கழுத்தில் ஏற்படும் கருமையை போக்கும் அழகு குறிப்புகள்!

கழுத்தில் ஏற்படும் கருமையை போக்கும் அழகு குறிப்புகள்!

சில பெண்களுக்கு நகை அணிவதால் கழுத்தில் கருப்பு வளையம் தோன்றி கவலை கொள்ள செய்யும். இது பெரும்பாலும் தங்கம் அல்லாத நகைகளை அணிவதால் ஏற்படலாம் கவரிங் மற்றும் மார்டன் நகைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஒவ்வாமையால் ஏற்படும். பாதுகாப்பு, தங்கம் விலை கருத்தில் கொண்டால் கவரிங் அல்லது மார்டன் நகைகளே அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கிறது. இருப்பினும் இவ்வகை அணிகலன்களை அணிவதால் கழுத்தில் ஏற்படும் கருமை(Dark Circles) நமக்கு சங்கடத்தை தரலாம், அழகை குறைக்கலாம். வீட்டில் இருந்த படியே எளிய முறையில் கழுத்தில் உள்ள கருமையை(Dark Circles)நீக்கலாம்.


 • எலுமிச்சை பழ சாற்றுடன் பாலும் தேனும் கலந்து கழுத்தை சுற்றி நன்கு தடவி, பத்து நிமிடம் கழித்து, கழுத்தை கழுவலாம். இப்படி தொடர்ந்து செய்து வர கழுத்தை சுற்றிய கருமை(Dark Circles)காணாமல் போகும்.

 • ஆலிவ் எண்ணெயுடன் பயித்தம் பருப்பு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து அந்த கலவையை கழுத்தை சுற்றி நல்ல பசை போல் தடவி வர கருமை(Dark Circles) நீங்கும். வாரத்திற்கு மூன்று முறை மைதா மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி நன்கு பசை போல் தடவி முப்பது நிமிடம் கழித்து கழுத்தை கழுவ கழுத்தில்(Dark Circles) ஏற்பட்ட கருமை போகும் .

 • கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

 • முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை(Dark Circles)போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

 • பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை(Dark Circles) நிறம் படிப்படியாக மறையும்.

 • சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.


darkcircles003


 • பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை(Dark Circles)நிறம் மறையும்.

 • தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

 • ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை(Dark Circles) அடைவதைத் தடுக்கும்.

 • ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை சம அளவு எடுத்து, கழுத்தை சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, எண்ணெய் இல்லாமல் சுத்தமாக கழுவுவதால் கருமை(Dark Circles) நீங்கி பளிச்சிடும்.

 • எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை(Dark Circles) அகலும்.

 • கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

 • பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால், விரைவில் கருமை(Dark Circles) மறையும்.


இதனை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை(Dark Circles) மறைவதுடன் சருமமும் நன்கு பொலிவுடன் காணப்படும்.


அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!


முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!


தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo