வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு நகரும் அந்த சுதந்திர பறவை நீங்கள்தானா ! மேலும் பல அதிர்ஷ்டங்கள் பற்றி அறிய சரி பாருங்கள் உங்கள் ராசிபலனை !

வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு நகரும் அந்த சுதந்திர பறவை நீங்கள்தானா ! மேலும் பல அதிர்ஷ்டங்கள் பற்றி அறிய சரி பாருங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று ஞாயிற்று கிழமை அஷ்டமி திதி அவிட்ட நட்சத்திரம் வைகாசி மாதம் 12ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலன் பற்றி சரிபாருங்கள்.மேஷம்


வாழ்க்கை என்பது மேடு பள்ளங்களால் ஆனது என்பதை நீங்கள் ஏற்று கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.நிம்மதியும் பேரன்பும் உங்களுக்குள் இருந்து தொடங்கட்டும். உங்களுக்கு வெளியில் இருந்து இல்லை. அமைதியாகவும் கோர்வையாகவும் இருங்கள்


ரிஷபம்


உங்களில் ஒரு சிலருக்கு நிம்மதியற்ற உறக்கம் ஏற்படலாம். அல்லது மோசமான கனவுகள் வரலாம். உங்கள் மனதில் ஆழமாக வேரூன்றப்பட்ட சில பயங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் வெளியே வரலாம். உதவியை தேடுங்கள். இறையை நாடுங்கள்.


மிதுனம்


உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த சில பிரச்னைகள் சரியாகும். பரிசுத்தமான தெய்வீகத்தின் பேரருள் தற்போது உங்கள் மீது பொழிய தொடங்கி உள்ளது. நன்றியோடு இருங்கள்.


கடகம்


கண்மூடித்தனமாக யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். உங்கள் நோக்கங்களை மற்றவர்களுக்காக மாற்றி கொள்ளாமல் வெறுமனே அவர்களின் பேச்சுக்கு மட்டுமே மரியாதையை கொடுப்பது உங்களுக்கு நல்லது.


சிம்மம்


நீங்கள் ஒருவரோடு உணர்வுரீதியான உறவு வைத்திருப்பீர்கள். அல்லது அவரை சார்ந்து இருப்பீர்கள். அவர் உங்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து விலகி இருங்கள். உங்கள் தைரியத்தை தன்னம்பிக்கையை சக்தியை மேம்படுத்துங்கள்.


கன்னி


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தேவதைகளுக்கு உணர்த்த வேண்டிய நேரம் இது. உடனே அவர்கள் நீங்களும் மற்றவர்களும் உள்ளடக்கிய சூழ்நிலையை சரி செய்ய ஆரம்பிப்பார்கள். இந்த சரி செய்தல் நன்றாக அமைய சில விஷயங்களை நீங்கள் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.


துலாம்


உங்களது உள்ளுணர்வு மற்றும் உளவியல் திறன்கள் உங்களை சரியான திசையில் செலுத்துகின்றது ஆகவே நீங்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாகவே இருக்கும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்


விருச்சிகம்


உங்கள் பேஷனுக்கான புதிய சிந்தனைகள் உங்களுக்கு தோன்றலாம். ஒரு சிலருக்கு நேர்மாறாக புதிய மாறுபட்ட எண்ணங்கள் ஏற்படலாம். இப்போது செய்வதில் இருந்து அவை மாறுபடலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள்


தனுசு


உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்த பிரச்னை முடிவுக்கு வரலாம் அல்லது முடிவை நோக்கி நகரலாம். இப்போது நீங்கள் சுதந்திர பறவை. நீங்கள் உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு நகரலாம்.


மகரம்


உங்கள் இதயத்தை நம்புங்கள். அதன் அனுபவம் மற்றும் பக்குவத்தை உங்கள் வாழ்க்கை மற்றும் உறவுகளை கையாள விடுங்கள். நேர்மையான போலியற்ற உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்


கும்பம்


நீங்கள் மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த விஷயம் சீக்கிரமே உங்களை வந்தடையும். அதற்கான உங்கள் காத்திருப்பு, முயற்சி , அழுத்தங்கள் போன்றவை இன்றோடு முடிவடைகின்றன. இனிமேல் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் கொண்டாட்டங்கள்தான்!


மீனம்


சூழ்நிலைகளை பற்றி கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த ஆசீர்வாதங்களை பற்றி நினையுங்கள். இந்த தருணத்தை கடக்க அது உதவும்.


ஜோதிட பலனை கணித்தவர் astro ஆஷா ஷா astro


---


முடிவானது சிம்புவின் திருமணம்.. முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைகிறார்!


நயனும் ஷிவனும் நமக்கு கற்றுத் தரும் காதல் பாடங்கள் !


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.