logo
ADVERTISEMENT
home / அழகு
முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரி செய்ய என்ன செய்யலாம்?

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரி செய்ய என்ன செய்யலாம்?

முகத்தில் ஏற்படும் சுருக்கம்(wrinkles) நமது அழகை மட்டும் இன்றி இளமையையும் கெடுத்துவிடுகின்றது. இளம் வயதிலேயே வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படுவதற்கு இந்த சுருக்கம்(wrinkles) மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிகம் கோபப்படுபவர்களுக்கு இந்த முக சுருக்கம் (wrinkles)ஏற்படுவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய காலகட்டத்தில் ஸ்டிரெஸ் முக சுருக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கின்றது. ஸ்டிரெஸ் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது அந்த அளவிற்கு எல்லா பணிகளிலும் ஏன் உலகமே ஸ்டிரெஸில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஏற்படும் முக சுருக்கத்தை வீட்டிலிருந்தே சரி செய்யலாம். கீழே உள்ள குறிப்புகளை பாருங்கள்.

wrinkles003

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்… வீட்டிலேயே இதை செய்யலாம்!

ADVERTISEMENT
  • நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம்(wrinkles) மாறும்.
  • வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.
  • வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம்(wrinkles) விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.
  • கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம்(wrinkles) நீங்கும்.
  • சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம்(wrinkles) நீங்கும்.
  • பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

wrinkles004

முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!

  • அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம்(wrinkles) உண்டாவது தாமதமாகும்.
  • பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
  • எலுமிச்சம்பழத் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறும் கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம்(wrinkles) மறையும்.
  • தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
  • முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதை தினமும் காலை அல்லது மாலை செய்து வந்தாலே போதுமான இளமை பொலிவு கிடைக்கும்.

செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ADVERTISEMENT

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

10 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT