இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும்? சரி பாருங்கள் ராசிபலனை !

இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும்? சரி பாருங்கள் ராசிபலனை !

இன்று வியாழக்கிழமை பஞ்சமி திதி பூராட நட்சத்திரம். வைகாசி மாதம் 9ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பாருங்கள்.மேஷம்


இன்று நீங்கள் பிற்பாடு பார்த்து கொள்ளலாம் என்று மீதம் வைத்திருந்த வேலைகளை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்னோக்கி நகர முடியாது. புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சிக்கல்கள் மூலம் ஆரம்பமாகலாம். உங்கள் முதுகை கவனியுங்கள். தசை பிடிப்பு போன்ற தொந்தரவு வரலாம். குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும் ஆனாலும் அதிக நேரம் தனிமையில் இருப்பீர்கள்.


ரிஷபம்


பணியில் தாமதங்கள் இருக்கும். உடன்பணி புரிபவர்களை கடுமையாக விமர்சித்து வேலை வாங்குவீர்கள். சமீபத்தில் செய்து முடித்த வேலைகளில் சிறு குறைகள் சரி செய்யப்படும். குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் இடம் வேண்டும் என்பார்கள். அவர்களை சார்ந்திருந்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். மனம் விட்டு பேச வேண்டும் என்றால் நண்பர்கள் இருக்கிறார்கள்.


மிதுனம்


வேலை கடுமையாக இருந்தாலும் பலன் தருவதாக இருக்காது.முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். தெளிவு வரும்வரை காத்திருங்கள்.நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் குடும்ப கவலைகள் உங்களை அழுத்தலாம்.அடுத்தவர் பிரச்னைகளை உங்கள் தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம்.


கடகம்


உங்கள் மனதில் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்.முடிக்கப்படாத வேலைகளை நினைத்து அதீத கற்பனை கொண்டு கவலைபடுவீர்கள். பணியில் மற்றவர்களுடனான உரசல்களை தவிர்க்கவும்.உடல்நிலை மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும்.குடும்பம் மற்றும் சமூக உறவுகள் வழக்கம் போல இருக்கும்.


சிம்மம்


பணி உங்கள் முழு கவனத்தையும் ஈர்க்கும். வேலையை அவசர அவசரமாக முடிக்கும் போது சிறு சிறு தவறுகள் நேர்ந்து விடலாம். கவனம்.குடும்ப உறுப்பினருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள்.அதிக நேரம் செலவழிப்பீர்கள். சமூக உறவுகள் நிலையானதாக இருக்கும்.


கன்னி


வேலை அற்புதமாக இருக்கும். தெளிவான மனம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும். உங்கள் பார்வைகள் அகலகமாகும்.வெளியே உங்கள் இலக்குகள் தெரிய வரும்.வயிறு பிரச்னை வரலாம். சரியான தூக்கம் இல்லாததால் மயக்கம் வரலாம். குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையை பார்ப்பார்கள். உங்கள் தோழமை உங்களுக்கு உதவுவார்கள்.


துலாம்


பணிகள் தாமதமாக இருக்கும். மற்றவர் வேலையை நீங்கள் பார்க்க வேண்டி வரலாம். அதிக கவனம் இழுக்கும் வேலையாக அது இருக்கும்.நேரத்துக்கு சாப்பிடுங்கள். உங்கள் துணையுடன் ஏற்பட்ட சங்கடத்தால் குடும்ப வாழ்க்கை குழப்பம் அடையும்.


விருச்சிகம்


பணியிடம் நன்றாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராஜெக்ட்கள் கைவசமாகும். அலுவலகத்துக்கு வெளியே உள்ள ஆட்களுடன் வேலை செய்யும்போது கவனம் வேண்டும்.உங்கள் துணையுடன் செய்யப்படும் கடைசி நேர திட்டங்கள் விளையாட்டாக முடியும். சூழ்நிலைகளை உங்கள் கட்டுக்குள் வைக்காமல் அதனோடு ஒத்து போங்கள்.


தனுசு


நீங்கள் அதிகமான கவனம் செலுத்த வேண்டிய நாள். போதுமான வேலைகள் இருந்தாலும் ஐடியாக்கள் கிடைக்காமல் திண்டாடுவீர்கள். யாரிடமாவது அறிவுரை கேளுங்கள். சமூக உறவுகள் சிக்கலாக இருக்கும். முக்கியமானவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.


மகரம்


பணியிடம் பிசியாக இருக்கும். உங்கள் திறமைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு நாளாக இருக்கும். தெளிவாக இருப்பதால் முடிவுகள் எடுக்க சிரமம் இருக்காது. உணவுகளில் சமநிலை கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறவு நெருக்கடியாக இருக்கும். வயதான ஒருவர் உங்களோடு உரசலாம். சமூக உறவுகளில் ஒருவரிடம் அறிவுரைக்காக தஞ்சமடைவீர்கள்.


கும்பம்


வேலை தாமதமாக இருந்தாலும் தடைபட்ட வேலைகள் முடிவுக்கு வரும். ஒரே இரவில் எல்லாம் நடந்து விடும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் உடன் இருக்கும் மூத்த குடும்பத்தாரிடம் பொறுமையோடு இருங்கள். ஓவர் ஆக்ஷன் அவரது மனநிலையை காயப்படுத்தலாம்.நண்பர்கள் உங்கள் வழிகாட்டுதலை நாடுவார்கள்


மீனம்


உங்கள் திட்டங்கள் உடையலாம். நிலுவையில் வேலைகளை முடிப்பதில் சமநிலை மாறி போகலாம். அலுவலக அழுத்தங்களை வீட்டுக்கு கொண்டு வராதீர்கள். வீட்டில் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசுவது உங்களுக்கு தெளிவை கொடுக்கும்.குடும்ப சிக்கல்களுக்கு வழி கிடைக்கும். பொறுமை கடைபிடிக்கவும்.


 


ஜோதிட பலனை கணித்தவர் astro ஆஷா ஷா astro


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.