நீண்ட நாள் காதல் கைகூட போகும் அந்த அதிர்ஷ்டக்கார ராசி உங்களுடையதா ! ராசிபலனை பார்வையிடுங்கள் !

நீண்ட நாள் காதல் கைகூட போகும் அந்த அதிர்ஷ்டக்கார ராசி உங்களுடையதா ! ராசிபலனை பார்வையிடுங்கள் !

இன்று செவ்வாய் கிழமை நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம் வைகாசி மாதம் 14ம் நாள். இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.மேஷம்


வேலை அதிகமாக இருப்பதால் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருப்பீர்கள். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுங்கள். முதுகு வழி பிரச்சணை உங்களுக்கு இருப்பதால் மருத்துவரை பார்ப்பது நல்லது


ரிஷபம்


இன்று தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. வேலையை உங்களுக்கு தகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள். பிறரின் முட்டாள் தனமாக ஆலோசணைகளால் வேலையை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் விரைவில் சுப காரியம் ஒன்று தேடி வரும். காதல் கைகூடலாம்


மிதுனம்


வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை தொடர்ந்து ஏற்படும். ஆனாலும் சில போட்டிகள் அவ்வப்போது வந்து போகும். ஆனால் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மந்தமாக சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை காயப்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் சிறிது நேரம் பொறுமை காத்தால் அனைத்தும் நன்றாக முடிவு பெறும்.


கடகம்


பணியில் புதிய முன்னேற்றம் அல்லது பணி மாற்றம் கிடைக்கும். பின்னால் நீங்கள் சமாளிக்கக்கூடிய பிரச்சணைகளை கருத்தில் கொண்டு பணியில் இறங்கவும். நாளின் இரண்டாம் பகுதி மிகவும் இன்பமாக இருக்கும். உங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்


சிம்மம்


வேலை நிலையானதாக இருக்கும். முடிந்த வரை பிரச்னைகளை விட்ட ஒதுங்கி இருங்கள். உங்கள் வார்த்தை பல விளைவுகளை கொண்டு வரும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்தமாக காரியங்களில் சந்தோஷமாக மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.


கன்னி


குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் துணையுடன் நேரத்தை அதிகம் செலவிடுங்கள். உங்களுக்குள் இருக்கும் ரொமான்டிக் தன்மை வெளிவரும் நேரம் இது. பணி எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கம்.


துலாம்


வெளி இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டி இருக்கும். சமூக நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது வாழ்வில் போதிய திருப்தி கிடைக்கும். மக்களிடம் அதிக பேச வேண்டிய நாள் இது. பணி சுமை அதிகம் இல்லாவிடினும் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும்.


விருச்சிகம்


நீங்கள் எவ்வளவு தான் நன்மையான காரியம் செய்தாலும் பெற்றோர் மற்றும் சகோதரரால் இன்னல்களுக்கு ஆளாவீர்கள். உங்கள் மனதை காயப்படுத்துவார்கள். இதை எண்ணி கலக்கம் அடைய வேண்டாம். நன்மையானது உங்களை விரைவில் தேடி வரும்.


தனுசு


இன்று மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும் உங்கள் பழைய நண்பரை தேடி கண்டு பிடிப்பதில் அதிகம் சோர்வடைந்திருப்பீர்கள். நீண்ட நாள் நண்பர் வந்ததை எண்ணி மிகவும் சந்தோஷத்தில் இருப்பீர்கள். உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்


மகரம்


பணியில் அதிக பொறுப்புகள் கூடு கொண்டே செல்கின்றது. அதிக சோர்வுடன் காணப்படுவீர்கள். நேரத்தில் சாப்பாடு மற்றும் தூக்கம் உங்களுக்கு அவசியம். உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்


கும்பம்


உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது என்றாலும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். பிரச்னைகளை கையாள்வதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுய விளம்பரம் செய்துக்கொள்ளாதீர்கள். இது மிகப்பெரிய ஆபத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத பிரச்சணை வாக்குவாதம் வேண்டாம்.


மீனம்


சில விஷயங்கள் உடனே நடக்க வேண்டும் என அதிக அழுத்தம் கொடுக்கிறீர்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் உங்கள் அவசரம் அதை முடிக்க சொல்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நல்ல தெளிவான முடிவை இன்று காண்பீர்கள்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா


இதற்குத்தானா பெண் எனும் சக்தி பயன்படுகிறது ? ராகுல் ப்ரீத் சிங் மீது பாயும் கேள்விக்கணைகள்..


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.