logo
ADVERTISEMENT
home / அழகு
செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

செக்க சிவந்த அழகான உதடு வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு(lips) முக்கிய பங்குள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு(lips) இருப்பவர்களை பார்ப்பது அரிது. ஏனெனில் பலருக்கு உதடுகள்(lips) மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.

இதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் தான் காரணமாக உள்ளது. இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு(lips) லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். எனவே உதடுகளின்(lips) சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்… வீட்டிலேயே இதை செய்யலாம்!

  • எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில்(lips) தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.
  • தினமும் யோகர்ட்டை உதட்டில்(lips) தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும்.
  • ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை(lips) சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.
  • உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு(lips) கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில்(lips) உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு(lips) பழைய பொலிவுக்கு வந்து விடும்.
  • பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில்(lips) தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
  • வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில்(lips) தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
  • குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும்(lips) பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும்.
  • மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.
  • பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள்(lips)மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.

  • மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள்(lips) அழகாகும்.

  • உதடு காய்ந்திருக்கிறதா என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

pink lips003

ADVERTISEMENT

கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

  • கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் படுக்கைகுச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

  • கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள்(lips) சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வேசிலின் தடவுவது நல்லது.

  • தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  • ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள்(lips) சிவந்து பளபளப்பாக காட்சியளிக்கும்.

     

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

வெயிலால் முகத்தில் ஏற்படும் கருமையை காணாமல் ஆக்கும் வீட்டு வைத்தியங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

09 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT