உங்கள் கணவருடன் காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டுமா? சுவாரசியமான குறிப்புகள், உங்களுக்காக! (How To Be Romantic In Tamil)

உங்கள் கணவருடன் காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டுமா? சுவாரசியமான குறிப்புகள், உங்களுக்காக! (How To Be Romantic In Tamil)

திருமணம் ஆன அனைத்துப் பெண்களும், தங்கள் கணவருடன் ஓர் அழகான காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ எப்போதும் விரும்புவார்கள். திருமணம் உங்கள் காதலுக்கு ஒரு அங்கிகாரம் என்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது பெண்கள் தங்கள் கணவருடன் மகிழ்ச்சியான காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ எண்ணுவதில் தவறு ஏதும் இல்லை. இருப்பினும், தங்கள் கணவரை எப்படி ரொமாண்டிக் ஹீரோவாக ஆக்குவது என்பது தான் இங்கு கேள்வி.


அனைத்து ஆண்களும் தங்கள் மனைவி மீது கவனம் செலுத்தாமல் இருப்பதில்லை. எனினும், சிலர் மனைவியுடன் போதிய நேரம் ஒதுக்க முடியாமலும், அல்லது எப்போதும் வேலை, வேலை என்றும் இருந்து விடுகின்றனர். இது வாழ்க்கையை சுவாரசியம் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இப்படி இருக்கும் போது, மற்றும் சிலர், தங்களுக்கு நேரம் இருந்தாலும், தங்கள் மனைவியோடு எப்படி ரொமாண்டிக்காக இருப்பது என்றுத் தெரியாமல் நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்குகின்றார்கள். இந்த சூழலை மாற்றி, உங்கள் கணவருடன் ரொமான்ஸ் நிறைந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ எண்ணினால், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!


காதல் முக்கியத்துவம்


ரொமான்ஸ் வாழ்க்கைக்கு கொண்டு வரும் சில நன்மைகள்


எப்படி உங்கள் கணவருடனான காதலை அதிகப்படுத்துவது?


கேள்வி பதில்


 


உங்கள் கணவருடன் காதல் நிறைந்த வாழ்க்கை வாழ்வதன் முக்கியத்துவம் என்ன? (Importance Of Living A Romantic Life With Your Husband)


1How To Be Romantic In Tamil


திருமணம் ஆகி விட்டது, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அங்கிகாரம் மற்றும் பாதுகாப்பு கிடைத்து விட்டது. இனி மேலும் என்ன வேண்டும்?இது பெரும்பாலோனோரின் கருத்து மற்றும் கேள்வி.


திருமணம் ஆனவுடன் குழந்தை, வீடு சமையல், அலுவலகம் என்று இருந்துவிட்டால், உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகி விடாதா? மேலும் இப்படி ஒரு வாழ்க்கையில் எப்படி நீங்கள் மகிழ்ச்சியையும், நேசத்தையும், காதலையும் பகிர்ந்து கொள்ள முடியும்?


ஒரு கணவன், மனைவி உறவு என்றால், அதனை பிடிப்போடு வைத்துக் கொள்ள உதவுவது காதல். இது இருந்தால் மட்டுமே இறுதி வரை அந்த ஜோடி மகிழ்ச்சியாக ஒர் அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். பெரும்பாலான ஆண்கள் திருமணம் ஆகி சில மாதங்கள் கடந்து விட்டால், தங்கள் மனைவி மீது பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. இப்படி வெகு சிலரே இருக்கின்றனர்.


இருந்தாலும், அப்படி இருப்பதால், அது மனைவிக்கு மட்டுமல்லாமல், கணவருக்கும் மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும். ரொமான்ஸ், அதாவது உங்கள் காதலை வெளிபடுத்தி, இருவரும் பகிர்ந்து கொள்ளும் செயலை இது குறிக்கிறது.


2How To Be Romantic In Tamil


ஒருவர் மட்டுமே இதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள், வாழ்க்கை சுவாரசியம் இழந்து விடும். இதன் முக்கியத்துவத்தை இருவரும் புரிந்து கொண்டு காதல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே, உண்மையான மகிழ்ச்சி உங்கள் உறவில் ஏற்படும்.


திருமணத்திற்கு பின் வாழ்க்கையில் காதல் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, அதிகரிக்கும் அலுவலக பணிகள், குடும்ப பொறுப்புகள், குழந்தைகள், வயது அதிகரிப்பது, இதனால் உடல் சோர்வடைவது என்று மேலும் பல காரணங்களைக் கூறலாம். எனினும், இவை யாவும் உங்கள் உண்மையான காதலுக்கு ஒரு தடையாக இருக்க முடியாது.


மேலும் படிக்க - உங்களுடையது 'ஒருதலைக்காதல்' என்பதற்கான 'முக்கிய' அறிகுறிகள் இதுதான்!


ரொமான்ஸ் வாழ்க்கைக்கு கொண்டு வரும் சில நன்மைகள் (Benefits Of Romance In  Your Life)


நிறைந்த காதலுடன் இருவரும் வாழும் போது பல நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிறது . இதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால், இனி தினந்தோறும் உங்கள் வாழ்க்கையில் ரொமான்ஸ் தான். அப்படி என்ன மாற்றம் ஏற்படும், என்று கேட்பவர்களுக்கு, இங்கே சில விடயங்கள்• இருவரும் அன்யுநியமாக காதலுடன் வாழும் போது, முதலில் மன அழுத்தம் குறைகிறது. இதனால், அலுவலகத்திலோ அல்லது குடும்பத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டால், நீங்கள் தெளிவான மனதோடும், நிதானத்தோடும் செயல் பட முடிகிறது


• ரொமான்ஸ் (romance), நீங்கள் இருவரும் உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்க காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கணவன், மனைவி, இருவரும் கட்டாயமாக தினமும், தங்களுக்கென்று சிறிது நேரத்தை தனிமையில் கழிக்க வேண்டும். இது அவர்களின் அன்பையும், பந்தத்தையும் மேலும் வளர்க்க உதவும்.


• காதல் நிறைந்த வாழ்க்கை, விவாகரத்து என்னும் வார்த்தையை மறக்க செய்கிறது. கணவன், மனைவி, இருவரும் காதலுடன் வாழும் போது, அவர்களுக்கு, விட்டுக் கொடுத்து வாழும் எண்ணம் மேலோங்குகின்றது. மேலும் அவர்களுக்குள் புரிதல் அதிகரிக்கிறது. இதனால் வீட்டில் சண்டை ஏற்படும் வாய்ப்பு ஏற்படாமேல் போய் விடும்


3How To Be Romantic In Tamil


• அழகான குடும்பம் உருவாகிறது. கணவன் மனைவி நல்ல காதலுடன் வாழும் போது, அவர்கள் ஓர் அழகான குடும்பத்தையும் உருவாக்குகின்றார்கள். இது அவர்களது உறவிற்கு ஓர் அங்கிகாரத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அர்த்தத்தையும் உண்டாக்குகிறது.


• அமைதியான வாழ்க்கை. ஒவ்வொருவரும் இந்த வேகமாக சுழலும் வாழ்க்கையில், இழந்து தவிப்பது அமைதியை. குறிப்பாக திருமணம் ஆனவர்கள், தங்கள் தலை மீது சுமக்க முடியாத அளவிற்கு பாரத்தை சுமந்து ஓடும் போது, அவர்களுக்கு எப்படி அமைதி ஏற்படும். ஆனால், அதற்கு நிச்சயம் ஒரு வழி உள்ளது. அது தான் கணவன், மனைவி காதல். கணவன் மனைவி இருவரும் தங்களுக்கென நேரம் ஒதுக்கி தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளும் போது, எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அதனை அவர்கள் ஒன்று சேர்ந்து சரி செய்து விட முடிகிறது. இதனால், எத்தனை சுமை இருந்தாலும், அமைதியாக வாழும் சூழல் உண்டாகிறது.


