logo
ADVERTISEMENT
home / அழகு
முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

பெண்களாகிய நாம் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். அதற்கு மேக் கப் போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் தினமும் மேக்கப் போடுவது நமது சருமத்திற்கு ஏற்றது இல்லை. இயற்கையான முறையில் நம்மை அழகாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

சருமம் நல்ல பொலிவுடன் இருந்தால் தான் நாம் போடும் மேக்கப்பும் அழகாக இருக்கும். கொழுத்தும் இந்த கோடை வெயிலில் நமது சருமத்தை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பது பற்றி பார்ப்போம். தேன் நம் முகத்தை பொலிவுடன் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

சிறந்த மாய்ஸ்ரைஸர்:
தேன்(honey) மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமமாக இருந்தால், ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது. மெலனின் நம் சருமம் கருமை அடைவதற்கு காரணமான ஹார்மோன் ஆகும். தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் சிவப்பழகு கூடும். சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கும்.

அலர்ஜியை தடுக்கும்:
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் க்ரீம்கள் போடும்போது உண்டாகும் அலர்ஜியை இந்தக் கலவை போக்கும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்துகிறது.

ADVERTISEMENT

முகப்பருக்கு பை பை:
உங்களுக்கு முகப்பரு தொல்லை தருகிறதா? அப்படியெனில் இதுதான் பெஸ்ட் சாய்ஸ். தயிரும் தேனும்(honey) சிறந்த கிருமி நாசினி. இவைகள் முகப்பருவை அண்ட விடாமல் தடுக்கின்றன.

honey face004

வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!

கருவளையம் போக்குகிறது:
கண்களும் அதற்கு கீழ் உள்ள பகுதிகளும் மிகவும் சென்ஸிடிவானது. அங்கு எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். கண் சுருக்கங்களை இந்த கலவை நாளடைவில் குறைத்து உங்களை அழகாக காட்டும்.

ADVERTISEMENT

சுருக்கங்களை போக்கும்:
தயிர் மற்றும் தேன்(honey) சருமத்திற்கு இறுக்கத்தினை தருகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சுருக்கங்கள் மறையும். இளமையாக உங்கள் முகத்தினை காட்டும்.
வெயிலினால் ஏற்படும்.

அலர்ஜியை தவிர்க்க:
சம்மரில் நிறைய பேருக்கு உண்டாகும் அலர்ஜி வேனிற்கட்டி, சிவந்து போய் தடிதடியாய் முகம் கழுத்து கை என வெயில் படும் இடத்திலெல்லாம் ஆகிவிடும். இந்த கலவையை தொடர்ந்து உபயோகித்தால், சரும பிரச்சனைகளிலிருந்து விடுதலை காணலாம்.

பால் தேன்(honey) பேஸ்பேக்:
உங்கள் சரும பிரச்சனைகளுக்கான ஒரு சிறந்த தீர்வு. பால் மற்றும் தேன்(honey) பேஸ்பேக். தேன்(honey) என்பது சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பழமையான ஆனால் மிகவும் சிறந்த ஒரு தீர்வாகும். கட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன்(honey) மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை. இது ஒரு ஈரப்பதத்தை தரும் பொருள் ஆகும். தேனுடன் பால் சேர்க்கும்போது இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்கிறது. பால் ஒரு இயற்கையான க்ளென்சர் ஆகும். மேலும் பால் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. சரும பிரச்சனைகளை உண்டாக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடி, சருமத்திற்கு மென்மை மற்றும் மிருதுவான உணர்வைத் தருகிறது. பால் மற்றும் தேனின் நன்மைகளை அறிந்து கொண்டோம். இப்போது இந்த பேஸ் பேக் செய்யும் முறையை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
1/2 அல்லது 1/3 கப் பால் 3-4 ஸ்பூன் ஆர்கானிக் தேன்(honey)
செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலை சேர்த்துக் கொள்ளவும். அந்த பாலில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் தேன்(honey) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவை இரண்டும் சேர்ந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் ஆகும்வரை நன்றாக கலக்கவும். ஒரு பிரஷ் அல்லது உங்கள் விரல் பயன்படுத்தி, இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். கன்னங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் கவனமாக இந்த பேஸ்டை தடவவும். கழுத்து முன் பகுதி மற்றும் பின் பகுதியிலும் இந்த பேஸ்டை ஒரே சீராக தடவவும். முழுவதும் இந்த பேஸ்டை தடவியவுடன் 10-15 நிமிடங்கள் அப்படியே காய விடவும். இந்த பேக் முழுவதும் காய்ந்தவுடன் ஒரு ஈரமான ஸ்பாஞ் கொண்டு முகத்தில் உள்ள பேக்கை துடைத்து எடுக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். காய்ந்த காட்டன் துண்டால் முகத்தை ஒத்தி அடுக்கவும்.

