logo
ADVERTISEMENT
home / அழகு
வீட்டிலேயே எளிய முறையில் சில்வர் பேஷியல் செய்வது எப்படி?

வீட்டிலேயே எளிய முறையில் சில்வர் பேஷியல் செய்வது எப்படி?

பேஷியல்(facial) செய்ய பொதுவாக பெண்கள் அழகு நிலையம் செல்வதுண்டு. இது நிச்சயம் அவர்களுக்கு செலவை அதிகப்படுத்துவதாகவும், விரும்பிய நேரத்தில் செய்து கொள்ள முடியாமல் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் இறக்கலாம். மேலும் நீங்கள் அழகு நிலையம் செல்ல வேண்டும் என்றால், அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். இது பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வசதியாக இல்லாமல் போகலாம். இதனால் தொடர்ந்து பேஷியல் செய்து கொள்ள முடியாமல் போவதோடு உங்கள் சருமமும் அழகு குறைந்து காணப்படலாம்.  

இத்தகைய சூழலை தவிர்க்க, உங்களுக்கு இப்போது வீட்டிலேயே பேஷியல்(facial) செய்து கொள்ளும் வசதி வந்து விட்டது.

உங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டே நீங்கள் வீட்டில் இருந்தபடி உங்களுக்கு ஏற்ற நேரத்தில் மற்றும் உங்கள் விருப்பத்திற்க்கேற்ப பேஷியல்(facial) செய்து கொள்ளலாம். மேலும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்தும் சில்வர் பேஷியலை எளிதாக வீட்டில் இருந்தே நீங்கள் செய்து கொள்ளலாம். இது நீங்கள் எதிர் பார்த்த பலன்களை உங்களுக்குத் தரும்.

மேலும் பல பிரபலமான நிறுவனங்கள் சில்வர் பேஷியல்(facial) பாக்கை நீங்கள் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே பயன் படுத்தும் வகையில் வடிவமைத்து விற்பனை செய்கின்றார்கள். இதனை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

ADVERTISEMENT

silver facial004

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

ஏன் சில்வர் பேஷியல்(facial) செய்ய வேண்டும்?

நீங்கள் சில்வர் பேஷியல்(facial) செய்வது இது தான் முதல் முறை என்றாள், நிச்சயம் சில விடயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ADVERTISEMENT

சில்வர் பேஷியலை பற்றித் தெரிந்து கொள்ள உங்களுக்காக சில குறிப்புகள்:

  • இந்த சில்வர் பேஷியல்(facial) பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரும்.
  • இதற்கு ஆண்டிமைக்ரோபியல், தூய்மைப்படுத்துதல் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளது.
  • மேலும் பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த இந்த பேஷியல்(facial) உதவும்.
  • இந்த பேஷியலை வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து நீங்கள் செய்யலாம் அல்லது இதற்கென்று விற்கப்படும் பேஷியல்(facial) பாக் வாங்கி செய்யலாம்

வீட்டில் சில்வர் பேஷியல்(facial) செய்வது எப்படி

பணம் கொடுத்து வெளியில் நீங்கள் சில்வர் பேஷியல்(facial) வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதற்குத் தேவையான பேஸ் பாக்கை நீங்களே தயார் செய்து விடலாம்.

இதற்குத் தேவையான பொருட்கள்:

ADVERTISEMENT

பச்சை அரிசி மாவு
தேன்
கிரீன் டீ

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பச்சை அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்

ADVERTISEMENT

இதனை நன்கு கலந்து கொள்ளவும்

இதனுடன் ஒரு தேக்கரண்டி கிரீன் டீ சேர்த்துக் கொளவும்

இந்த கலவையை நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவவும்

அப்படியே 2௦ நிமிடம் வரை விட்டு விடவும்

ADVERTISEMENT

பின் காய்ந்த உடன், குளிர்ந்த நீரில் முகத்தை ஈரத் துணியால் நன்கு துடைத்து விடவும்  

இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகம் நல்ல பொலிவு பெறுவதை நீங்கள் காணலாம். மேலும் உங்கள் சருமம் மிருதுவாகவும் ஆகும்.

இந்த சில்வர் பேஷியலில் பயன்படுத்தப்படும் பச்சை அரிசி மாவு சருமம் வெண்மையான தோற்றம் பெற உதவும். மேலும் சூரியக் கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் இது உதவும்.

இதில் இருக்கும் தேன் நோய் எதிர்ப்பு பண்புகளை பெற்றிருப்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. மேலும் இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு ஈரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

ADVERTISEMENT

silver facial003

அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!

முறையாக சில்வர் பேஷியல்(facial) எப்படி வீட்டில் செய்வது?

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது சில்வர் பேஷியல்(facial) செய்வதற்கான ஒரு எளிய முறையாகும். இருப்பினும், நீங்கள் அழகு நிலையத்தில் செய்வது போன்று முறையாக செய்ய எண்ணினால், உங்களுக்காக சில உபயோகமான குறிப்புகள் பின் வருமாறு:

ADVERTISEMENT

1.    உங்கள் கைகளை முதலில் நன்கு கழுவி சுத்தப் படுத்துங்கள். இதனால், அழுக்கு மற்றும் கிருமிகள் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதை நீங்கள் உறுதிப் படுத்தலாம். கிரிமிகளோடு நீங்கள் இதனை செய்ய முயற்சிக்கும் போது அது சில பிரச்சனைகளை சருமத்திர்க்குத் தரக் கூடும் அல்லது நீங்கள் எதிர் பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம்

2.    உங்கள் தலை முடியை நெற்றியில் மற்றும் முகத்தில் படராமல் நன்கு கட்டிக் கொள்ளுங்கள். அப்படி தலை முடி முகத்தில் விழுந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு பேஷியல்(facial) செய்யும் போது அசௌகரியத்தைத் ஏற்படுத்தக்கூடும்

3.    உங்கள் முகத்தை பேஷியல்(facial) செய்வதற்கு முன் நன்கு கழுவி சுத்தம் செய்து விட வேண்டும். முகத்தில் ஏதாவது ஒப்பனை செய்திருந்தால், அவற்றை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் முகத்தை சுத்தம் செய்ய, தேன் அல்லது தேங்காய் எண்ணை பயன்படுத்தலாம். தேன் ஒரு நல்ல இயற்க்கை சுத்திகரிப்பானாக செயல்படுகின்றது. இதற்கு நீங்கள் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து உங்கள் முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சுழற்சி முறையில் இதனை நீங்கள் செய்ய வேண்டும். பின் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, சுத்தமான பஞ்சால் அல்லது துணியால் முகத்தை நன்கு துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும்

4.    இப்போது முகத்தில் உள்ள இறந்த அணுக்களை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்கள் சருமம் மேலும் சுத்தமாகின்றது. இதற்கு நீங்கள் ஒரு நல்ல தரமான ஸ்க்ரப் பயன் படுத்த வேண்டும். நீங்கள் கடையில் ஸ்க்ரப்பர் வாங்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே தயார் செய்யலாம்.

ADVERTISEMENT

எப்படி வீட்டிலேயே ஸ்க்ரப்  செய்வது:

o    இதற்கு சிறிது பால் எடுத்துக் கொள்ளவும்

o    இதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

o    அதன் பின் உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்

ADVERTISEMENT

o    பின் சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும்.

5.    முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். நீராவியில் உங்கள் முகத்தை சிறிது நேரம் காட்டும் போது சருமத்தில் இருக்கும் அழுக்கு, கிருமிகள் மற்றும் இறந்த அணுக்கள் வெளியேறி விடும். இது உங்கள் முகத்திற்கு பொலிவைத் தருவதோடு மேலும் அடுத்த கட்ட பேஷியலை தொடர்ந்து செய்யும் போது நல்ல பலன்களைப் பெற உதவும்  

எப்படி முகத்திற்கு ஆவி பிடிப்பது

o    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்

ADVERTISEMENT

o    அதனை நன்கு கொதிக்க விடவும்

o    இப்பொது உங்கள் முகத்தை அந்த ஆவியில் நன்கு காட்டவும்

o    முடிந்த வரை ஆவி வீணாகாமல் துணியால் மூடிக் கொள்ளவும்

o    இப்படி 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்

ADVERTISEMENT

6.    இப்போது நீங்கள் தயார் செய்துள்ள சில்வர் பேஷியல்(facial) மாஸ்க்கை உங்கள் முகத்தில் தடவவும். இதனை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டு பின் குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை முக்கி, நீரைப் பிழிந்து முகத்தை சுத்தமாக துடைத்து விடவும்.

7.    முகத்திற்கு ஈரத்தன்மையை உண்டாக்குங்கள். ஒரு நல்ல தரமான மாய்ஸ்ச்சுரைசர் பயன் படுத்தி உங்கள் சருமத்திற்கு ஈரத்தன்மையை உண்டாக்க வேண்டும். இதற்க்கு நீங்கள் தேங்காய் எண்ணை போன்ற மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்தலாம்.

silver facial002

சுவையான கனவாய் மீன் ரெசிபி

ADVERTISEMENT

சில்வர் பேஷியல்(facial) செய்த பின் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள்:

பலர் சில்வர் பேஷியல்(facial) செய்த பின் தெரியாமல் சில தவறுகளை செய்து விடுகின்றார்கள். இதனால் எதிர் பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகின்றது. அவற்றைத் தவிர்க்க உங்களுக்காக சில குறிப்புகள் இங்கே

o    பேஷியல்(facial) செய்த உடன் முகத்திற்கு ஒப்பனை செய்யக் கூடாது. பேஷியல் செய்த பின் உங்கள் முகத்தில் துளைகள் விரிவடைந்து இருக்கும். இதனால் நீங்கள் ஒப்பனை செய்யும் போது அதில் உள்ள இரசாயனங்கள் உங்கள் சருமத்திர்க்குள் சென்று சில உபாதைகளை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்

o    குறைந்தது 24 மணி நேரத்திற்கு எந்த ஒப்பனையும் செய்யக் கூடாது

ADVERTISEMENT

o    பேஷியல்(facial)செய்த உடன் முகத்தை கழுவி விடக் கூடாது. பேஷியல்(facial) செய்த உடன் சிலருக்கு முகம் வறண்டு இருப்பது போல அல்லது எதோ ஒரு அசௌகரியம் இருப்பது போலத் தோன்றும். அப்படி இருக்கும் போது நீங்கள் உடனே முகத்தை கழுவி விட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படி செய்தால் நீங்கள் செய்த பேஷியலுக்கு பலன் இல்லாமல் போய்விடக் கூடும். அதனால் குறைந்தது 4 மணி நேரத்திற்க்காவது முகத்தை கழுவாமல் இருக்க வேண்டும்

o    பேஷியல்(facial) செய்த பின் த்ரெட்டிங் செய்வதை தவிர்ப்பது நல்லது. இதை நீங்கள் பேஷியல் செய்வதற்கு முன் செய்வது நல்லது

o    பேஷியல்(facial) செய்த பின் மூன்று நாட்களுக்கு ஸ்க்ரபிங் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அது உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடும்

இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பயன் தருபவையாக இருக்கும் என்று நம்புகின்றோம். மேலும் இதனை நீங்கள் சரியாக பின் பற்றி வரும் போது நீங்கள் எதிர் பார்த்த பலன்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

ADVERTISEMENT

இந்த பேஷியலை நீங்கள் குறைந்தது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் நீங்கள் எதிர் பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும். இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருப்பதோடு, அழகாகவும் இருக்கும். நிச்சயம் உங்கள் முகம் மற்றவர்களை ஒருக்கணமாவது திரும்பிப் பார்க்க வைக்கும்.

இந்த சில்வர் பேஷியல் மட்டுமல்லாமல், பப்பாளி பேஷியல், வாழைப்பழம் வேஷியல், என்று பல உள்ளது. இதில் உங்கள் சருமத்திற்கும், உங்கள் வசதிக்கும் ஏற்றது எதுவென்று கண்டறிந்து அதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல அழகான முகம் மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவீர்கள். உங்கள் சருமமும் நல்ல நிறத்தை பெறுவதையும் நீங்கள் நாளடைவில் காணலாம்.

17 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT