) உள்ளதா? 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். கருவளையம்(Dark Circles) நீங்கி விடும்.

 • கண்களுக்கு கீழே உள்ள கருவளையம்(Dark Circles) மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள்(Dark Circles) வர விடாமல் தடுக்க முடியும்.

 • சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

 • வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

 • கருவளையம்(Dark Circles) வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


simple-ways-to-remove-dark-circles-completely005


 • வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை(Dark Circles) போக்கும்.

 • வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைத்துக் கொண்டு, இருட்டான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். அடிக்கடி இப்படிச் செய்துவர, கருவளையங்கள்(Dark Circles) காணாமல் போகும்.

 • பாதாம் பருப்பை ஊறவைத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதை கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம்(Dark Circles) மறையும்.

 • கண் வசீகரத்திற்கும், உடல் அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து, கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச் ஆகிவிடும்.

 • கண்களுக்குக் கீழே கருவளையம்(Dark Circles) இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும்(Dark Circles) காணாமல் போகும்.


கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!


முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்


மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo