logo
ADVERTISEMENT
home / Self Help
உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான சிறந்த முறைகள்

உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான சிறந்த முறைகள்

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் நல்ல படைப்பாற்றல்(creativity) இருக்கும். கூடதலாகவோ அல்லது குறைவாகவோ, அத்தகைய படைப்பாற்றல்(creativity) மட்டுமே ஒருவரை அவருக்கே தெரியாமல் இந்த வாழ்க்கையை ரசித்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

எனினும், இந்த படைப்பாற்றல்(creativity) ரசிப்பதற்கு மட்டுமல்லாமல், இதன் தூண்டுகோலாக பல புதிய படைப்புகள் உருவாகிக்கொண்டிருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல கற்பனை செய்யும் திறனோடு தான் இருக்கிறார்கள். அதை பக்குவப்படுத்தி, சரியான வழியில் அதிகரிக்கச் செய்தால் நீங்கள் மேலும் நல்ல முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் அடையலாம். இதனோடு உங்கள்  படைப்புகளும் அதிகரிக்கும்.

படைப்பாற்றல்(creativity) என்றால் என்ன?
உங்கள் கற்பனையை அல்லது உங்கள் யோசனைகளை பயன் படுத்தி ஒன்றை உருவாக்குவது படைப்பாற்றலாகும்.  உங்களுக்கு ஒரு புதுமையான யோசனை தோன்றினால் அதனை மேலும் உங்கள் கற்பனையைக் கொண்டு மெருகூட்டி ஒரு நல்ல வடிவத்தை உண்டாக்கி அதனை வெற்றிகரமாக செயல் படுத்துவது படைபாற்றலாகும்.

இந்த திறன் பெரும்பாலும் அனைவருக்குமே உள்ளது. எனினும், அதற்கு வெகு சிலரே முக்கியத்துவம் கொடுத்து தங்கள் திறமையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் படைப்பாற்றலை(creativity) வளர்த்துக்கொள்ள விரும்பினால் அதனை நீங்கள் எளிதாக சில விடயங்களை பின்பற்றுவதால் செய்துக்கொள்ளலாம். இந்த திறன் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

how-to-boost-creativity004

படைப்பாற்றலுடன்(creativity) இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?, ஏன் நீங்கள் படைப்பாற்றலுடன் இருக்க வேண்டும்?
இது ஒரு நல்ல கேள்வி! இதற்க்கான பதிலை நீங்கள் தெரிந்து கொண்டால், அடுத்த கணமே உங்கள் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள்.

உங்கள் படைபாற்றலாய் நீங்கள் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

சுதந்திரமாக சிந்திக்கும் வாய்ப்பு
உங்களுக்கு சிந்திக்க எந்த கட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு நீங்கள் சுதந்திரமாக சிந்திக்கும் போது நீங்கள் மேலும் பல புதுமையான யோசனைகளை பெறுவீர்கள். இதனால் உங்கள் மனமும் மகிழ்ச்சியோடு இருக்கும். இந்த சுதந்திரம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான பாதையில் செல்ல உதவும். இது நீங்கள் தைரியமாக எந்த குழப்பமும் இல்லாமல் ரிஸ்க் எடுக்கவும் உதவும்.

ADVERTISEMENT

விழிப்புணர்வு அதிகரிக்கும்
உங்கள் படைப்பாற்றல்(creativity) அதிகரிக்கும் போது நீங்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க தொடங்குவீர்கள். இந்த விழிப்புணர்வு மேலும் நீங்கள் தன்னம்பிக்கையோடு ஒரு நல்ல புரிதல் பெற்று உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற உதவும்.

நம்பிக்கை அதிகரிக்கும்
நீங்கள் தன்னிச்சையாக செயல் படத் தொடங்கும் போது உங்கள் தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும். மேலும் இதனால் உங்கள் உள்ளுணர்வும் உங்களுக்கு சரியான பாதையை நோக்கி செயல்பட உதவும். இது மட்டுமின்றி ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றால், அதிலும் திடமாக நன்கு சிந்தித்து முடிவெடுக்கும் திறனைப் பெறுவீர்கள்.

மன அழுத்தம் குறையும்
உங்கள் கற்பனை அதிகரிக்கும் போது, உங்கள் படைப்பாற்றல்(creativity) அதிகரிக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியோடு வேலை பார்ப்பீர்கள். இப்படி மகிழ்ச்சியாக வேலை பார்க்கும் போது உங்கள் மன அழுத்தம் குறைந்து நீங்கள் மேலும் அதிக படைப்பாற்றலைப் பெறுவீர்கள்.

பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும்
உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும் சிந்திக்கத் தொடங்கி விட்டால் உங்களால் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை எளிதாக கையாண்டு அதற்கான சரியான தீர்வையும் பெற முடியும். இதனால் எத்தகைய சவால்கள் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதனை நீங்கள் எளிமையாக சமாளித்து விடுவீர்கள்.

ADVERTISEMENT

உங்கள் படைப்பாற்றலை(creativity) அதிகரித்துக் கொள்ள சில சுவாரசியமான குறிப்புகள்:

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற மற்றும் வெற்றிப் பெற படைப்பாற்றல்(creativity) எவ்வளவு முக்கியம் என்று பார்த்தோம். இப்போது அந்த படைப்பாற்றலை பெற அல்லது அதிகரித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அவ்வப்போது நடை செல்லுங்கள்
நீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமைதியாக ஒரு நடை சென்று வாருங்கள். அவ்வாறு செய்யும் போது உங்கள் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சிப் பெரும். இதனால் உங்கள் படைப்பாற்றலுக்கான(creativity) திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் உடலில் இருக்கும் சோம்பல் போய் நீங்கள் சுறுசுறுப்பாகவும் செயல் படத் தொடங்குவீர்கள். இந்த நடை சில குறிப்பிடத்தக்க சிந்திக்கும் திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

உங்களை நீங்களே பாராட்டுங்கள்
நீங்கள் செய்யும் சின்னச் சின்ன வேலைகளை முடித்த உடன் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். இது நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி பெருகுரீர்கள் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்து, உங்களை உற்சாகப் படுத்தும். இதன் நேர்மறை விளைவாக நீங்கள் உங்கள் கற்பனை வளங்களை அதிகரித்து நாளடைவில் உங்கள் படைப்பாற்றலை(creativity) அதிகரித்துக் கொள்வீர்கள்.

ADVERTISEMENT

உங்கள் மனம் சொல்வதை செய்யுங்கள்
நீங்கள் செய்யும் காரியத்தில் வெற்றி பெற்று விட்டாலோ அல்லது தோல்வி அடைந்து விட்டாலோ, பெரும்பாலான நேரங்களில் உங்களுடன் இருப்பவர்கள் உங்களை சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ள சொல்வார்கள். எனினும், அதற்கு தேவை இல்லை. உங்களால் தொடர்ந்து அடுத்த வேலையை எடுத்து செய்ய முடியும் என்றால், பின் உங்கள் மனம் சொல்வதை மட்டும் கேளுங்கள். இது உங்கள் திறன் மற்றும் படைப்பாற்றலை(creativity) அதிகரிக்க உதவும்.

கனவு காணுங்கள்
நீங்கள் கனவு காணும் ஒவ்வொரு சமயமும் உங்கள் கற்பனை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் உற்சாகம் அடைந்து அதனை செயல் படுத்த ஊக்கவிக்கப் படுகுறீர்கள். இது நீங்கள் மேலும், மேலும் பல புதிய காரியங்கள் செய்ய வழி வகுக்கிறது. மேலும் உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் செய்யும் போது உங்கள் மனம் அமைதியாகவும், எந்த அழுத்தமும் இல்லாமலும் செயல் படுவதால் உங்களுக்கு சோர்வு ஏற்படாது. இதுவே நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த முயற்சி உங்கள் படைப்பாற்றலை(creativity) அதிகரிக்க நிச்சயம் உதவும்.

தியானம் செய்யுங்கள்
அதிகாலையில் அல்லது நீங்கள் இரவில் தூங்கப் போவதற்கு முன் சிறிது நேரம் த்யானம் செய்வதால் உங்கள் மனம் தெளிவு பெறுகிறது. மேலும் மனம் மற்றும் உடல் நல்ல புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால் உங்கள் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறது. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் த்யானம் செய்வதால் உங்கள் மனம் மேலும் அமைதி பெற்று, சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.

உங்கள் மனதை சுதந்திரமாக விடுங்கள்
இது மிக முக்கியமான ஒன்று. எப்போதும் எதோ ஒன்றை பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்காமல், உங்கள் மனதை அவ்வப்போது சுதந்திரமாக விடுங்கள். இப்படி எந்த சிந்தனையும் அல்லது வாக்குவாதமும் உங்களுக்குள் நடக்காமல் இருக்கும் போது உங்கள் மனம் மேலும் அமைதி பெறுகிறது. இதனால் உங்கள் படைப்பாற்றல்(creativity) அதிகரிக்கிறது.
how-to-boost-creativity003