ADVERTISEMENT

தேவைப்பட்டால், இந்த கலவையில் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஒரு பிரெஷ் உணர்வு கிடைக்கும். முகத்தை துடைத்தவுடன் மாயஷ்ச்சரைசெர் பயன்படுத்த வேண்டாம். பால் ஒரு இயற்கையான மாய்ச்சரைசெர் ஆகும். அதுவே உங்கள் சருமத்தில் ஊடுருவ சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அடுத்த சில மணி நேரங்களுக்கு முகத்தை கழுவ சோப் பயன்படுத்த வேண்டாம். நாம் பயன்படுத்திய இயற்கை மூலப்பொருட்கள் முகத்தில் வேலை செய்யட்டும். இதே பேஸ் பேக்கை உங்கள் உடலில் ஈரப்பதத்தை இழந்த மற்ற இடங்களில் குறிப்பாக, கை மூட்டு பகுதி, பாதம், கால் முட்டி, முதுகு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். முகம் கழுவிய பின்னர், பஞ்சில் சிறிதளவு பன்னீர் ஊற்றி நனைத்து உங்கள் முகத்தில் ஒத்தி எடுக்கலாம். இதனால் உங்கள் முகம் புத்துணர்ச்சி அடைகிறது. வேறு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். பன்னீர் மட்டுமே போதுமானது.

honey face003

அரேன்ஜ் மேரேஜ்(திருமணம்) செய்து கொண்டவர்களின் முதலிரவு அனுபவம்!

இயற்கை மாயச்ச்சரைஸர்
இந்த பால் மற்றும் தேன்(honey) பேஸ் பேக் ஒரு இயற்கை மாயச்ச்சரைசெராக செயல்படுகிறது. இந்த பேஸ் பேக்கை பயன்படுத்திய ஓரிரு நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் சருமம் பளபளப்பாக மாறுகிறது.

ADVERTISEMENT

உதடு மற்றும் சரும வெடிப்பு
கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, உதடுகளில் உண்டாகும் வெடிப்பு போன்றவற்றைப் போக்க இந்த மாஸ்க் உதவுகிறது. குளிர்காலங்களில் மற்றும் மழைக்காலங்களில் சருமம் வறண்டு, பாத வெடிப்பு, மற்றும் உதடு வெடிப்பு உண்டாகிறது . இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் எளிய முறையில் அந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

சரும நிறமி
பால் மற்றும் தேன்(honey) மாஸ்க் முகத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால், சரும நிறமிழப்பை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் கட்டிகளைச் சிறந்த முறையில் போக்க உதவுகிறது. பருக்கள், வெட்டுகள் மற்றும் தழும்புகள் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. தட்டம்மை, சின்னம்மை போன்றவற்றால் உண்டாகும் தழும்புகள் கூட இந்த மாஸ்க் மூலம் மறைந்து போகும்.

வயது முதிர்வு
வயது முதிர்வை தடுப்பது இதன் மறைமுக நன்மை ஆகும். தொடர்ச்சியாக இந்த மாஸ்கை பயன்படுத்துவதால், இளம் வயதிலேயே முகத்தில் உண்டாகும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சருமத்தை இறுக்கமாக வைத்து இத்தகைய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கட்டிகளுக்கு ஏற்றது
முகத்தில் அடிக்கடி கட்டிகள் தோன்றி அதனைப் போக்க வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தேன்(honey)மட்டுமே கட்டிகளைப் போக்க வல்லது. இதனுடன் பால் சேர்த்தால் இதன் பலன் இரட்டிப்பாகும் . அதிக பணம் செலவு செய்து அழகு நிலையத்திற்கு சென்று தற்காலிக அழகைப் பெறுவதற்கு மாற்றாக வீட்டிலேயே இயற்கை முறையில் நிரந்தர அழகைப் பெற இந்த பால் தேன்(honey) மாஸ்க் உதவுகிறது. இதனைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல மாற்றத்தை உணருங்கள்.

ADVERTISEMENT

என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
17 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT