உங்கள் இன்றைய ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள் !

உங்கள் இன்றைய ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள் !

இன்று திங்கள் கிழமை நவமி திதி மக நட்சத்திரம். சித்திரை மாதம் 30ம் தேதி . இன்றைக்கு உங்கள் ராசி பலன் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.மேஷம்


நீங்கள் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைஎதன் பொருட்டும் அனுமதிக்காதீர்கள்.வேலையில் புதிய ஆட்களை நியமிக்க வேண்டி வரலாம்.எதற்கும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.மற்றவர்களின் எமோஷனல் டிராமாவில் நீங்கள் உள்ளிழுக்கப்படுவீர்கள். பங்குதாரர் உடன் உரசலை தவிருங்கள். நாளின் இறுதியில் போதுமடா சாமி என்று உங்களுக்கு தோன்றலாம்.


ரிஷபம்


உங்கள் சிந்தனை மற்றும் படைப்புத்திறனை நீங்கள் இழப்பதால் வேலை கொஞ்சம் மெதுவாக நடக்கலாம்.உங்கள் மூளையை கசக்கி கடுமையாக யோசித்தால் புதிய சிந்தனைகள் உதிக்கலாம்.தூக்க நேரங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் நல்வாழ்க்கை பற்றி குடும்பத்தினர் கவலைப்படுவார்கள்.அவர்களை மதிப்பது நல்லது. பழைய நண்பர்களுடன் சேர்வீர்கள்


மிதுனம்


வேலை நன்றாக இருக்கும். பணம் வர தாமதம் ஆனாலும் வந்து விடும் வாடிக்கையாளரை சந்தேகிக்க வேண்டாம். புதிய பங்குதாரர் உடன் இணைய வழி ஏற்படும்.வியாபாரம் அல்லது கலை தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த நாள் இனிய நாள்.குடும்ப உறுப்பினர் உங்கள் அறிவுரையை கேட்பார்கள்.


கடகம்


வேலை வேகம் எடுக்கும் ஆனாலும் உடன் பணிபுரிபவர்களோடு உரசலை தவிர்த்து விடுங்கள். தாமதத்திற்காக கோபப்படுவீர்கள் ஆனால் அது அவர்கள் தவறல்ல. உறவுகளில் உங்கள் பக்க தவறுகளை உணர்வது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.உங்களை புரிந்து கொள்ளும் ஒருவரிடம் மனம் விட்டு பேசுவது உங்களுக்கு நன்மை தரும்.


சிம்மம்


உங்கள் சந்திப்புகள் மற்றும் உங்களுக்கான பணி ஒதுக்கீடுகள் எல்லாமே எதிர்பார்த்தபடி நடக்கும். வேலை வேகம் எடுக்கும்.புதிய நபருடன் இணைவது செயல்களில் வெற்றி தரும்.குடும்ப உறவு சுமுகமாக இருக்கும். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினரின் அறிவுரையும் கிடைக்கும்.நண்பர்கள் தொடர்பு கொள்ள நினைத்தாலும் வேலை காரணமாக நீங்கள் அவருடன் செல்ல இயலாது.


கன்னி


வேலை அதே போலவே இருக்கும். இன்றைய நாள் சோர்வாக போகலாம். பங்குதாரர் உடன் உரசல்களை தவிர்ப்பது நல்லது.உண்ணும் உணவில் கவனமாக இருங்கள். உங்கள் எரிச்சல்களை குடும்பத்தினர் காட்டாமல் இருக்க முயற்சி எடுங்கள். பின்னால் வருத்தம் வராமல் இருக்க இது உதவும்.


துலாம்


வேலை ஒரே மாதிரியாக போகலாம். உங்கள் உடன் பணிபுரிவர் உங்கள் மனதில் இருக்கும் கடந்த கால காயங்களை ஆற்றலாம்.வேலையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இன்று அதற்கான நாள். மற்றவர்களை இதன்பொருட்டு சந்திப்பதற்கு ஏற்ற நாள்.கண்களையும் வயிற்றையும் கவனிக்கவும். பங்குதாரர் உடன் உரசலை தவிருங்கள்.


விருச்சிகம்


வேலை தேங்கி கிடைக்கும். காலக்கெடுக்களை நீங்கள் முடித்தாக வேண்டிய அழுத்தங்கள் உங்களுக்கு ஏற்படும். இதனால் வேலை நேரம் அதிகம் ஆகும். துணையின் மனநலம் கவனிக்கப்பட வேண்டும். ஒதுக்கப்படுவதாக அவர் நினைக்க நேரிடலாம்.எப்போதும் மனிதர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். குடும்பத்தையும் வேலையையும் பேலன்ஸ் செய்ய கற்று கொள்ளுங்கள்


தனுசு


வேலை உற்சாகமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல குறிப்புகள் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு இந்த நாள் பலன்களை அள்ளி தரும். உடன் பணிபுரிபவருடன் உரசல் தவிர்க்கவும். உணவு சாப்பிடும் போது கவனமாக இருக்கவும். குடும்பம் மற்றும் நண்பர்கள் உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்வார்கள்.


மகரம்


பணவரவுகள் தாமதமாக நடப்பதால் எரிச்சல் அடைவீர்கள். வேலையை நிறுத்தி வைப்பீர்கள்.ஒரு வாடிக்கையாளர் உங்களை அதிகாரம் செய்யலாம். ஆனால் நீங்கள் அமைதி காக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் குழப்பங்களை அது ஏற்படுத்தும்.குடும்ப சூழ்நிலைகள் நெருக்கடி தரும். அவர்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டி வரலாம்.நீண்ட நாள் கழித்து முக்கிய நபர் ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் அறிவுரைக்காக உங்கள் நண்பர்கள் காத்திருப்பார்கள்.


கும்பம்


இன்று வேலை உங்களை அதிகம் வேலை வாங்கும். அதனால் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க நேரிடும்.முக்கியமான குடும்ப சந்திப்புகளை நீங்கள் இழப்பீர்கள். குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்களை சிக்கலில் சிக்க விட்டு மிகவும் சோதிப்பார். தன்னம்பிக்கை குறையலாம்.இந்த நாள் முடியட்டும். நண்பருடன் பேசுவது ஆறுதல் தரும்.


மீனம்


வேலை கொஞ்சம் பெட்டராக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் ரிதம் உடன் ஒன்றி வேலை செய்வார்கள். உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒன்றாக வரிசைப்படுத்த வேண்டி வரலாம்.கண்களை கவனியுங்கள். குடும்ப சூழ்நிலை நெருக்கடியாக இருந்தாலும் நண்பர்கள் ஆறுதல் தருவார்கள்.


ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.


---                       


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                  


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.