அழகால் அனைவரையும் கட்டி இழுத்த தீபிகா படுகோன் - ஸ்பெஷல் வீடியோ

அழகால் அனைவரையும் கட்டி இழுத்த தீபிகா படுகோன் - ஸ்பெஷல் வீடியோ

தீபிகாவை பிடிக்காத இதயம் என்று ஒன்று இருக்காது. அகத்தின் அழகை முகத்தில் காட்டுபவர் தீபிகா. கடந்த வருடம் ரன்வீரை கைப்பிடித்த தீபிகா, அதன் பின் மீண்டும் நடிக்கவும் தொடங்கி விட்டார்.


அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை ஒன்றில் தற்போது Deepika padukone நடித்து வருகிறார். இது தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.


இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு 35 மில்லியன் மக்களுக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இவர் அவ்வவ்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி அவரது ரசிகர்களை மகிழ்விக்கிறார்.


ஆல்யா மான்ஸா பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர? வெளியான புது விபரங்கள்சமீபத்தில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் பாடகி லேடி காகா போன்றவர்கள் கலந்து கொண்டனர்.அதில் தீபிகாவும் கலந்து கொண்டார்.


பிரியங்கா சோப்ரா தனது முகத்தை அவலட்சணமாக்கி விட்டு தனது உடல் வடிவத்தின் பேரழகு ஹைலைட் ஆகும் ஒருவிதமான உடையை தேர்ந்தேடுத்து அணிந்திருந்தார். நிக் ஜோனஸ் மனைவியை பின்பற்றி அவருக்கு பொருத்தமாக வந்திருந்தார். கையில் சுற்றியிருந்த டேப் போன்ற துணி இணையத்தினர் புண்ணியத்தில் டாய்லெட் பேப்பர் ஆனது.


அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள்!லேடி காகா ஒரு ஸ்ட்ரிப்பரை போல உடை அணிந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். மேலும் சில வெளி நாட்டு நடிகைகள் அவர்கள் இஷ்டத்திற்கு தங்களை அலங்கோலப்படுத்தி கொண்டு கேட் வாக் செய்தனர்.


ஆனால் தீபிகா எப்போதும் வித்யாசமானவர். கான்செப்ட் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டு விட்டு அழகுபதுமையாக பிங்க் நிற உடையில் தேவதையாக அனைவரையும் வசீகரித்தார்.


 இந்த வீடியோ வைத்தான் தனது இன்ஸ்டா க்ராமில் பகிர்ந்திருந்தார் தீபிகா. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியிருக்கிறது. 4லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த விடியோவை கண்டுள்ளனர்.


இதில் தீபிகா வித்யாசமாக டிசைன் செய்யப்பட்ட பிங்க் நிற கவுனில் உயர்த்தி போடப்பட்ட கூந்தலோடு அழகிய பதுமையாக பொம்மை போல வருவது அனைவரின் இதயத்தையும் நிச்சயம் ஈர்க்கும்.
 

 

 


View this post on Instagram


 

 

#Repost @zacposen with @get_repost ・・・ @deepikapadukone ✨💞✨💗✨🌸⭐️💓 #zacposen #metgala #deepikapadukone


A post shared by Deepika Padukone (@deepikapadukone) on
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் instagram                                         


---                                                               


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.