ADVERTISEMENT

சுற்றுலா செல்லுங்கள்
பயணம் ஒரு நல்ல ஆயுதம். நீங்கள் சுற்றுலா அல்லது ஒரு சிறிய பயணம் செய்யும் போது உங்களது வாடிக்கையான வாழ்க்கை முறையில் இருந்து சிறு விடுப்பு கிடைக்கிறது. இந்த இடைவேளை உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு உங்கள் கற்பனை வளத்தை அதிகரிக்க உதவியாகவும் இருக்கிறது. இத்தகைய முயற்சி உங்கள் படைப்பாற்றலை(creativity) நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் சுற்றுசூழலை மாற்றுங்கள்
உங்களைச் சுற்றி இருக்கும் விடயங்களும் உங்கள் படைப்பாற்றலை(creativity) பாதிக்கக் கூடும். குறிப்பாக, உங்கள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களால் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், நீங்கள் வசிக்கும் இடத்தில் அதிகம் சத்தம் மற்றும் மாசு இருப்பது, எப்போதும் அமைதியற்ற ஒரு சுற்றுசூழல் என்று உங்களை சுற்றி நடக்கும் விடயங்களும் உங்கள் படைப்பாற்றலை(creativity) பாதிக்கக் கூடும். அதனால், நீங்கள் ஒரு அமைதியான சூழலில் உங்கள் வீடு மற்றும் வாழ்க்கையை அமைத்துக் வாழ்வது நல்லது.

உங்களுக்கு ஏற்படும் புதிய யோசனைகளை பதிவு செய்யுங்கள்
கற்பனையால் உதிக்கும் யோசனைகள் அற்புதமானது. மற்றும் அது அபூர்வமானதும் கூட. இந்த அவசர வாழ்க்கை முறை மற்றும் அவசர உலகத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் யோசனைகளை மறந்து விடக் கூடும். அதனால் உங்களுக்கு ஏற்படும் யோசனைகளை அவ்வப்போது ஒரு புத்தகத்தில் அல்லது உங்கள் கணினியில் பதிவு செய்து வையுங்கள். இது வரும் நாட்களில் நீங்கள் தேவைப்படும் போது அதில் இருந்து சில விடயங்களை எடுத்து பயன் படுத்திக் கொள்ள உதவும்.

உங்களுக்கு நீங்களே புதிய வழியில் சவால் விடுங்கள்
செய்ததையே மீண்டும், மீண்டும் செய்வதால் எந்த சுவாரசியமும் இருக்காது. மேலும் இதனால் நீங்கள் புதிதாகக் கற்றுக்கொள்ள எதுவும் இருக்காது. அதனால் உங்களுக்கு நீங்களே அடுத்து புதிதாக என்ன செய்யப் போகிறோம் என்றும் அதனை எப்படி சவால் மிகுந்ததாக ஆக்குவது என்றும் சிந்தித்து செயல் படத் தொடங்குங்கள். இது உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலை(creativity) அதிகப் படுத்த நிச்சயம் உதவும்.

ADVERTISEMENT

ரமியமான இசை
இசை உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்த உதவும் ஒரு நல்ல கருவி. இதை யாரும் மறுக்க முடியாக. நீங்கள் நேரம் கிடைக்கும் போது உங்களுக்கு பிடித்த இசையை கேட்டால் உங்கள் மனம் அமைதியாகிறது. இதனால் நீங்கள் சிறிது நேரத்தில் புத்துணர்ச்சி பெருகுரீர்கள். உங்களுக்கு பிடித்த இசையை நீங்கள் கேட்கும் போது உங்கள் உடலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது. இத்தகைய மாற்றங்கள் உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்கள் திறனை அதிகரிக்கும் விளையாட்டை விளையாடுங்கள்
சதுரங்கம், போன்ற சில விளையாட்டுகள் உங்கள் சிந்திக்கும் திறனை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். இது உங்கள் படைப்பாற்றலை(creativity) அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த குறிப்புகள் மட்டுமல்லாமல் நீங்கள் உங்களுக்கு பிடித்த விடயங்களை அதிகம் செய்ய முயலும் போது உங்கள் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் அதிக ஈடுபாடு செலுத்துங்கள். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் எந்த விடயமாக இருந்தாலும் அது நீங்கள் எதிர் பார்த்த பலனை உங்களுக்கு விரைவில் தரும். இது மட்டுமல்லாமல், நீங்கள் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை அதிகம் படிக்கு முயற்சி செய்யுங்கள். அதிகம் புத்தகங்கள் படிக்கும் போது உங்கள் மூளைத் திறன் அதிகரிக்கும். இதனால் உங்கள் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். இது உங்கள் படைப்பாற்றலை(creativity) அதிகரிக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

MET GALA 2019 – பேஷன் ஐகான் என மீண்டும் நிரூபித்த ப்ரியங்கா சோப்ரா!

ADVERTISEMENT

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்… வீட்டிலேயே இதை செய்யலாம்!

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான 10 காரணங்கள்

 

07 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT