logo
ADVERTISEMENT
home / அழகு
வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!

வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!

கொழுத்தும் வெயிளில் வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு நமது முகத்தை நம்மலாலேயே கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை. காரணம் வெயிளின் தாக்கத்தால் முகம் முழுவதும் வரண்டு தண்ணீர் சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சு எடுக்கப்படுகின்றது. இதற்கு வீட்டிலிருந்தே நிரந்தர தீர்வு காண கீழே உள்ள முறைகளை பின்பற்றலாம்.

  • முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில்(sun tan) பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
  • சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
  • சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
  • முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில்(sun tan) பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
  • புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில்(sun tan) தடவலாம்.
  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.
  • பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.

natural-home-remedies-to-remove-sun-tan003
கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

  • ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில்(sun tan) உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில்(sun tan) தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.
  • கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில்(sun tan) உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
  • இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில்(sun tan) தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.
  • சோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில்(sun tan) தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்.
  • உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.
  • உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.
  • முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில்(sun tan) தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
  • ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில்(sun tan) தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

natural-home-remedies-to-remove-sun-tan004

முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்

ADVERTISEMENT
  • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில்(sun tan) பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
  • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில்(sun tan) தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
  • பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில்(sun tan) பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
  • வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில்(sun tan) ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.
  • ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில்(sun tan) ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
  • சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில்(sun tan) தேய்க்கவும்.
  • புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.
  • உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில்(sun tan) தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
  • ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
  • ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
  • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில்(sun tan) தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
  • வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில்(sun tan) ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
  • ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில்(sun tan)பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.
  • மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில்(sun tan) ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.
  • ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
  • இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்(sun tan) பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
  • முகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும்.

இதனை தொடர்ந்து தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று இருப்பதுடன் வெயிளின் தாக்கம் குறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

07 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT