காபி விரும்பிகளுக்கு சில சுவாரசியமான தகவல்கள்!

காபி விரும்பிகளுக்கு சில சுவாரசியமான தகவல்கள்!

 


தேநீர் மற்றும் காபி(coffee), இவை இரண்டிற்குமே அதிக பிரியர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இதில் காபியை அதிகம் நேசிப்பவர்கள், அனேகமானவர்கள். அதிலும் இன்ஸ்டன்ட் காபி(coffee), பில்டர் காபி(coffee) என்று பல வகைப்படுத்தப் பட்டு, ஒவ்வொன்றிற்கும் கோடிக்காணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு காபி விரும்பி என்றால், உங்களுக்கு இங்கே நிச்சயம் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்!


காபியில்(coffee) நிறைந்துள்ள சத்துக்கள்
பால் அல்லது க்ரீம் சேர்க்காத காபியில் நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளது. காபி குறைந்த கலோரி எண்ணிக்கைகள் கொண்டுள்ளது. ஒரு கப் ப்ளாக் காபியில் 2 கலோரிகள் உள்ளது. எனினும், நீங்கள் பால், மற்றும் சர்க்கரை சேர்க்கும் போது இதில் கலோரியின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


காபியில்(coffee) நிறைந்துள்ள சில சத்துக்கள் குறித்த விடயங்கள் இங்கே


  • ஆக்ஸிஜனேற்றம் அதிகம் நிறைந்த முதல் பொருளாக காபி ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

  • இதில் நுண்ணூட்டச் சத்துக்கள், குறிப்பாக பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நியாசின் நிறைந்துள்ளது.

  • இதில் சோடியமின் அளவு மிகக் குறைவாக உள்ளது


coffee lovers005


முகத்தின் அழகை கெடுக்கும் முடியை வீட்டிலேயே சரி செய்யலாம்!
ஒரு 1௦௦ மில்லி லிட்டர் அளவு காபியில் நிறைந்துள்ள சத்துக்களின் குறிப்பு:


  • பொட்டாசியம் 92 மில்லி கிராம்

  • மக்னேசியம் 8 மில்லி கிராம்

  • ரிபோப்லாவின் ௦.௦1 மில்லி கிராம்

  • நியாசின் ௦7 மில்லி கிராம்


நீங்கள் காபியை(coffee) விரும்புவதற்கு சில காரணங்கள்
ஒரு பொருள் மீது, அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் மீது ஒருவருக்கு ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்த வகையில் காபி பிரியர்களுக்கு  சில பொதுவான காரணங்கள், குறிப்பாக ஏன் காபி அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதற்கு இருக்கும். அது மிக சுவாரசியமானதாகவும் இருக்கும்.


அந்த காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்


சூரிய உதயம் முதல் மாலை வரை
காலை எழுந்தவுடன், அழகான சூரிய உதயத்தின் போது, ரமியமான அந்த காலை வேளையில், சூடாக, உங்களை மயக்கும் நறுமனத்தோடு, மீண்டும் மீண்டும் சுவைக்கச் சொல்லும் ருசியோடு ஒரு காபி கிடைத்தால், வேண்டாம் என்று யார்தான் சொல்வார்கள். நீங்கள் எந்த மன நிலையில் காலை எழுகுரீர்கள் என்பதை விட, உங்கள் எண்ணங்களை நல்ல விதத்தில் மாற்றி, நீங்கள் சுறுசுறுப்பாக எழுந்து காலை வேலைகளை செய்ய, இந்த நறுமணம் மிகுந்த காபி ஒரு முக்கிய காரணியாக இருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது.


காபி இல்லையேல் அந்த நாள் இல்லை இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. பலர் காபியின் நிறம், மனம் மற்றும் சுவைக்கு பழகி விட்டால், பின் காபி இல்லாமல் அந்த நாளைத் தொடர முடியாது. இதற்கு காரணம், காபி அவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகு மாறிவிட்டது என்பதுதான்.


மருத்துவ குணம்
காபிக்கு பல நற்குணங்களும் உள்ளது. இது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தலை வலி, போன்ற பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய பெரிதும் உதவுகிறது. காபி உங்களுக்கு பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் சில ஆய்வுகள், காபி அருந்துவோர்கள், அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது. இது நிச்சயம் காபி(coffee) பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.


coffee lovers006


வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!


உங்கள் காலை உணவுக்கு ஏற்றத் துணை
பலர் என்னதான் வகை வகையாகவும், ருசியாகவும் இட்லி, தோசை, பூரி மசாலா, பொங்கல், வடை என்று காலை உணவை சாப்பிட்டாலும், ஒரு பில்டர் காபி(coffee) இல்லாமல் அது முழுமை அடையாது. பலர் இந்த பழக்கத்தை கொண்டுள்ளனர். மேலும், இவ்வாறு காபியுடன் சேர்ந்த உங்கள் காலை உணவு, உங்களுக்கு நாள் முழுவதும் உற்சாகத்தோடு வேலை பார்ப்பதற்கான சக்தியைத் தருகிறது.


உங்களை ஊக்கப்படுத்தும்
எந்த சந்தேகமும் இன்றி, நீங்கள் காலை முதல் மாலை வரை, அயராது வேலை பார்த்து விட்டு, மீதமுள்ள நாளை ஓட்ட முடியாமல் சோர்ந்து போகும் நேரத்தில், காபி(coffee) உங்களுக்கு ஒரு நல்ல ஊக்கமூட்டி. அனேகமானவர்கள் அதிக வேலையாள் மனம், மற்றும் உடல் சோர்ந்து போகும் போது, ஒரு திடமான பில்டர் காபி அருந்தும் பழக்கமுண்டு. இது அவர்களை நிச்சயம் உற்சாகப் படுத்தி, ஊக்கமடைய செய்யும்.


கலாச்சாரம்
நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்று, இந்த காபி(coffee). குறிப்பாக அதிக தென்னிந்திய வீடுகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் காபி(coffee) அருந்துவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு வேளையும் அதனை தவற விடுவதில்லை. இது காபி கலாச்சாரத்தோடு கலந்து விட்டதை குறிக்கும்.


நறுமணம்
காப்பியின்(coffee) நறுமணம் உங்கள் மனதை உடனடியாக அமைதி அடைய செய்யும். நீங்கள் அதிக மன அழுத்தத்தோடு இருந்தால், ஒரு பில்டர் காபியின் நறுமணம் உங்களை உடனடியாக அமைதி படுத்தி, விரைவாக நீங்கள் உற்சாகம் அடைய உதவும். மேலும் உங்கள் உடலையும் சற்று இளைப்பாற செய்யும்.


சுவை
ஒரு நல்ல பில்டர் காபிக்கு(coffee) இணையாக வேறு எந்த பானமும் இருக்க முடியாது. நீங்கள் ஒரு நல்ல காபியை ஒரு முறை சுவைத்து விட்டால், அதனை மறக்கவே மாட்டீர்கள். மீண்டும், மீண்டும் அதை எப்படியாவது சுவைத்து விட வேண்டும் என்று தீர்மானமாக இருப்பீர்கள். மேலும் அந்த சுவையில் எந்த மாற்றத்தையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.


விரும்புபவருடன் மகிழ்ச்சியான நேரம் செலவிட
உங்கள் மனதிற்கு விருப்பமானவருடன் நீங்கள் நல்ல நேரம் செலவிட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு காபி(coffee) ஒரு நல்ல காரணியாக இருக்கும். எதை சொல்லி நீங்கள் நேசிப்பவருடன் நேரம் செலவழிப்பது என்று யோசித்தால், அதற்கு இந்த காபி(coffee) உங்களுக்கு உதவும். இது உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் அலுவலகதத்தில் இருப்பவர்கள் என்று அனைவருடனும் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவிட ஒரு நல்ல காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.


மன நிறைவு தரும்
நல்ல நறுமணம் மிகுந்த, சுவையான காபி(coffee) ஒருவருக்கு நல்ல மன நிறைவைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் செய்யும் செலவிற்கும், அதற்காக ஒதுக்கும் நேரத்திற்கும் நிச்சயம் பலன் பெறுவீர்கள். அதனால், காபி(coffee) உங்கள் மனதிற்கு நல்ல நிறைவைக் கொடுக்கும்.


கவனத்தை அதிகரிக்கும்
காபியில் காஃபின் அதிகம் உள்ளதால் அது உங்கள் மனதை விழிப்புணர்வோடும், கவனத்தோடும் வைத்திருக்க உதவும். மேலும் உங்கள் மனம் தெளிவாகவும் இருக்கும். இதனால் நீங்கள் முழு கவனத்தோடு ஒரு வேலையில் ஈடுபட்டு சிறப்பாக செயல் பட உதவும். இதனால் உங்கள் உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.


coffee lovers004


அரசியலுக்கு வருகிறார் நயன்தாரா! தீவிர ஏற்பாடுகள் ஆரம்பம்...


காபியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நலன்கள்


காபியில்(coffee) பல மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றது. இதனை நீங்கள் அளவாகவோ அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனைப் படியோ பயன் படுத்தும் போது நல்ல பலன்களை பெறலாம்.


காபியில் கிடைக்கும் பல ஆரோக்கிய நலன்களை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:


உங்கள் சக்தியை அதிகரிக்கும்
நீங்கள் சோர்வடைந்து இருக்கும் போது காபி(coffee) அருந்தினால் உங்களுக்கு சக்தி கிடைத்தது போல இருக்கும். இதில் காஃபின் இருப்பதால் உங்களுக்கு உடனடி சக்தியை அது தரும். காஃபின் உங்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு உங்கள் மூளைக்கு பயணிக்கிறது. அங்கு தடுப்பு நரம்பியக்கடத்தி ஆடினோசைனைத் தடுக்கும். இது நடக்கும் போது நொரோபின்ப்ரைன் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் அளவு அதிகரிக்கும். இதனால் நியூரான்கள் ஊக்கவிக்கப் படுகிறது.


உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது
காஃபின் பல கொழுப்பை கரைக்கும்/எரிக்கும் சப்ளிமெண்டுகளில் பயன் படுத்தப் படுகிறது. இது கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதை நீங்கள் நேரடியாக எந்த ரசாயனக் கலவையும் இல்லாமல் உங்கள் வீட்டிலேயே காபிக் கொட்டைகளில் இருந்து தயார் செய்து அருந்துவதால், அதிக பலன்களை பெறுவீர்கள்.


நீரழிவு நோயை குறைக்க உதவும்
இன்று ஒரு பெரிய மக்கள்த் தொகை உலகளவில் நீரழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தாலும், இதனை பரிபூரணமாக குணப்படுத்த முடியாத நிலையே இன்றும் நிலவுகிறது. எனினும், நீங்கள் காபி அருந்துபவராக இருந்தால், அது உங்களுக்கு ஒரு நற்செய்தி தான். தினமும் ஒரு கப் காபி அருந்தி வந்தால் உங்கள் உடலில் நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம். இது நீரழிவு நோயால் வரும் சில பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.


இந்த நன்மைகள் மட்டுமன்றி, காபி மேலும் பார்கின்சன் நோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அல்லது அத்தகைய நோயின் தாக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.


coffee lovers003


MET GALA 2019 - பேஷன் ஐகான் என மீண்டும் நிரூபித்த ப்ரியங்கா சோப்ரா!


மேலும் இது உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. இதனால் இறப்பு சதவிதம் குறைகிறது. ஈரலில் ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படாமல் இருக்க காபி(coffee) உதவுகிறது. காபியை பற்றி மேலும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.


காபியில் பல நன்மைகள் நிறைந்திருந்தாலும், அதிலும் சில எதிர்மறை விளைவுகளும் இருக்கின்றது. அதிக அளவு காபி அருந்தினால் அது எதிர்மறை பிரச்சனைகளை விளைவிக்கக் கூடும். இதனால் பித்தம் அதிகரிக்கும் பிரச்சனை, மன நிலையில் மாற்றங்கள் என்று சில அறிகுறிகள் ஏற்படக் கூடும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இளம் வயதினர்கள் அதிகம் காபி அருந்துவதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இது உங்கள் உடலில் உள்ள இயற்க்கை கடிகாரத்தையும் சற்று பாதிக்கக் கூடும். இதனால் நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை முடிக்க முடியாமலும் போகலாம்.


நீங்கள் காபி வாங்கும் முன், அதனை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வாங்கும் காபியின் வகை, நிறுவனம், மற்றும் அதில் அடங்கி உள்ள பல தகவல்களை நன்கு ஆராய்ந்து சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது, காபியால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் உபாதைகளை நீங்கள் ஓரளவிர்க்காயினும் தவிர்க்கலாம்.


எதுவாக இருந்தாலும் காபி நிச்சயம் ஒரு நல்ல ஊக்கமூட்டி. இதன் சுவையை ஒரு முறை நீங்கள் ருசித்து விட்டால், உங்கள் ஆயுட்காலம் வரை அதனை மறக்க மாட்டீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo