பெண்கள் அதிகம் இரசிக்கும் ஆண்களின் குணங்களும் வெளித் தோற்றமும்!

பெண்கள் அதிகம் இரசிக்கும் ஆண்களின் குணங்களும் வெளித் தோற்றமும்!

ஆண்(irresistible) என்றாலே வீரம் மற்றும் கம்பீரத்தை உணர்த்தும். என்றும் மக்கள் ஆண்களை வீரமிக்கவன், சூரன், பலசாலி என்று வர்ணிப்பதுண்டு. அது மட்டுமா, ஒரு தைரியமான பெண்ணை ஆணுடன் ஒப்பிட்டு பேசும் வழக்கமும் நம் சமுதாயத்தில் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம், ஆண்களுக்குள்ளும் சில பெண்மைக்கான குணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் ரசிக்கக் கூடியவையாகவே இருக்கும்.


ஒரு கம்பீரமான ஆண்(irresistible), தன்னுள் அன்பு நிறைந்த மனதோடு பிறரிடம் பழகும் போது, அது இரசிக்கும் வகையிலேயே இருக்கின்றது. குறிப்பாக, தன் மனைவியோடு ஒரு ஆண்(irresistible) மகன் நேசத்தோடு, அன்பான வார்த்தைகளை கூறி பேசும்போது அது இரசிக்கும் வகையிலேயே இருகின்றது.


இது மட்டுமல்லாமல், ஆணிற்கும், குழந்தைகளுடன் பரிவோடு பழகும் குணமும் உள்ளது. சிறிதாய் ஒரு புன்னகை சிந்தும் வீரமான மீசையைக் கிரீடமாய்க் கொண்ட ஆணின் உதடுகள், பாசத்தோடு பார்க்கும் கண்கள் என்று மேலும் வர்ணிக்க பல அம்சங்கள் ஆண்களிடம் உள்ளது.


பெண்களிடம் காணும் வீரம் எப்படி ஒரு விதமான அழகோ, அதைப் போலவே வீரம் மிகுந்த ஆணிடம் காணும் பரிவும் அன்பும் உள்ளது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும், அற்புதமான பெண்ணின் குணம் மறைந்திருந்து, அவ்வப்போது எட்டிப் பார்க்கும் போது, அதை யார் தான் இரசிக்காமல் இருப்பார்கள். மேலும் இத்தகைய குணங்களை கண்டு மயங்காத பெண்களும் உண்டோ?


ஒரு பெண்ணிடம் காணும் நிதானத்திற்கும், ஆணிடம் காணும் நிதானத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. நிதானம் மற்றும் நாணம் ஒரு பெண்ணுக்கு பிறப்பிலேயே இருக்கும் இயல்பான குணம் என்று கூறலாம். ஆனால், ஒரு வேகம் மிகுந்த ஆண்(irresistible) நிதானத்தோடு ஒவ்வொரு விடயங்களிலும் நடந்து கொள்ளும் போது, அதை புன்னகைத்து கண் சிமிட்டாமல் இரசிக்கத் தோன்றும். எனினும், அந்த நிதானத்திலும் ஓர் விவேகமும் இருக்கத்தான் செய்யும்.


couples004


பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!


ஒரு ஆணிடம் நீங்கள் இரசித்து பார்க்கும் சில குறிப்பிடத்தக்க குணங்கள்


எந்த காலமாக இருந்தாலும், ஆணிடம் பெண்கள் எபோதும் இரசிக்கும் சில குணங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். அதில் சில வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவாக பார்க்கும் போது, அத்தகைய குணங்கள் அழகானது.


இந்த வகையில், ஆணிடம் பெண்கள் அதிகம் புன்னகைத்து இரசித்து பார்க்கும் சில குணங்கள், பின்வருமாறு:


இறக்கம்: இறக்க குணம் பெண்களுக்கு மட்டமே சொந்தமானதல்ல. எனினும், இதை வெளி படுத்தும் விதம் பெண்களுக்கும், ஆண்களுக்கும்(irresistible) இடையே மாறுபட்டுள்ளது. பிறரிடம் தன்மையோடும், பொறுமையோடும் பேசி பழகும் குணம் இருக்கும் ஆண்(irresistible), பிற உயிர்களிடம் எவ்வாறு இறக்க குணத்தோடு பழகுகின்றான் என்பதை உணர்த்துகின்றது.


அறிவாற்றல்: பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு புத்திகூர்மை அதிகமாக உள்ளது என்று கூறுவார்கள். இருபினும், ஆணும் இதில் எந்த விதத்திலும் குறைவானவன் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, ஒரு ஆண்(irresistible) நிதானமாக தனது அறிவாற்றலை ஒரு சமூகத்தில் வெளி படுத்தும் விதம் மிகவும் இரசிக்கும் வகையில் உள்ளது.


வெளிப்படையாக பேசும் குணம்: ஆண்கள்(irresistible) எப்போதும் யாரிடமும் எந்த ஒரு விடயத்தையும் வெளிப்படையாக பேசி பகிரமாட்டார்கள். தங்களுகுள்ளேயே அனைத்தையும் வைத்துக் கொண்டு வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். இருப்பினும், சில ஆண்கள் நாகரிகமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசும் விதம் மற்றும் அதை வழங்கும் விதம் சில தருணங்களில் இரசிக்கும் வகையிலேயே இருக்கின்றது.


தன்னம்பிக்கையோடு இருக்கும் ஆண்: பெரும்பாலான ஆண்கள்(irresistible) எப்போதும் பிறரை சார்ந்து வாழ்வதில்லை. அப்படியே நம் கலாசாரமும் கட்டமைத்துள்ளது. இத்தகைய குணங்களை பெண்கள் மிகவும் இரசிக்கத் தான் செய்கின்றார்கள். ஆண் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையோடு செயல் படுவது அவனை சார்ந்த பெண்ணுக்கு நல்ல நம்பிக்கையை அவன் மீது உண்டாக்குகின்றது.


தன்னைத்தானே வெளி படுத்துதல்: ஆண்கள்(irresistible) தங்களது தோற்றத்திலும், உடை, நடை மற்றும் பாவனையில் தங்களை வெளி படுத்தும் விதம், அவரது வீரத்தையும், தன்னம்பிக்கையையும் பறை சாட்டும் வகையில் இருக்கின்றது. . இதை பெண்கள் எப்போதும் இரசித்து பார்ப்பார்கள். மேலும் இது அவர்களது தனித்துவத்தையும் காட்டுகின்றது.


வீரமிகு செயல்கள்: பெண்கள் பொதுவாக ஒரு ஆணைக் கண்டு இரசிப்பது அவனது வீரமிகு செயல்களைக் கண்டே. அதிலும் குறிப்பாக அவன் ஒரு பெண்ணுக்கு ஆபத்து நேரும் போது, அவளுக்கு பாதுகாப்பு தர முயற்சிப்பது அவன் அந்த பெண் மீது வைத்திருக்கும் அக்கறையை வெளிப்டுத்துவதோடு, தன் கடமையை உணர்ந்தவனாகவும் பிரதிபலிக்கின்றது.


சுதந்திரமாக செயல் படும் குணம்: ஆண்கள்(irresistible) எப்போதும் சுதந்திரமாக செயல் படுவதென்பது புதிதல்ல. இருப்பினும், அவர்களுது சுதந்திரமான செயல்பாட்டிலும் ஒரு பெண் துணை நிற்கின்றாள் என்பதே சிறப்பு. பெரும்பாலான ஆண்கள்(irresistible) தன் மனைவி அல்லது தாயிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்வார்கள், இது அவரது சுதந்திரமான செயலிலும் அந்த பெண்ணிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.


தன்னை சார்ந்த பெண்ணை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளும் குணம்: பொதுவாக திருமணம் ஆன ஆண்கள்(irresistible) தன்னை சார்ந்த பெண்ணை, குறிப்பாக அவனது மனைவியை மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் வைத்துக் கொள்ள எண்ணுவான். அதற்காக அவன் அவளுக்கு பிடித்தமான விடயங்களை செய்து ஆச்சரியப் படுத்துவான். இத்தகைய செயல்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.


அக்கறை காட்டும் ஆண்கள்: எந்த உறவாக இருந்தாலும், ஒரு பெண், ஆணிடம் எதிர் பார்ப்பது அக்கறை. தன் மீது ஒருவர் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர் பார்ப்பாள். இது குறிப்பாக கணவன் மனைவி உறவில் அதிகம் உள்ளது. இந்த வகையில், ஒரு ஆண், அவனை சார்ந்த பெண்ணிடம் அதிக அக்கறை காட்டும் போது, அந்த பெண் அவனை இரசித்து பார்க்கின்றாள்.


couples003


இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த சாதணை பெண்கள்!


மேலே கூறப்பட்ட இந்த குணங்கள் மட்டுமல்லாது, மேலும் பல உள்ளன. பெண்கள் எப்போதும் ஒரு ஆண்(irresistible) தங்களுக்கு மீண்டும் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். இந்த வகையில், இன்று பல ஆண்கள்(irresistible) தன் மனைவி என்ன எதிர் பார்க்கின்றாள் என்றும், மேலும் அவளுக்கு என்ன வேண்டும் என்பதையும் சரியாக புரிந்து கொள்கின்றார்கள். அதன் வெளிப்பாடாக அவர்கள் தங்களது காதலையும் அக்கறையையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அந்த பெண்ணுக்கு அவனை மேலும் இரசிக்கும் விதமாக அமைகின்றது. இது அந்த பெண்ணுக்கு அவன் மீது அதிக காதலையும், அன்பையும் வெளிபடுத்த தூண்டுகின்றது.


