logo
ADVERTISEMENT
home / Astrology
வெற்றி பயணத்தை மேற்கொள்ள இருக்கும் அந்த ராசி உங்களுடையதா

வெற்றி பயணத்தை மேற்கொள்ள இருக்கும் அந்த ராசி உங்களுடையதா

இன்று சனிக்கிழமை சப்தமி திதி திருவோண நட்சத்திரம் வைகாசி மாதம் 11ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

நீங்கள் பணியில் மற்றவர்களின் செயலை விமர்சிக்க வேண்டி வரலாம். உங்களுக்கு தெரியாமல் உங்கள் தீர்வுகள் கண்காணிக்க படுகின்றன. நீங்கள் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் தீவிரமாக பணி செய்வார்கள். உங்கள் உள்ளுணர்வை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை தூரத்து சொந்தங்களின் வருகையால் மகிழ்வாக நடக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்

ADVERTISEMENT

ரிஷபம்

வேலை சுறுசுறுப்பாக நடக்கும். அனைவர் கவனமும் உங்கள் மேலதான் இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவை கவனிப்பார்கள். உங்களை விமர்சிக்க சிலர் இருந்தாலும் உங்கள் வெற்றி பயணம் தடைபடாது. குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வயிறு உபாதைகள் வரலாம். அடுத்தவர் பிரச்னைக்கு உங்களை இழுப்பார்கள் அவர்களை விட்டு விலகி இருங்கள்.

மிதுனம்

வேலை உங்கள் கவனத்தை எடுத்து கொள்ளும். நிறைய meeting இருக்கலாம். மற்றவர்கள் பற்றி அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உடன் பணிபுரிபவர் உங்கள் உதவியை நாடலாம். அதிக வேலை நேரம் உங்கள் குடும்ப நேரத்தை ஈர்த்து கொள்ளும். ஆனாலும் நண்பர்களோடு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

ADVERTISEMENT

கடகம்

வேலை ஒரே மாதிரி இருக்கும். வாடிக்கையாளர் பக்க தாமதங்கள் இருக்கலாம். உங்களுக்கு எரிச்சல் வரலாம். ஆனால் குடும்ப உறுப்பினர் உங்களை அமைதிப்படுத்தி வேறொரு கோணம் பற்றி எடுத்து சொல்வார்கள். உங்கள் நெருங்கிய நண்பன் உடல்நிலை பற்றி கவலை படுவீர்கள்.

சிம்மம்

திடீரென்று உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். எங்கிருந்து தொடங்குவது எங்கே முடிப்பது என்று திணருவீர்கள். வேலை சுறுசுறுப்பாக நடக்கும். புதிய வேலைக்கான அடித்தளத்தை அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை சீராக இருக்காது. மனநிலை அவர்களுக்கு குறைவாக இருக்கும். அவர்களுக்கான இடத்தை கொடுங்கள்.

ADVERTISEMENT

கன்னி

காகித வேமற்றும்ாமதமாக முடியும் . அதை தவிர மற்ற எல்லாமே சாதகமாக அமையும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். புதியவர்கள் உங்களுடன் பணியாற்ற விரும்புவார்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக முடிவெடுங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்

துலாம்

அடுத்தவர் முடிவுகளால் நீங்கள் கார்னர் செய்யப்பட்டது போல உணர்வீர்கள் மூத்த பணியாளர்கள் புறக்கணிப்பது போல இருக்கலாம். உங்களை தளர்த்தி கொள்ள எது வேண்டுமானாலும் செ ுங்கள். பேச மட்டும் செய்யாதீர்கள். அதுவும் தவறாக புரிந்து கொள்ளப்படும். பணி அழுத்தத்தை மற்றவரிடம் வீட்டில் பகிர்வதால் அவர்கள் அனுசரணையாக நடப்பார்கள் .

ADVERTISEMENT

விருச்சிகம்

வேலை உங்களை பரபரப்பாக வைத்திருந்தாலும் அடுத்தவர் தொந்தரவால் நீங்கள் துன்பப்படுவீர்கள். செயல் நடக்க எதையும் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக நிலுவைப்பணிகளை முடியுங்கள். உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். இன்றைய மாலையை உங்களுக்கு ப்ரியமானவர்களுடன் செலவழிப்பீர்கள். வரும் நாட்களில் உங்கள் வேலைகளை நேர்த்தி செய்து கொள்ளுங்கள்.

தனுசு

வேலை நிலையாக இருக்கும். எல்லாவற்றையும் உங்களோடு தொடர்புபடுத்தி கொள்வதால் நீங்களாகவே ஸ்ட்ரெஸ் ஆவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உதவ மாட்டார்கள் என்பதால் உங்கள் கோபங்களை குறையுங்கள். குடும்ப நாடகம் தொடர்ந்து நடைபெறுவதால் உலர்ந்து போன உங்கள் மூளையை சுவிட்ச் ஆப் செய்ய வழி தேடுவீர்கள். நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் அதுவும் உடல் நலிவில் கொண்டு போய் விடும்.

ADVERTISEMENT

மகரம்

நிலையான வேலை. புதிய சிந்தனைகள் உபயோகத்திற்கு வர சில காலம் ஆகலாம். அருகில் இருப்பவர்கள் உங்கள் பார்வையை புரிந்து கொள்ளாததால் அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. பொறுமையோடு இருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கான இடத்தை கொடுங்கள். இது உங்களை பற்றியதல்ல அவர்களை பற்றியது ஆகவே நல்ல புரிதல் உடன் இருங்கள்.

கும்பம்

வேலை ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். வெளியில் இருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க நிலுவை வேலைகளை முடிக்க வேண்டி. வரும். கடைசி நேர அவசர கூட்டங்களை நடத்தி எதிர்கால பணிகள் பற்றி திட்டம் இடுவீர்கள். மனிதர்கள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதனால் நீங்கள் பின் வாங்க வேண்டாம். குடும்ப மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ADVERTISEMENT

மீனம்

வெளிக் காரணங்கள் காரணமாக வேலை தாமதமாக நடக்கும். கூட்டம் ஈமெயில் போன்ற எதாவது ஒன்றில் தாமதம் இருக்கும். ஆனால் அதே சமயம் எல்லாமே உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய ஐடியாக்களை கொண்டு வருவதில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். திடீரென பயணங்கள் அமையும் அல்லது குடும்ப ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஜோதிட பலனை கணித்தவர் astro ஆஷா ஷா astro

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

24 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT