பாதைகளை மாற்றி அமைக்க வேண்டிய அந்த ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் ராசிபலனை !

பாதைகளை மாற்றி அமைக்க வேண்டிய அந்த ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் ராசிபலனை !

இன்று சனிக்கிழமை விசாக நட்சத்திரம் பௌர்ணமி. புத்த பூர்ணிமா. வைகாசி மாதம் 4ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள் astroமேஷம்


குழந்தை மனநிலையை நினைத்துபாருங்கள். எதையும் நினைவில் வைத்து செயல்படுவதில்லை. அனைத்தையும் மறந்து சந்தோஷமாக இருக்கின்றன. இந்த மனநிலைக்கு மீண்டும் சென்று உங்கள் கனவுகளை அடைய முயற்சி செய்யுங்கள்


ரிஷபம்


உங்களுக்கு நெருங்கிய நபர் உங்களுடன் சண்டையிட்ட தேவையில்லாத டிராமா செய்வார். இதை நல்லது என்று விட்டு விடுங்கள். நம்பிக்கையில்லாத மனிதரை நம்பவேண்டாம்


மிதுனம்


நீங்கள் ஒரு பதிலை குறிப்பிட்ட நபரிடம் இருந்து எதிர்பார்க்கின்றீர். திருப்தி அளிக்காத பதிலை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மாறாக அவரை ஊக்கப்படுத்துங்கள்


கடகம்


மற்றவர் பின்னால் ஒளிந்துக்கொண்டு ஓட முயற்சி செய்யாதீர்கள். கீழே விழுந்தால் நீங்கள் தான் எழுந்திருக்க வேண்டும். யாரையும் நம்பவேண்டாம். சொந்த உழைப்பில் முயற்சி செய்து பாருங்கள்


சிம்மம்


உங்கள் உள்ளுணர்வு அடிப்படையில் நீங்கள் பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறீர்கள், தவறு எதுவும் இல்லை. இருப்பினும் இந்த பாதையில் உங்களுக்கு உதவ சிலர் தேவைப்படலாம் மற்றும் அவர்களுக்கு உண்மைகளும் தேவைப்படலாம். அதிக நம்பிக்கை வையுங்கள்


கன்னி


உங்கள் பாதைகளை நீங்கள் மாற்றி அமைக்க முயற்சி செய்யலாம். 100% உங்கள் முடிவு தப்பானதாக இருக்கும் என்றில்லை. இனி கடுமையான சவால்கள் இருக்காது


துலாம்


தற்போது நீங்கள் செய்யும் பணியில் சிலர் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக நீங்கள் உணருவீர்கள். ஆனால் இந்த நிலை கட்டாயம் மாறலாம்.


விருச்சிகம்


எல்லா துக்கத்தையும் ரகசியம் போன்று மனதிலே வைத்திருக்க முடியாது. அது உங்களை மிகவும் கஷ்டப்படுத்தும். உங்கள் துக்கங்கள் எல்லாவற்றையும் காகிதத்தில் எழுதி தூக்கி யெறிந்துவிடுங்கள்


தனுசு


அந்த நபர் உங்களை விட்டு சென்றது உங்கள் குற்றம் இல்லை. அது முழுக்க முழுக்க அந்த நபருடையது. உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்ள வேண்டாம்


மகரம்


செய்ய முடியாத என நினைத்து உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படியல்ல. நீங்கள் உண்மையாய் இருப்பதற்கான பலனை கட்டாயம் அடைவீர்கள்


கும்பம்


நீங்கள் ஒரு மோசமான மனநிலையில் இருக்கலாம். ஆனால் உங்களின் இந்த நிலைக்கு உங்கள் விதிதான் காரணம். விதியை மாற்றி எழுத முயற்சி செய்யாதீர்கள். இந்த சூழ்நிலை நிறந்தரம் அல்ல சீ்க்கிரம் மாறும்


மீனம்


பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள். அது நல்லது தான். ஆனால் சின்ன சின்ன விடயங்களுக்காக சோர்ந்து போகாதீர்கள். அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புங்கள்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.