இது மட்டுமல்லாது, மேலும் பல நன்மைகள், கணவன் மனைவி இருவரும் காதல் நிறைந்த வாழ்க்கையை வாழும் போது பெறுகின்றார்கள். அப்படி வாழும் வாழ்க்கை மட்டுமே முளுமையாகின்றது.


எப்படி உங்கள் கணவருடனான காதலை அதிகப்படுத்துவது? (How To Be Romantic In Tamil)


காதல் / ரொமான்ஸ் நிறைந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தை ஓரளவிர்க்காயினும் புரிந்து கொண்ட பின்,  இப்போது உங்கள் மனதில் எழும், கேள்வி, எப்படி காதலை அதிகப்படுத்துவது என்பது தான். இது எதார்த்தமான கேள்வி. மேலும் அழகான வாழ்க்கையை தங்கள் கணவருடன் வாழ வேண்டும் என்று போராடும் ஒவ்வொரு திருமணம் ஆன பெண்ணுக்கும் எழும் ஓர் முக்கிய கேள்வியும் இது.


உங்களுக்கு உதவ, இங்கே சில சுவாரசியமான குறிப்புகள் (டிப்ஸ்)  - உங்கள் கணவருடன் எப்படி ரொமான்ஸ்சை அதிகப்படுத்துவது?


1. உங்கள் கணவரை ஊக்கப்படுத்துங்கள் (Encourage Your Husband)


இது ஒரு முக்கியமான குறிப்பு. உங்கள் கணவர் உங்களுக்காக ஏதாவது புதிதாக செய்தல், அதனை உதாசீனம் படுத்தாமல், ஊக்கப் படுத்துங்கள். இப்படி செய்யும் போது அவர் உங்களுடன் நேரம் செலவிட ஓர் வாய்ப்பு கிடைப்பதோடு, உங்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவார். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் அதிகரிக்கும். மேலும் அவர் உங்களுடன் தனது காதலை வெளிபடுத்தும் வகையில் நடந்து கொள்ள முயற்சித்தால், அதனை தவிர்க்காமல், ஏற்றுக்கொள்ளுங்கள்.


2. உங்கள் எதிர் பார்ப்பை வெளிபடுத்துங்கள் (Share Your Desires)


4How To Be Romantic In Tamil


ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் பார்ட்னர் (partner) தன்னுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு சிறு ஆசைகளும், கற்பனைகளும் இருக்கும். அவற்றை உங்கள் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வதால் எந்த பலனும் இல்லை. அதனால், நீங்கள் அவரிடம் இருந்து அவ்வப்போது சிறு முத்தங்களை எதிர் பார்த்தாலோ, அல்லது சிறு புன்னகை அல்லது ஒரு அணைப்பு, என்று எதுவாக இருந்தாலும், அதனை அவரிடம் வெளிபடுத்துங்கள். இதனால் அவருக்கும் அப்படி எண்ணங்கள் அல்லது எதிர் பார்ப்புகள் இருந்தால் அதனை அவரும் உங்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


3. உங்கள் விருப்பத்தை கூறுங்கள் (Express Your Choice)


உங்கள் கணவருடன் நீங்கள் மனம் விட்டு பேசி உங்கள் விருப்பத்தை கூறும் போது அவர் அதனை வரவேற்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவ்வாறு நீங்கள் கூறும் போது, அவர் மனதில் ஏதாவது குறிப்பிடத்தக்க விருப்பங்கள் இருந்தால், குறிப்பாக, நீங்கள் அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்கள் காதலை எப்படி அவரிடம் (பார்ட்னர்) வெளி படுத்த வேண்டும் என்று ஏதாவது இருந்தால், அதனை பகிருந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். இப்படி இருவரும் தங்கள் விருப்பங்களை வெளிபடுத்தும் போது, உங்கள் ரொமான்ஸ் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.


4. இருவரும் காதலை பற்றி எண்ணுவதை பேசி பகிர்ந்து கொள்ளுங்கள் (Talk And Share)


திருமணத்திற்கு பிறகு, பெரும்பாலோனர் காதலை பற்றி பேசுவதும் இல்லை, பகிர்ந்து கொள்வதும் இல்லை. எனினும் அவர்களது மனதில் அத்தகைய விருப்பங்களும், எதிர் பார்ப்புகளும் நிச்சயம் இருக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ரொமான்ஸ் இருக்கின்றதோ அவ்வளவு அன்யுனியமும், பலமான உறவும் ஏற்படும். அதனால், எந்த காரணங்களைக் கொண்டும் உங்கள் காதல் வாழ்க்கையை நீங்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு விட்டுக் கொடுக்காமல் வாழ்வது முக்கியம்.


மேலும் படிக்க - நீண்ட நாள் காதலை உடனே கரெக்ட் பண்ண நச்சுனு 10 டிப்ஸ்


5. நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (Communicate)


5 How To Be Romantic In Tamil


கணவன், மனைவி, இருவரும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருப்பதால், உங்கள் இருவருக்கும் இடையே அவர்கள் முன் எப்படி உங்கள் காதலை கணவனிடமோ அல்லது உங்கள் கணவன் உங்களிடமோ வெளிபடுத்துவது என்ற தயக்கம் இருக்கும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே தூரம் அதிகரிக்கும். இதை தவிர்க்க ஏதாவது ஒரு சூழலை உங்களுக்கென ஏற்படுத்திக் கொண்டு, இருவரும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நேரம் அல்லது நாள் என்று ஏதும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் விருப்பங்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது, உங்கள் கணவரை உங்களிடம் அதிக காதலுடன் இருக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.


6. உங்களுக்கென திட்டமிட்டு நேரத்தை ஒதுக்குங்கள் (Set Aside time For Each Other)


இன்றைய விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், யாருக்கும், யாருடனும் நேரம் ஒதுக்கி செலவிட முடியாமல் போகின்றது. இது மற்ற உறவுகளுக்கு பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்துமோ இல்லையோ. நிச்சயம் கணவன் மனைவி காதல் உறவை பாதிக்கும். அதனால், நீங்கள் தினமும் சிறிது நேரமாவது உங்களுக்கென நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் கணவர் அலுவலகத்தில் இருந்து வந்த பின், மாலை நேரத்திலோ, அல்லது குழந்தைகள் தூங்க சென்றப் பின், இரவிலோ, உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி அவருடன் மனம் விட்டு பேசி உங்கள் காதலை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது உங்கள் வாழ்க்கையில் ரொமான்ஸ் நிச்சயம் அதிகரிக்கும். மேலும் வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில், அவருடன் அதிக நேரம் செலவிடும் வகையில் உங்கள் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.


7. பாராட்டை வெளிபடுத்தும் வகையில் பாவனை செய்யுங்கள்  (Appreciate Efforts)


உங்கள் கணவர் எதாவுது ஒன்றை வித்யாசமாகவோ அல்லது புதிதாகவோ செய்து விட்டால், அவரை ஊக்கப் படுத்தும் வகையில் பாராட்டுங்கள். குறிப்பாக வெறும் வாய் வார்த்தையில் உங்கள் பாராட்டை வெளிப் படுத்தாமல், சில சுவாரசியமான மற்றும் இரசிக்கும் வகையிலான பாவனைகளை செய்து பாராட்டுங்கள். இது அவருக்கு நிச்சயம் பிடிக்கும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ரொமான்ஸ் அதிகரிக்கும்.


8. உங்கள் உடை, நடை மற்றும் தோற்றத்தை மாற்றுங்கள் (Pay Attention To Your Dressing And Outlook)


6How To Be Romantic In Tamil


திருமணத்திற்கு பின், பெண்கள் பெரிதாக தங்கள் அலங்காரத்தில் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக குழந்தை பிறந்து விட்டால், முற்றிலுமாக தங்கள் தோற்றம் மற்றும் அழகை பராமரிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலான கணவர்கள் இதனை பொருட்படுத்தாமல் இருந்தாலும், அவர்கள் தங்கள் மனைவி, அழகாகவும், நல்ல தோற்றத்துடனும் இருப்பதையே அதிகம் மனதிற்குள் விரும்புகிறார்கள்.


மேலும் இதனாலேயோ என்னவோ, குழந்தை பிறந்ததும், கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் ரொமான்ஸ் காலப்போக்கில் குறைந்து விடுகிறது. அதனால், நீங்கள் எந்த நிலையிலும், உங்கள் தோற்றம், அழகு, உடை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்து விடக்கூடாது. . உங்கள் கணவருக்குப் பிடித்த மாதிரி உடை அணியுங்கள். அவர் விரும்பும் வகையில் உங்கள் சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரத்தை செய்து கொள்ளுங்கள். இது அவர் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க பெரிதும் உதவும். உங்கள் காதல் வாழ்க்கையும் வெற்றி பெரும்.


9. பரிசுகள் கொடுத்து ஆச்சரியப்படுத்துங்கள் (Surprise With Gifts)


உங்கள் காதல் வாழ்க்கை அவ்வப்போது போர் அடித்து போகாமல், சுவாரசியம் ஏற்பட வேண்டும் என்றால், நீங்கள் சில விடயங்களை செய்யத்தான் வேண்டும். உங்கள் கணவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், அவ்வப்போது அவருக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, பரிசு கொடுங்கள். குறிப்பாக அவருக்குப் பிடித்த ஒரு பொருளை மற்றும் தேவைப் படும் பொருளை அவருக்கேத் தெரியாமல் நீங்கள் புரிந்து கொண்டு பரிசளிக்கும் போது, அவர் மேலும் ஆச்சரியப் படுவார். இது அவர் உங்கள் மீது வைத்திருக்கும் ரொமான்ஸ்சை அதிகப்படுத்துவதோடு, உங்கள் காதல் வாழ்க்கையும் பலமாகும்.  


10. அவரை புன்னகைக்க வையுங்கள் (Make Him Smile)


திருமணத்திற்குப் பிறகு, சிறிது காலம் ஓடிவிட்டால், போதும். கணவன், மனைவி, இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை என்பதையே மறந்து விடுகிறார்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடக்கூடும். அதனால் அப்படி ஒரு சூழலை வர விடாமல், உங்கள் கணவருடனான ரொமான்ஸ் அதிகரிக்க நீங்கள் அவரை அவ்வப்போது புன்னகைக்க வைக்க வேண்டும். மேலும் இப்படி செய்யும் போது, அவர் மனதில் இருக்கும் அழுத்தம் மற்றும் டென்ஷன் குறைந்து மனம் புத்துணர்ச்சி பெரும். உங்கள் பக்கம் அவர் அதிகம் ஈர்க்கப் படுவார். அதனால், அவ்வப்போது அவர் விரும்பும் படி நடந்து கொண்டு அவரை புன்னகைக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.


7 How To Be Romantic In Tamil


11. அவருக்குப் பிடித்ததை கற்றுக்கொள்ளுங்கள் (Learn His Likes/Dislikes)


உங்கள் கணவருக்கு பிடத்த ஒன்றை, குறிப்பாக, அவருக்குப் பிடித்த உணவு சமைப்பது, அல்லது பாடல் பாடுவது, அல்லது வேறு ஏதாவது கைவினைப் பொருட்கள் செய்வது என்று அவருக்குப் பிடித்ததை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும்.  


12. அவருடன் நடனம் ஆடுங்கள் (Dance With Him)


உங்கள் கணவருடனான ரொமான்ஸ்சை அதிகப் படுத்த ரம்மியமான இசையோடு ஒரு அழகான நடனம் ஆடுங்கள். இன்று பல நடன பள்ளிகள் கணவன் மனைவிக்கென்றே பிரத்யேகமாக நடனங்களை கற்றுக் கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை கற்றுக் கொண்டோ அல்லது உங்களுக்குப் பிடித்தது போல இருவரும் உலகை மறந்து நடனம் ஆடுங்கள். இது நிச்சயம் உங்கள் காதலை அதிகரிக்கும்.


13. அவருடன் இருக்கும் போது போனைத் தள்ளி வையுங்கள் (Put The Phone Away While You Are With Him)


8 How To Be Romantic In Tamil


இன்று பெரும்பாலான குடும்பங்களில் விரிசல் ஏற்படுவதற்கும், ஏன் விவாகரத்து ஏற்படுவதற்கும் ஸ்மார்ட் போன் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதனால், உங்களுக்கு கணவருடன் செலவிட நல்ல நேரம் கிடைத்தால், அந்த நேரத்தில் உங்கள் போனுக்கு டாட்டா சொல்லி, தூரத்தில் வைத்து விடுங்கள்.


14. இருவரும் சேர்ந்து சமையல் செய்யுங்கள் (Cook Together)


நேரம் கிடைக்கும் போது இருவரும், சேர்ந்து பிடித்த உணவை சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இப்படி இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே சமைக்கும் போது, உங்கள் ரொமான்ஸ்சை அதிகப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.


15. வார இறுதியில் /அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது உல்லாச பயணம் செல்லுங்கள் (Plan Vacation Together)


பயணம் அதிக புத்துணர்ச்சியைத் தரும். மேலும் இருவரும் தனியாக உங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யும் போது, உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். இதனால் உங்களை அறியாமலேயே உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் வெளிப்படும். இது உங்கள் ரொமான்ஸ்சை அதிகப்படுத்தும்.


16. இதமான மாலைப்பொழுதில் கடலோரத்தில் / ரம்மியமான தோட்டத்தில் நடை செல்லுங்கள் (Walk Along The Coast)


9 How To Be Romantic In Tamil


நேரம் கிடைக்கும் போது மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசும் போது இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு மனதிற்கு இதமாக பேசிக் கொண்டே கடலோரமாகவோ அல்லது தோட்டத்திலோ நடந்து சென்றால், உங்கள் இருவருக்கும் இடையே காதல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


17. சுவாரசியமான மற்றும் உங்கள் காதலை அதிகப்படுத்தும் விதமான நினைவுகளை அசைப்போடுங்கள் (Share Memories)


அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம், அமைதியான ஒரு சூழலில் இருவரும் அமர்ந்து உங்கள் பழைய காதல் நினைவுகளை ஆசைப் போடுங்கள். இது உங்கள் இருவரின் ஆழ் மனதில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை வெளி கொண்டு வரும். மேலும் அந்த உதட்டோரம் ஏற்படும் புன்னகை உங்கள் காதலை அதிகப்படுத்த உதவும்.


மேலும் படிக்க - உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!


கேள்வி பதில் (FAQ's)


1. திருமண வாழ்க்கையில் அன்யுனியத்தை எப்படி அதிகரிப்பது?


நீங்கள் இது வரை வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் அன்யுனியமான காதல் வாழ்க்கைக்கு தேவையான  விடயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியான ஒரு சூழலை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.


2. பிரச்சனைகள் இருக்கும் கணவன் மனைவி உறவை எப்படி சரி செய்வது?


கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பே. எனினும், அது தொடர்ந்தாள் பிரிவையே ஏற்படுத்தும். அதனால், உங்களால் முடிந்தால் இருவரும் பேசி ஒரு புரிதலோடு அதனை சரி செய்ய முயற்சி செய்யுங்கள் அல்லது ஒரு நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று உங்கள் காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க முயற்சி செய்யுங்கள்.


பட ஆதாரம் - Instagram , Pexels


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.