பெண்கள் இரசிக்கும் ஆண்களின்(irresistible) தோற்றம்


ஒரு ஆணின் குணங்களை எப்படி பெண்கள் இரசித்து பார்கின்றார்களோ, அது போலவே அவனது தோற்றமும் பெண்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக ஒரு மனைவி, தன் கணவன் எப்படி ஆடை அணிய வேண்டும், எப்படி தலை முடியை கோவ வேண்டும், எப்படி மற்ற ஆபரணங்களை அணிய வேண்டும் என்றெல்லாம் பல ஆசைகளோடு இருப்பாள். அதனை புரிந்து கொண்டு அந்த கணவன் அவளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முயற்சி செய்வது அந்த உறவிற்கு நல்ல பிடிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் இது அவர்கள் மகிழ்ச்சியாக வாழவும் வழி வகுக்கின்றது.


பெண்கள் ஆண்களிடம் பொதுவாக இரசித்து பார்க்கும் சில விடயங்கள்:


  • பண்போடு ஆடை அணிந்து இருப்பது. பெரும்பாலான பெண்களுக்கு ஆண்(irresistible) நாகரீகமாகவும் பண்போடும் ஆடை அணிந்து இருப்பது பிடிக்கும். குறிப்பாக அலுவலகம் செல்லும் ஆண்கள்(irresistible) அணியும் பார்மல்ஸ் அனேக பெண்களுக்கு பிடித்த ஒரு தோற்றமாக இருக்கின்றது.

  • இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஆண்கள்(irresistible) ஆடை அணிவதும் இரசிக்கும் வகையிலேயே உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கென்றே வடிவமைக்கப் பட்ட டிசைனர் ஆடைகளை அவர்கள் அணியும் போது பெண்கள் இரசித்து பார்க்கின்றார்கள்.

  • கவர்ச்சியான புன்னகையோடு ஒரு கண் சிமிட்டல்! எந்த பெண்ணாக இருந்தாலும் தன் கணவன் தன்னை இரசித்து இப்படி கவரிசியாக புன்னகைத்து கண் சிமிட்டினால் அப்படியே மயங்கி விடுவாள்! இது அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவன் மீது அவளுக்கு காதலை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • நெற்றியில் சரியும் தலை முடி. பெரும்பாலான பெண்கள் தன் கணவனது நெற்றியில் சிறிதாக சரிந்து விழும் அந்த தலை முடியை பார்த்து இரசிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அதை கோவி விட வேண்டும் என்றும் ஆர்வம் அவர்களுக்கு தூண்டும். இருந்தாலும், அந்த சரிந்து விழும் முடியும் ஓர் அழகு தான். அதை பெண்கள் இரசிக்காமல் இருக்க முடியாது.


இவை அனைத்திற்கும் மேல், ஆண்கள்(irresistible) தங்கள் மனைவியிடம் திருட்டுத்தனமாக சில தவறுகளை செய்து விட்டு மாட்டிக் கொண்டு நிற்கும் போது, அதனை கண்டிப்பது போல நடித்து மனதிற்குள் இரசிக்கும் பெண்கள் அதிகம் உள்ளனர். ஒரு குழந்தையை போல அந்த ஆண் செய்வதறியாது தன் மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை பார்த்தால், விவரிக்க வார்த்தைகளே இருக்காது. இப்படியான சிறு சிறு இரசனைகளையும் பெண்கள் ஆண்களிடம் காண்கின்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?


பெண்களுக்கு தங்கள் கணவன் சிறு சிறு குறும்புகள் செய்வது மிகவும் பிடிக்கும். அதில் குறிப்பாக சமையலறையில் சத்தமில்லாமல் அச்சுறுத்தும் வகையில் பின்னிருந்து அனைத்துக் கொள்வது, கூந்தலை கோவி விட்டு விளையாடுவது, எதிர் பாரா நேரத்தில் செய்யும் சுவாரிசமான விடயங்கள் என்று பல உள்ளன.


எப்படிப் பட்ட ஆணாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு, குறிப்பாக அவன் மனைவிக்கு அவனை இரசிக்க பல காரணங்களும், விடயங்களும் கிடைக்கும். இந்த இரசனை நிச்சயம் அவர்களது உறவை மேலும் பலப்படுத்தும் விதமாகவே அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இங்கு குறிப்பிட்டுள்ள சில குணங்கள் மற்றும் ஆணிடம் இரசிக்கும் வகையிலான தோற்றங்கள் தவிரு, இன்னும் பல உள்ளன. ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளது கணவனின் தோற்றம் மற்றும் குணங்கள் ஏதாவது ஒரு வகையில் அதிகம் பிடித்திருக்கும். அத்தகைய தோற்றமும், குணமும் அனைத்து ஆண்களிடமும் (irresistible)இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. என்றாலும், அவனது தனித்துவமான குணங்கள் மற்றும் தோற்றம், அவனது மனைவிக்கு பிடித்திருந்தால், அவன் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்பது உறுதி. இத்தகைய இரசனை மிகுந்த குணங்களைக் கொண்ட ஆண்(irresistible) எப்போதும் அவள் அருகில் இருக்க வேண்டும் என்ற என்னத்தை அவளுக்குள் தூண்டும். இது கணவன் மனைவி உறவில் அன்பையும், காதலையும் அதிகரிக்கச் செய்யும்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo