logo
ADVERTISEMENT
home / Astrology
அதிகமாக காதல்வயப்பட போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

அதிகமாக காதல்வயப்பட போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா ! சரிபாருங்கள் உங்கள் ராசிபலனை !

இன்று வியாழ கிழமை பஞ்சமி திதி திருவாதிரை நட்சத்திரம் சித்திரை மாதம் 26ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

நீங்கள் செய்த தவறுகள் மற்றும் பிழைகளால் வேலையில் கால தாமதம் ஏற்படலாம். மற்றவர்கள் மீது பழி போட வேண்டாம். புதிய நபர்களுடன் புதிதாக உங்கள் பணியை தொடங்குங்கள். குடும்பத்தை போன்றே அலுவல பணியிலும் கவனத்தை செலுத்துங்கள்.

ரிஷபம்

ADVERTISEMENT

உங்களை சுற்றி குழப்பமான ஆட்கள் இருந்தாலும் நீங்கள் நினைத்த காரியம் திட்டமிட்ட படி சரியாக நிறைவேறும். குடும்ப சூழ்நிலை எப்போதும் போல சுமுகமாக இருக்கும். பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்

வேலையில் முன்னேற்றம் இருந்தாலும் சுற்றி இருக்கும் நபர்களால் அதிக இன்னல்கள் ஏற்படும். குறை சொல்பவர்களை பற்றி கவலை பட வேண்டாம். உங்கள் பணியில் உள்ள பொறுப்புகளை மட்டும் பாருங்கள். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கடகம்

ADVERTISEMENT

வேலையில் தாமதம் ஏற்பட்டாலும் அலுவல் சார்ந்த பணிகள் விரைவில் முடியும். உங்கள் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். நல்ல நண்பர்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீணான வார்த்தைகளை பேச வேண்டாம்.

சிம்மம்

நடுநிலையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கடந்த கால கசப்பான அனுபவத்தை வைத்து மனதில் தேவையில்லாத கவலைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் தைரியமாக பழகுங்கள். தேவையில்லாத கவலைக்கு மனதை தள்ள வேண்டாம்.

கன்னி

ADVERTISEMENT

அலுவலகத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மறு சீராய்வு செய்வது நல்லது. இதற்காக யார் மீது நீங்கள் கோபப்பட வேண்டாம். பணிபுரியும் ஆட்களின் ஆதரவு இன்று அதிகம் தேவைப்படும். குழப்பமான சூழலில் தான் உங்கள் திறமை வெளிப்படும்.

துலாம்

பணியில் சோர்வு ஏற்பட்டாலும் எதிர்பார்க்காத வரவுகள் இன்று கைகூடும். சோர்வின்றி சுறுசுறுப்பாக இருங்கள். கடைசி நேர திட்டமிடல் நல்ல பலனை இன்று பெற்று தரும்

விருச்சிகம்

ADVERTISEMENT

திட்டமிட்ட படி சரியான பாதையில் செல்ல வேண்டிய நாள் இது. கவனமாக வேலை செய்யுங்கள். சிறு கவன சிதறல்கள் கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். வாழ்க்கையில் முக்கியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு இன்று ஏற்படலாம்.

தனுசு

சீரான வாழ்க்கை மிகப்பெரிய கிரீடத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். சரியான பாதையில் செல்லுங்கள். அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வீணான வார்த்தைகளை அலப்ப வேண்டாம்

மகரம்

ADVERTISEMENT

உங்கள் சாதணைகளை குறித்து நீங்களே பெறுமைபடக் கூடிய நாள் இது. மிக தெளிவாக இருப்பது நல்லது. அதிக பணி சுமை காரணமாக குடும்பத்தில் நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்படும். கவலை வேண்டாம்.

கும்பம்

நீங்கள் நினைத்த படி எல்லா காரியமும் வாய்க்கும் என்று சொல்ல முடியாது அதற்கான நாள் இன்று கிடையாது. வேலையில் கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்யும். பணி காரணமாக குடும்பத்தை விட்டு பிரியக்கூடிய சூழல் ஏற்படும். ஆனால் இந்த பிரிவு உங்கள் காதலை அதிகப்படுத்தும்

மீனம்

ADVERTISEMENT

மனதில் சில எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பதால் பணியில் அதிக கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். பணப்பிரச்சணையால் சோர்வடைய வேண்டாம். சீக்கிரம் சரியாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

08 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT