இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி(hair) வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை(hair) மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி(hair) தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.
அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை(hair) மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும்(hair) கொட்டி விடும். எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை(hair) எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில்(hair) தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி(hair) அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி(hair) மறைவதை நீங்கள் காண முடியும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அத்தனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில்(hair) நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயம்: வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி(hair) மறையும்.
நெய்: நெய் கூட வெள்ளை முடியை(hair) மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி(hair) வருவதைத் தடுக்கமுடியும்.
மிளகு: தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி(hair) மறையும்.
ப்ளாக் டீ: 1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை(hair) விரைவில் போக்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய்
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நெல்லிக்காய், பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யவல்லது. இது உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தலைமுடி(hair) பிரச்சனைகள் போன்ற பலவற்றையும் சரிசெய்யவல்லது. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடியது. கடைகளில் இது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பயன்படுத்தினால், நரைமுடியை சரிசெய்யலாம்.
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் என சில நாட்கள் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.
வெங்காயம்
வெங்காயத்தால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். ஆனால் இதன் பேஸ்ட் வெள்ளை முடியைப் போக்கும். அதற்கு வெங்காயத்தை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். ஸ்கால்ப் நன்கு காய்ந்த பின் ஷாம்பு கொண்டு நீரால் தலைமுடியை அலசுங்கள் இந்த முறையை தினமும் செய்தால், எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். ஒருவேளை வாரத்திற்கு ஒருமுறை செய்தால், எவ்வித மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே தினந்தோறும் தவறாமல் செய்யுங்கள்.
ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின் அந்த வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். வெங்காயம் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே ஷாம்பு எதையாவது பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்
வெள்ளை முடி பல நேரங்களில் நமக்கு எரிச்சலையும், நம் அழகைக் கெடுக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வெள்ளை முடி(hair) கருப்பாக மாற வேண்டுமானால், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை ஒரு நல்ல எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கும். நிச்சயம் இந்த இயற்கை வழியால் நம் தலைமுடியில் மாயம் ஏற்படுவதைக் காணலாம்.
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், நிச்சயம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
எள்ளு விதைகள் மற்றும் பாதாம் எண்ணெய்
எள்ளு விதைகளை அரைத்து, பாதாம் எண்ணெயுடன் கலந்து, சில வாரங்கள் ஸ்கால்ப்பில் தடவி வருவதன் மூலம், நரைமுடியைத் தடுக்கலாம். இந்த முறையால் வெள்ளை முடி கருமையாக மாறும் என நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே உங்களது வெள்ளை முடியை கருமையாக்க நினைத்தால், இந்த முறையைப் பின்பற்றுங்கள். இந்த கலவை நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும்.
வெயிளிற்கு குட் பை சொல்லும் ஃப்ரூட் பேஷியல்!
அழகான அடர்த்தியான புருவங்கள்ளுக்கான ரகசிய டிப்ஸ்!
தாமதமாகும் பீரியட்ஸ்க்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் இந்த விஷயம் தான் காரணம்!
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo